India vs Australia: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய 2வீரர்கள் 2வது ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
India vs Australia: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய 2வீரர்கள் 2வது ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். India vs Australia Playing XI Changes: இந்திய அணி மட்டுமின்றி ஆஸ்திரேலிய அணியும் அதன் பிளேயிங் லெவனில் மாற்றத்தை கொண்டு வரும்.
இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் ஓடிஐ போட்டியில் ஆஸ்திரேலியா டிஎல்எஸ் முறைப்படி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி இந்திய அணிக்கு வாழ்வா, சாவா போட்டியாக அமைந்துள்ளது. முக்கியமான இந்த போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில் என்ன மாற்றம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கிறது. குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்குமா?, ஹர்ஷித் ராணாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுமா?, பிரசித் கிருஷ்ணா வருவாரா? என பல கேள்விகள் கில் - கம்பீர் ஜோடியை நோக்கி எழுகின்றன. இது ஒருபுறம் இருக்க, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரில் ஒருவராவது பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஷ்ரேயாஸ் ஐயர் இந்தியாவுக்கு வெளியே தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கில்லுக்கு இருக்கும் அதே நெருக்கடி இந்த மூவரின் மேலும் தற்போது உள்ளது. இந்நிலையில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனிலும் நிச்சயம் மாற்றம் இருக்கும். முதல் போட்டியில் மட்டும் விலகியிருந்த இரண்டு முக்கிய வீரர்கள், தற்போது 2வது போட்டியில் இணைவார்கள். இதனால் சிறப்பாக செயல்பட்ட வீரர்களும் ஸ்குவாடில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆடம் ஸாம்பா அணிக்குள் வருவதால் மேத்யூ குஹ்னேமன் வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் முதல் போட்டியில் சிறப்பாக பந்துவீசியிருந்தார். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அவர் 4 ஓவர்களில் 26 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றினார். அதுவும் முதல் 3 ஓவர்களில் 13 ரன்களை மட்டும் கொடுத்து நெருக்கடி அளித்திருந்தார். மறுபுறம், அலெக்ஸ் கேரி அணிக்குள் வருவதால் ஜாஷ் பிலிப் நீக்கப்பட்டுள்ளார். இவரும் கடந்த போட்டியில் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் மிரட்டினார். மூன்று கேட்ச்களை பிடித்த பிலிப், பேட்டிங்கில் 29 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் என 37 ரன்களை அடித்திருந்தார். விக்கெட் சரிந்தபோது, கேப்டன் மிட்செல் மார்ஷ் உடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவை நெருக்கடியின்றி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் பிளேயிங் லெவன் மாற்றம் நிச்சயம் இருக்கும் எனலாம். அந்த வகையில், 2வது ஓடிஐ போட்டி அடிலெய்ட் மைதானத்தில் வரும் அக். 23ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மூலம் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் சந்தா செலுத்தி நீங்கள் போட்டியை கண்டுகளிக்கலாம். டிடி நேஷ்னல் சேனல் மூலம் தொலைக்காட்சியில் இலவசமாக போட்டியை காணலாம். கமலுக்கு தாயாகவும், மாமியாராகவும் நடித்து..அவரையே காதலித்த நடிகை! யார் தெரியுமா?Kalaignar Magalir Urimai Thogaiகமலுக்கு தாயாகவும், மாமியாராகவும் நடித்து..அவரையே காதலித்த நடிகை! யார் தெரியுமா?
India Vs Australia IND Vs AUS Playing XI Changes IND Vs AUS Two Players Ruled Out Adam Zampa Alex Carey Inclusion In 2Nd ODI IND Vs AUS 2Nd ODI Josh Philippe Matthew Kuhnemann Adam Zampa Alex Carey Harshit Rana Kuldeep Yadav Prasidh Krishna இந்தியா ஆஸ்திரேலியா போட்டி இந்தியா ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் மாற்றம் இந்தியா ஆஸ்திரேலியா இரண்டு வீரர்கள் நீக்கம் ஆடம் ஸாம்பா அலெக்ஸ் கேரி 2வது ஓடியில் சேர்ப்பு இந்தியா ஆஸ்திரேலியா 2வது ஓடிஐ போட்டி ஜோஷ் பிலிப் மேத்யூ குஹ்னேமன் ஆடம் ஸாம்பா அலெக்ஸ் கேரி ஹர்ஷித் ராணா குல்தீப் யாதவ் பிரசித் கிருஷ்ணா
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
IND VS AUS: कलाकार के साथ बंद करो 'कलाकारी', 'चाइनामैन' को ना खिलाना पड़ रहा है भारी, पप्लू नहीं ट्रंपकॉर्ड...ऑस्ट्रेलियाई परिस्थितियों में कुलदीप का रिकॉर्ड बेहद प्रभावशाली है. सभी प्रारूपों में, उन्होंने सात मैचों में 13 विकेट लिए हैं. हाँ, एडिलेड ओवल में भले ही गेंद ज़्यादा न घूमे, लेकिन कुछ स्पिनरों को परिस्थितियों के बावजूद टीम में शामिल किया जाना तय है
Read more »
IND vs AUS: दूसरे वनडे मैच के दौरान कैसा रहेगा एडिलेड का मौसम, जहां खेला जाएगा दूसरा वनडेIND vs AUS: भारत और ऑस्ट्रेलिया के बीच दूसरा वनडे मैच एडिलेड ओवल में खेला जाएगा. आइए जानते हैं कि दूसरे वनडे में मौसम का हाल कैसा रहने वाला है? खेल समाचार | क्रिकेट
Read more »
Ind vs Aus 2nd ODI: இந்தியா பிளேயிங் 11 இதுதான்.. 2 முக்கிய மாற்றங்கள்!Ind vs Aus 2nd ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி 23ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
Read more »
IND vs AUS: एडिलेड में दूसरा वनडे मैच, भारत के लिए करो या मरो की स्थितिभारत और ऑस्ट्रेलिया के बीच वनडे सीरीज का दूसरा मुकाबला एडिलेड ओवल में खेला जाएगा। भारत पहला मैच हार चुका है और सीरीज में बने रहने के लिए दूसरा मैच जीतना ज़रूरी है। एडिलेड ओवल में भारत का रिकॉर्ड अच्छा है, लेकिन ऑस्ट्रेलिया का भी शानदार रिकॉर्ड है।
Read more »
Ind vs Aus: கே.எல். ராகுலை விஷயத்தில் செய்த தவறு.. அது மீண்டும் நடந்தால்?Kl Rahul: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கே.எல். ராகுல் 6வது இடத்தில் களமிறங்கியது சரியானதாக இல்லை என கிரிக்கெட் நிபுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Read more »
IND vs AUS: विराट कोहली के पास एडिलेड में वर्ल्ड रिकॉर्ड बनाने का सुनहरा मौकाभारत और ऑस्ट्रेलिया के बीच वनडे सीरीज के दूसरे मैच में विराट कोहली के पास एडिलेड ओवल में कई रिकॉर्ड बनाने का मौका है। कोहली के पास एडिलेड में सबसे ज्यादा वनडे शतक लगाने और ऑस्ट्रेलिया में सबसे ज्यादा शतक लगाने वाले विदेशी बल्लेबाज बनने का मौका है।
Read more »
