மிரட்டும் நிபா வைரஸ்... பழங்கள் மூலம் பரவுவதாக அதிர்ச்சித் தகவல்..!!

Nipah Virus In Tamilnadu News

மிரட்டும் நிபா வைரஸ்... பழங்கள் மூலம் பரவுவதாக அதிர்ச்சித் தகவல்..!!
Nipah VirusNipah Virus Latest News In TamilNipah Virus
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 212 sec. here
  • 38 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 203%
  • Publisher: 63%

கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் மக்கள் மனதில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய வருகிறது. பழ வெளவால்களால் பரவும் இந்த நோய், அதிக அளவில் இறப்பு விகிதத்தை கொண்டுள்ளதால், பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

கேரளாவின் மலப்புரத்தில் சமீபத்தில் பழ வௌவால் மூலம் தொற்றுக்குள்ளான பிளம் பழத்தை சாப்பிட்ட 14 வயது சிறுவன் வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.2018-ம் ஆண்டு கேரளாவில் இந்த வைரஸால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

Jason SanjayOld Pension Scheme7th pay commissionVirat Kohliகேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் மக்கள் மனதில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய வருகிறது. பழ வெளவால்களால் பரவும் இந்த நோய், அதிக அளவில் இறப்பு விகிதத்தை கொண்டுள்ளதால், பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவின் மலப்புரத்தில் சமீபத்தில் பழ வௌவால் மூலம் தொற்றுக்குள்ளான பிளம் பழத்தை சாப்பிட்ட 14 வயது சிறுவன் வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழம் வௌவால்களால் மாசுபட்ட பழங்கள் மூலம் நிபா வைரஸ் பரவுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது.புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் நடத்திய ஆய்வுகள் மூலம் கோழிக்கோடு போன்ற பகுதிகளில் உள்ள பழ வெளவால்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் நிபா வைரஸ் ஆன்டிபாடிகளைக் கண்டறிந்துள்ளது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட பழ வெளவால்கள் உமிழ்நீர், சிறுநீர் மற்றும் மலம் ஆகியவற்றில் வைரஸை வெளியேற்றும். இவை பழங்களுடன் தொடர்பு கொள்ளும்போது, ​​அந்த கழிவுகள் உடலுக்குள் செல்லும் போது, மனிதர்களுக்கு வைரஸ் பரவுகிறது. சமீபத்திய மலப்புரம் வழக்கில் நிபா வைரஸினால் பாதிக்கபப்ட்ட சிறுவன் பழம் வௌவால்களுக்கு மிகவும் பிடித்தமான பிளம் பழத்தை உட்கொண்டதால், அவனுக்கு தொற்று ஏற்பட்டது. மனிதர்கள் தவிர பாதிக்கப்பட்ட பழ வெளவால்கள் பன்றிகள், நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற பிற விலங்குகளுக்கும் வைரஸை அனுப்பலாம். பின்னர் இவைகளிலன் மூலம் நிபா வைரஸ் மனிதர்களுக்கு மேலும் பரவலாம். 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கோழிக்கோட்டில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.வைரஸ் மனிதர்களைப் பாதித்த மனிதர்களுக்கு காய்ச்சல், தலைவலி, தலைச்சுற்றல் உள்ளிட்ட கடுமையான சுவாச மற்றும் நரம்பியல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். கடுமையான சந்தர்ப்பங்களில், மூளையழற்சி கோமா அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும். நிபா வைரஸ் நோய்த்தொற்றுகளுடன் தொடர்பு ஏற்பட்டால் ஏற்படும் இறப்பு விகிதம் தொற்றின் தீவிரத்தை பொறுத்து, 40% முதல் 75% என்ற அளவில் உள்ளது.பழம் வெளவால்களால் ஏற்படும் குறிப்பிடத்தக்க ஆபத்தைக் கருத்தில் கொண்டு, நிபா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.2. எப்போதும் பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு உப்பு சேர்த்த வெதுவெதுபான நீரில் நன்கு கழுவவும்.4. வௌவால்கள் அதிகம் இடங்களில் பழங்களை திறந்த நிலையில் வைப்பதைத் தவிர்க்கவும்.6. பழ வெளவால்கள் இருக்கும் பகுதிகளுக்கு செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகள் செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும். இதன் மூலம் பிற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம். கேரளாவில் நிஃபா வைரஸ் பரவலால், கேரளாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆபத்தான நிஃபா வைரஸ் பரவுவதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நிபா வைரஸ் பாதிப்பு உள்ள இடங்களை தனிமைப்படுத்த ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழக எல்லையோரப் பகுதிகளில் மாநில சுகாதாரத் துறையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். கேரளாவை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சிவந்துபோதல், மூளைக்காய்ச்சல், மயக்கம் போன்ற அறிகுறிகளுடன் யாராவது வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 17 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அதன் முடிவுகள் வைரஸ் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் கேரளா சுகாதார துறை தெரிவித்துள்ளது. நிஃபா வைரஸ் பரவல் முதன்முதலில் 1999 ஆம் கண்டறியப்பட்டது. ஆனால் அதற்கு தடுப்பூசி இல்லை. 2018-ம் ஆண்டு கேரளாவில் இந்த வைரஸால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில், கேரளாவில் மீண்டும் நிஃபா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு சிறப்பு மருத்துவக் குழுவை கேரளாவுக்கு அனுப்பியுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில்... இனி ஒரு மணிநேரத்தில் பெங்களூரு போகலாம் - முழு விவரம்பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த பெரிய கோலிவுட் ஸ்டார்! யார் தெரியுமா?லக்னோவை விட்டு வெளியேறும் கேஎல் ராகுல்! ஏலத்தில் குறிவைக்கும் 3 அணிகள்!சிலிண்டர் விலை, ஐடிஆர், கூகுள் மேப்ஸ்....: ஜூலை 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேEPS: பணி ஓய்வுக்கு பிறகு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் தெரியுமா? முழு கணக்கீடு இதோ

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Nipah Virus Nipah Virus Latest News In Tamil Nipah Virus How To Prevent Nipah Virus Infection Kerala Nipah Virus Nipah Virus Kerala Kerala Safety Measures Kerala 14 Year Old Boy Died Nipah Virus Symptoms Nipah Virus Latest News Nipah Virus Boy Died Nipah Virus Tamilnadu நிபா வைரஸ் நிபா வைரஸ் மரணம் நிபா வைரஸ் பாதுகாப்பு நிபா வைரஸ் தொற்று நிபா வைரஸ் எப்படி ஏற்படுகிறது நிபா வைரஸ் கேரளா நிபா வைரஸ் தமிழ்நாடு Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

மின்சார ஷாக் அடித்தால்... செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்..!மின்சார ஷாக் அடித்தால்... செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்..!மின்சாரம் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளும் வசதிகளும் ஏராளம். ஆனால், மின்சாரத்தையும் மின்கருவிகளையும் அலட்சியமாகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தினால், அவை மூலம் உண்டாகும் ஆபத்துகளும் அதிகம்.
Read more »

இரவில் பசித்தாலும் இந்த பழங்களை சாப்பிட வேண்டாம்!இரவில் பசித்தாலும் இந்த பழங்களை சாப்பிட வேண்டாம்!பழங்கள் செரிமானத்திற்கு அதிகம் உதவுகிறது. மேலும் மலச்சிக்கலை தடுக்கிறது. ஆனாலும் இரவில் பழங்கள் சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Read more »

ITR Filing: வருமான வரி செலுத்தும் நபரா நீங்கள்? வங்கிகளின் இந்த பட்டியல் உங்களுக்கு அவசியம்!!ITR Filing: வருமான வரி செலுத்தும் நபரா நீங்கள்? வங்கிகளின் இந்த பட்டியல் உங்களுக்கு அவசியம்!!ITR Filing: வருமான வரித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட 28 வங்கிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் தொகையை செலுத்தலாம்.
Read more »

பெகாசஸ் மூலம் மீண்டும் உளவு பார்க்கிறார் பிரதமர் நரேந்திர மோடி - காங்கிரஸ் தலைவர் பகீர் குற்றச்சாட்டுபெகாசஸ் மூலம் மீண்டும் உளவு பார்க்கிறார் பிரதமர் நரேந்திர மோடி - காங்கிரஸ் தலைவர் பகீர் குற்றச்சாட்டுKC Venugopal, Pegasus spyware : பெகாசஸ் மூலம் மீண்டும் காங்கிரஸ் தலைவர்கள் உளவுபார்க்கப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரான கேசி வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.
Read more »

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7 உலர் பழங்கள்! கண்டிப்பா சாப்பிடுங்க..நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7 உலர் பழங்கள்! கண்டிப்பா சாப்பிடுங்க..நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7 உலர் பழங்கள்! கண்டிப்பா சாப்பிடுங்க..
Read more »

நிபா வைரஸிற்கு 14 வயது சிறுவன் உயிரிழப்பு! இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்!நிபா வைரஸிற்கு 14 வயது சிறுவன் உயிரிழப்பு! இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்!கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த 214 பேர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Read more »



Render Time: 2026-04-02 18:53:02