ஐபிஎல் 2026 தொடரில் 300 ரன்களை அடிக்கும் திறன்கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவன் மற்றும் இம்பாக்ட் வீரர்களின் ஆப்ஷன்கள்
IPL 2026 SRH : ஐபிஎல் 2026 தொடரில் 300 ரன்களை அடிக்கும் திறன்கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவன் மற்றும் இம்பாக்ட் வீரர்களின் ஆப்ஷன்களை இங்கு காணலாம்.ஆனால், அவருக்கு மாற்று வீரர் யார்.?இந்தியாவின் டாப் 7 இளம் பணக்காரர்கள்.
IPL 2026 SRH: ஐபிஎல் 2026 தொடரில் 300 ரன்களை அடிக்கும் திறன்கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவன் மற்றும் இம்பாக்ட் வீரர்களின் ஆப்ஷன்களை இங்கு காணலாம்.ஆனால், அவருக்கு மாற்று வீரர் யார்...?இந்தியாவின் டாப் 7 இளம் பணக்காரர்கள்.. முதல் இடம் பிடித்த தமிழர்! யார் தெரியுமா?ரேஷன் கார்டு தாரர்களுக்கு குட் நியூஸ்! பொங்கல் பரிசு கிடைக்கும் தேதி...! ஐபிஎல் 2026 சீசன் இன்னும் மூன்று மாதங்களில் தொடங்க இருக்கிறது. ஜனவரியில் இந்தியா - நியூசிலாந்து ஓடிஐ, டி20ஐ தொடர், பிப்ரவரி - மார்ச் மாதங்களில் ஐசிசி டி20 உலகக் கோப்பை, மார்ச் இறுதியில் ஐபிஎல் தொடர் என அடுத்த ஐந்து மாதங்களில் இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாதான்.எம்எஸ் தோனியின் கடைசி சீசன் என சொல்லப்பட்டிருப்பதாலும், பல அணிகள் முக்கிய வீரர்களை எடுத்திருப்பதாலும் வரும் 2026 ஐபிஎல் சீசனுக்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. 10 அணிகளும் பலமாக இருந்தாலும் கூட, ஒரு இன்னிங்ஸில் 300 ரன்களை அடிக்கக் கூடிய திறன் ஒரே ஒரு அணிக்குதான் இருக்கிறது. வேறு யாரு, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிதான் அது.கடந்த இரண்டு சீசன்களிலும் 300 ரன்களை நெருங்கினாலும் இந்த முறை அந்த சாதனையை படைக்க முழு படையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் வந்து சேர்ந்திருக்கிறது. அந்த வகையில், ஐபிஎல் 2026 சீசனில் 300 ரன்களை அடிக்கக் கூடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதையும், அவர்களின் இம்பாக்ட் வீரர்கள் ஆப்ஷனில் யார் யார் இருப்பார்கள் என்பதையும் இங்கு காணலாம்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2012ஆம் ஆண்டில் முதல்முதலாக ஐபிஎல் தொடரில் விளையாடியது. 2016ஆம் ஆண்டில் அந்த அணி டேவிட் வார்னர் தலைமையில் கோப்பையை வென்றது. 2018இல் கேன் வில்லியம்சன் தலைமையில் இறுதிப்போட்டி வரை வந்து சிஎஸ்கேவிடம் வீழ்ந்தது. அதன்பின் தொடர்ச்சியாக சொதப்பி வந்த ஹைதராபாத் அணி, ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் ரஜினி பேசியதற்கு பின் தலைகீழாக மாறிவிட்டது. 2024 ஐபிஎல் மினி ஏலத்தில் டிராவிஸ் ஹெட்டை ரூ.6.8 கோடிக்கு சிஎஸ்கே உடன் சண்டை போட்டு சன்ரைசர்ஸ் தூக்கியது. அதே ஏலத்தில் பாட் கம்மின்ஸை ரூ.20.5 கோடிக்கு காவ்யா மாறன் எடுத்தார். ஏற்கெனவே கிளாசென் மிடில் ஆர்டரில் மாஸ் காட்டி வந்தார், டிராவிஸ் ஹெட் உடன் அபிஷேக் சர்மாவுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி வேலை செய்ய ஒட்டுமொத்தமாக அணியே விஸ்வரூபம் எடுத்தது. அதிரடியாக விளையாடி இறுதிப்போட்டி வரை வந்து கோப்பையை தவறவிட்டது.2025 சீசனில் ஆரம்பத்தில் சொதப்பிய சன்ரைசர்ஸ், கடைசியில் கொஞ்சம் சுதாரித்தது. ஆனால் அந்த அணியின் பேட்டிங் மட்டும் சோடை போகவே இல்லை. இதனால், இறுதியாக 6வது இடத்தில் முடித்தது. ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன் முகமது ஷமியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் டிரேட் செய்துவிட்டது. தொடர்ந்து, அபினவ் மனோகர், ஆடம் ஸாம்பா, அதர்வா டைடே, ராகுல் சஹார், சச்சின் பேபி, சிமர்ஜித் சிங், வியான் முல்டர் ஆகியோரை விடுவித்தது. மொத்தம் 2 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 8 பேரை வெளியேற்றியது.நடந்து முடிந்த மினி ஏலத்தில் ஆரம்பக் கட்டத்தில் யாரையுமே வாங்கமால் இருந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்து இளம் இந்திய வீரர்களை வரிசையாக அள்ளிப்போட்டது. மேலும், முதல் சுற்றில் யாராலும் வாங்கப்படாத லியம் லிவிங்ஸ்டன் கடைசியாக மீண்டும் ஏலம்விடப்பட்டார். அப்போது லியம் லிவிங்ஸ்டனை லக்னோவிடம் போட்டாப்போட்டி போட்டு ரூ.13 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியிருக்கிறது. சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக இவர் சன்ரைசர்ஸ் அணியில் வந்திருப்பது பெரும் பலமாக அமைந்திருக்கிறது. அதுவும் ஹைதராபாத் மைதானத்தின் தட்டையான ஆடுகளம் சிக்ஸ் மழை பொழிய அதிகம் சாதகமாக இருக்கும் என்பதால் சன்ரைசர்ஸ் ரசிகர்கள் குதூகலத்தில் இருக்கிறது.அணியுடன் தீவிரமாக சண்டைப் போட்டு, ஜாக் எட்வார்ட்ஸ் என்ற ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை ரூ.3 கோடிக்கு எடுத்திருக்கிறது. இவர் பிளேயிங் லெவனில் முதன்மையாக இடம்பெற வாய்ப்பில்லை என்றாலும் லிவிங்ஸ்டனுக்கும், கம்மின்ஸுக்கும் சிறந்த பேக்-அப்பாக இருப்பார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்தியாவின் திறமையான வீரர்களை அள்ளியிருக்கிறது. உள்நாட்டு போட்டிகளில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியவர்கள் மீது முதலீடு செய்திருக்கிறது. சலில் அரோரா பஞ்சாப் அணிக்காக விக்கெட் கீப்பர் பினிஷராக சிறப்பாக விளையாடி வருபவர். சிவம் மாவி ஐபிஎல் தொடருக்கு புதியவர் இல்லை, இந்திய வேகப்பந்துவீச்சு பேக்-அப்பாக இருப்பார். சௌராஷ்டிராவைச் சேர்ந்த இடதுகை சைனாமேன் கிரெய்ன்ஸ் ஃபுலேட்ராவை எடுத்திருக்கிறது. மேலும் விதர்பா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ப்ராஃபுல் ஹிஞ், மத்திய பிரதேசத்தின் இடது கை சுழற்பந்துவீச்சாளரான சிவாங்க் குமார் ஆகியரை சன்ரைசர்ஸ் எடுத்திருக்கிறது. இது போக, அமித் குமார், ஓன்கர் தர்மாலே, சகிப் ஹூசைன் உள்ளிட்டோரையும் எடுத்திருக்கிறது.டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே, கமிந்து மெண்டிஸ், ஜாக் எட்வர்ட்ஸ்வேகப்பந்துவீச்சாளர்கள்: பாட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், பிரைடன் கார்ஸ், ஜெய்தேவ் உனத்கட், எஷான் மலிங்கா, சாகிப் ஹுசைன், ஓன்கர் தர்மலே, பிரஃபுல் ஹிங்கே, சிவம் மாவி.சன்ரைசர்ஸ் ரூ.25 கோடிக்கும் மேல் ஏலத்தில் வந்து, சுமார் ரூ.5.45 கோடி மீதம் வைத்திருக்கிறது. ஏற்கெனவே பிளேயிங் லெவன் செட்டாகிவிட்டதால் பெரியளவில் வீரர்களை வாங்கவில்லை. ஆனால் ஷமி இடத்தில் சிறப்பாக பந்துவீச இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை என்பதே அணியின் பலவீனம் எனலாம். சிவம் மாவி அந்த இடத்தை நிரப்புவார் என கூறப்படுகிறது.அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென் , அனிகேத் வர்மா, லியம் லிவிங்ஸ்டன், நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கமின்ஸ் , ஷீஷன் அன்சாரி, ஹர்ஷல் பட்டேல், சிவம் மாவி/ஜெயதேவ் உனத்கட்.மேலும் படிக்க | CSK-வின் பிளேயிங் 12... லிஸ்ட் போட்ட அஸ்வின் - தோனி இருக்காரா இல்லையா?மேலும் படிக்க | IPL 2026: இந்த சீசனிலாவது நடராஜனை களமிறக்குமா DC.. டெல்லி அணியின் பெஸ்ட் பிளேயிங் 11! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.T20 World CupSuriya 47IPL 2026: 300 ரன்கள் கூட SRH அணிக்கு ஈஸி... பலமான பிளேயிங் 11... இம்பாக்ட் வீரர் யார் யார்?Tamil Nadu weatherTamil Nadu Public Examசாக்கடையை ஏன் கொண்டு வருகிறீர்கள்? ஹெச். ராஜா படம் பற்றி... சேகர்பாபு விமர்சனம்
IPL 2026 Pat Cummins IPL 2026 SRH Sunrisers Hyderabad Playing XI Prediction Sunrisers Hyderabad Probable Playing 11 Pat Cummins SRH Squad SRH எஸ்ஆர்ஹெச் ஐபிஎல் 2026 பாட் கம்மின்ஸ் ஐபிஎல் 2026 எஸ்ஆர்ஹெச் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன் கணிப்பு சன்ரைசர்ஸ் ஹைதரபாத் பலமான பிளேயிங் லெவன் பாட் கம்மின்ஸ்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
IPL 2026: LSG-ல் 9 பாஸ்ட் பவுலர்கள்.. லக்னோவின் பெஸ்ட் பிளேயிங் 11 இதுதான்!IPL 2026: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பெஸ்ட் பிளேயிங் 11 குறித்து.
Read more »
Guru Margi 2026: अभी अस्त हैं गुरु बृहस्पति, 2026 में होगा उदय, नए साल में चांदी काटेंगे इन 3 राशियों के लोगGuru Margi 2026: गुरु 11 मार्च 2026 को मिथुन राशि में मार्गी होंगे. इसके बाद गुरु बृहस्पति 12 दिसंबर 2026 तक मार्गी चाल ही चलेंगे. गुरु की सीधी चाल करीब 10 महीने तक तीन राशियों को लाभ देगी. मार्गी गुरु 2026 में तीन राशि के जातकों का कल्याण करेंगे.
Read more »
IPL 2026: இந்த சீசனிலாவது நடராஜனை களமிறக்குமா DC.. டெல்லி அணியின் பெஸ்ட் பிளேயிங் 11!Delhi Capitals IPL 2026: 2026 ஐபிஎல்லுக்கான டெல்லி கேபிடல்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் 11 குறித்து.
Read more »
IPL 2026: கப் அடிக்க ரெடியாகும் ஷ்ரேயாஸ் படை - PBKS பலமான பிளேயிங் 11IPL 2026 PBKS: ஐபிஎல் 2026 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முதன்மையான பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
Read more »
Why KKR Went All-In For Cameron Green At The IPL 2026 Auction; Abhishek Nayar ExplainsKolkata Knight Riders head coach Abhishek Nayar has come out in strong defence of the franchise’s record-breaking investment in Cameron Green, calling the Australian a crucial long-term signing as KKR plan for life after Andre Russell.
Read more »
IPL 2026: பரிதாப நிலையில் சுப்மன் கில்லின் GT.. குஜராத் அணியின் பெஸ்ட் பிளேயிங் 11!GT Playing 11: 2026 ஐபிஎல்லுக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியின் பெஸ்ட் பிளேயிங் 11.
Read more »
