Lifestyle Tips: உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளவும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கும் தினமும் எவ்வளவு நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இதில் காணலாம்.
Lifestyle Tips: உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளவும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கும் தினமும் எவ்வளவு நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இதில் காணலாம்.உடல்நல ரீதியாகவும், மனநல ரீதியாகவும் இது உங்களுக்கு உதவும்.
ஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம் - அசரவைக்கும் அழகு...!மயிலாகவே மாறிய 'சின்ன மயிலு...' ஆளை மயக்கும் ஆடையில் ஜான்வி - காஸ்ட்யூம் என்ன தெரியுமா?6 ராசிகளுக்கு கவலை தரும் ஆனி மாதத்தில் கடக சுக்கிரன்! நட்பும் பகையும் எதிரும் புதிரும்...உடல் ஆரோக்கியமாக இருக்கவும், வாழ்க்கைமுறையில் எவ்வித சிக்கலும் இல்லாமல் இருக்கவும் உடற்பயிற்கு மேற்கொள்வது ஒரு முக்கிய விஷயமாகும். சில உடற்பயிற்சி உபகரணங்களை வீட்டில் வைத்திருப்பார்கள், அதனால் வீட்டிலேயே உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். ஒருசில பேர் ஜிம்மிற்கு சென்று தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுவார்கள். மேலும், உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் பலரும் காலையில் அல்லது மாலையில் நடைப்பயிற்சியையும் மேற்கொள்வார்கள். மற்ற சிறு சிறு உடற்பயிற்சியுடன் நடைபயிற்சியை மட்டும் செய்யும் சிலரையும் உங்களால் பார்க்க முடியும். ஒரு சிலர் காலையில் வாக்கிங் செல்ல வீட்டில் இருந்து பல நிமிடங்கள் நடந்துசென்று வருவார்கள். இப்போது ஸ்மார்ட் யுகம் என்பதால் எவ்வளவு கி.மீ., எவ்வளவு ஸ்டெப்ஸ் என்பதை எளிதாக தெரிந்துகொள்ள முடிகிறது. அதனை கணக்கீடு செய்தும் சிலர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.பழக்கப்பட்டவர்களுக்கும் சரி, புதிதாக நடைப்பயிற்சி செய்வோருக்கும் சரி எவ்வளவு தூரம் நடந்தால் நல்லது என்பது பெரியளவில் தெரியாது. அவரவர்களுக்கு என்று சில இலக்குகளை வைத்திருப்பார்கள். அதை நோக்கியே அவர்கள் தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொள்வார்கள். அந்த வகையில், தினமும் எவ்வளவு தூரம் அல்லது எவ்வளவு நிமிடம் நடந்தால் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.உங்களின் வாழ்க்கைமுறை, உடற்தகுதி, நீங்கள் அடைய விரும்பும் உடல் சார்ந்த இலக்குகள் ஆகியவையே ஒருநாளுக்கு எவ்வளவு தூரம் நடக்கும் என வேண்டும் என்பதை முடிவு செய்யும் எனலாம். மிகுந்த வேகத்துடன் இல்லாமல் நிதானம் கலந்த சிறு வேகத்துடன் வாரத்தின் பல நாள்களில் சுமார் 30 நிமிடங்கள் வரை நடப்பது பொதுவாக ஃபிட்னஸை அளிக்கும் எனலாம். அதாவது இதன்மூலம் வாரத்திற்கு 150 நிமிடங்கள் என நீங்கள் வைத்துக்கொள்ளலாம். இது அமெரிக்காவின் இதய கூட்டமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் ஆகியவற்றின் வழிமுறைகளும் வாரம் 150 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்வதையே பரிந்துரைக்கிறது. இதன்மூலம், இதயம் சார்ந்த நோய்கள் தாக்கும் அபாயம் குறைக்கப்படுகிறது.நீங்கள் புதிதாக நடைப்பயிற்சி மேற்கொள்கிறவர் எனில் முதலில் 20 - 30 நிமிடங்களுக்கு மெதுவாக நடந்து பழகுங்கள். அதன்பின் நேரத்தையும் வேகத்தையும் சிறிது சிறிதாக கூட்டுவதன் மூலம் காயம் ஏற்படுவதை தடுக்க முடியும். பழக்கப்பட்டவர்கள் ஒரு நீண்ட நடைபயிற்சியையும் மேற்கொள்ளலாம். குறைவான இடைவெளியுடன் 60 நிமிடங்கள் வரை சற்று வேகத்தை அதிகரித்து நடக்கலாம். அதாவது, வாரம் 300 நிமிடங்கள் நடந்தால் அதன் மூலம் கிடைக்கும் உடல்நல நன்மைகள் என்கிறது அமெரிக்காவின் இதயம் கூட்டமைப்பு. இருப்பினும் இது தனிப்பட்ட நபர்களின் விருப்பமே ஆகும். எவ்வளவு தூரம் அல்லது எவ்வளவு நிமிடங்கள் நடக்கலாம் என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதுவும் மெதுவாக நடக்கலாமா, வேகமாக நடக்கலாமா என்பதும் உங்களின் உடற்தகுதி சார்ந்ததாகும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் இதய துடிப்பு சீராக இருக்கும், அதனால் ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். ரத்த அழுத்தம் குறையும், கொலஸ்ட்ரால் அளவும் குறையும்.நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்புபவர் என்றால் நடைபயிற்சியின் மூலம் கலோரிகளை குறைப்பீர்கள். இதனால் உடல் எடை குறையலாம் அல்லது உடல் எடை ஏறாமல் இருக்கலாம். உடல் எடை குறைப்புக்கு உணவுமுறை கட்டுப்பாடும் தேவை. நடைபயிற்சி கால் தசைகளை வலிமையாக்கும், உடலின் நெகிழ்வுத்தன்மையை கூட்டும். என்டோர்பின்ஸ் உங்களின் உடலில் அதிகம் வெளியாகி மன அழுத்தம், கவலை ஆகியவை நீங்கள் மன அமைதி கிடைக்கும் தினமும் பல மணி நேரங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு நடைபயிற்சி அவசியம். உடல் உழைப்பு இல்லாத நபர்களும் நடைபயிற்சியை மேற்கொள்ளலாம். சிற்சில உடற்பயிற்சிகளுடன் நடைபயிற்சி மேற்கொண்டால் மட்டுமே முழு பலனும் கிடைக்கும், காயங்களும் தவிர்க்கப்படும். நடைபயிற்சியின் போது சில தவறுகளை நடக்கும், அதை திருத்தி நேர்த்தியாக நடப்பது பலனை அதிகரிக்கும். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Armstrongஅஞ்சலி நடிப்பில் புதிய சீரிஸ் 'பஹிஷ்கரனா' .. வரும் 19 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமிங்இதுவே லாஸ்ட் சான்ஸ்... இந்த வீரர் சொதப்பினால் இனி வெளியே தான் - தப்பிக்குமா இந்தியா?Neha Dhupiaகுப்த நவராத்திரியும் செவ்வாய்ப் பெயர்ச்சியும் ஏற்படுத்தும் ஜாதகரீதியிலான மாற்றங்கள்!
Walk Benefits Walk Health Benefits Of Walking Daily Walking Limit Daily Walking Cardiovascular Health Weight Loss Tips Walking Walking For Weight Loss Walking For Belly Fat Reduction Benefits Of Walking Health Benefits Of Walking Walking Benefits Walking Health Benefits நடைப்பயிற்சி நடைபயிற்சி உடல் எடை குறைய தொப்பை கொழுப்பு உடற்பயிற்சி மூட்டு வலி Can You Lose Belly Fat By Walking How Much Should I Walk A Day To Lose Weight Can I Lose Weight By Walking 30 Minutes Everyday Is It Better To Walk Faster Or Longer To Lose Wei
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!
Read more »
யார் யார் இரத்த தானம் செய்யலாம்? இரத்த தானம் செய்வதற்கு முன் இதனை தெரிஞ்சுக்கோங்க!World Blood Donor Day: இரத்த தானம் செய்வது உடலுக்கும் மனதிற்கும் நல்லது என்று கூறப்படுகிறது. இரத்த தானம் செய்வதற்கு முன்பு சில விஷயங்களை மனதில் வைத்து கொள்வது நல்லது.
Read more »
சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!
Read more »
தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு... 600 ரூபாய் செலவழித்தால் போதும்..! முழு விவரம்பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தினமும் 5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை வெறும் 600 ரூபாய்க்கும் குறைவான விலையில் நீங்கள் பெறலாம்.
Read more »
ஞாபக மறதி கேசா நீங்க? ‘இதை’ செய்தால் எதுவும் மறக்காது!ஞாபக மறதி கேசா நீங்க? ‘இதை’ செய்தால் எதுவும் மறக்காது!
Read more »
தினமும் 1 ஆப்பில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 மேஜிக் நன்மைகள்!தினமும் 1 ஆப்பில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 மேஜிக் நன்மைகள்!
Read more »
