EPS Pension Hike: குறைந்தபட்ச இபிஎஸ் ஓய்வூதியம் அதிகரிக்கவுள்ளதா? தனியார் துறை ஊழியர்களுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கிடைத்த அப்டேட் பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPS Pension: இபிஎஸ் மாத ஓய்வூதியம் அதிகரிக்கிறதா ? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியது என்ன ?EPS Pension Hike: குறைந்தபட்ச இபிஎஸ் ஓய்வூதியம் அதிகரிக்கவுள்ளதா? தனியார் துறை ஊழியர்களுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கிடைத்த அப்டேட் பற்றி இந்த பதிவில் காணலாம்.
குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் இதற்கு முன் எப்போது மாற்றப்படது?School Holidayஇபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி. இபிஎஸ் -இன் கீழ் அளிக்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்கவுள்ளதா? தனியார் துறை ஊழியர்களுக்கும் இனி அகவிலைப்படி வழங்கப்படுமா? நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது குறித்து கிடைத்த தகவல் என்ன? முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.இபிஎஃப் உறுப்பினர்களாக இருக்கும் தனியார் துறை ஊழியர்கள் நீண்ட நாட்களாக சில முக்கிய விஷயங்களுக்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவற்றில், - ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 -லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும்,இபிஎஸ் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் ஏன் தற்போதுள்ள ரூ.1,000 -லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்படவில்லை என்பது குறித்து நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒருமுறை மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஓய்வூதியம் நிர்ணயம் செய்வது குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதம் குறித்தும் அரசாங்கம் ஒரு கேள்வியை எதிர்கொண்டது. டிசம்பர் 15 அன்று மக்களவையில், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் ரஞ்சன், ஓய்வூதியத்தை உயர்த்துவதிலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி ஓய்வூதிய நிர்ணயத்தை முழுமையாகச் செயல்படுத்துவதிலும் ஏற்படும் தாமதத்திற்கான காரணங்களை விளக்குமாறு தொழிலாளர் அமைச்சகத்திடம் கேட்டார். இதற்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்த பிரச்சினையின் தீவிரத்தை ஒப்புக்கொண்டதுடன், நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்குவது குறித்த ஒரு புதுப்பிப்பையும் வழங்கியது. அதே நேரத்தில், இபிஎஸ்-95 ஓய்வூதியதாரர்களின் கோரிக்கை ஏன் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதையும் விளக்கியது.இபிஎஸ்-95 ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.7,500, குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி மற்றும் இலவச மருத்துவ வசதிகளைக் கோரி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விப்படி, நாடு முழுவதும் சுமார் 78 லட்சம் இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் முதுமையில் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் பல ஆண்டுகளாக அமைதியான போராட்டங்கள் மூலம் அரசாங்கத்திடம் நிவாரணம் கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில், இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் அரசாங்கத்திடம் இருந்து ஒரு தெளிவான முடிவையும் காலக்கெடுவையும் மீண்டும் மீண்டும் கோரி வருகின்றனர்.- இன்றைய அளவில், இபிஎஸ்-95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.1,000 ஆக உள்ளது.- ஓய்வூதியதாரர்கள் யாரும் இந்தத் தொகைக்குக் குறைவாக ஓய்வூதியம் பெறக்கூடாது என்பதை உறுதிசெய்ய அரசாங்கம் இதற்கான பட்ஜெட் ஆதரவை வழங்கியது. - 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு வாழ்க்கைச் செலவுகள், விலைவாசி என அனைத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. - இபிஎஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் பணவீக்கம் அல்லது அகவிலைப்படியுடன் இணைக்கப்படவில்லை.இபிஎஸ் ஓய்வூதியத் திட்டத்தின் கட்டமைப்பை விளக்கிய தொழிலாளர் அமைச்சகம், இபிஎஸ்-95 என்பது ஒரு"வரையறுக்கப்பட்ட பங்களிப்பு–வரையறுக்கப்பட்ட பலன்" சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்று கூறியது. “ஊழியர்களின் ஓய்வூதிய நிதியின் மூலதனம், மத்திய அரசின் பட்ஜெட் ஆதரவின் மூலம் வழங்கப்படும் பங்களிப்பு ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்துப் பலன்களும் இந்தத் திரட்டப்பட்ட நிதியிலிருந்தே வழங்கப்படுகின்றன,” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.“இபிஎஸ், 1995-இன் பத்தி 32-இன் கீழ் கட்டளையிடப்பட்டபடி, நிதி ஆண்டுதோறும் மதிப்பிடப்படுகிறது. 31.03.2019 அன்று நிதியின் மதிப்பீட்டின்படி, ஒரு ஆக்சுவேரியல் பற்றாக்குறை உள்ளது,” என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையே, குறைந்தபட்ச ஓய்வூதியத்தை கணிசமாக அதிகரிப்பதற்கோ அல்லது இபிஎஸ் ஓய்வூதியத்தை வாழ்க்கைச் செலவுக் குறியீட்டுடன் இணைப்பதற்கோ உள்ள சிரமங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படிக்கான எந்த உறுதியையும் அமைச்சர் அளிக்கவில்லை. இபிஎஸ்-95 திட்டத்தின் கீழ் அகவிலைப்படியை அறிமுகப்படுத்தும் பிரச்சினையை ஆராய்ந்த உயர் அதிகாரம் பெற்ற கண்காணிப்புக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சகம் குறிப்பிட்டது. நிதியின் ஆக்சுவேரியல் நிலையை கருத்தில் கொண்டு, இபிஎஸ் ஓய்வூதியத்தை வாழ்க்கைச் செலவுக் குறியீட்டுடன் இணைப்பது அல்லது அகவிலைப்படி வழங்குவது சாத்தியமற்றது என்று அக்குழு முடிவு செய்துள்ளது.- அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிதி நெருக்கடிகள் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விரிவாகக் குறிப்பிட்டது. - எனினும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்துவது அல்லது அகவிலைப்படி மற்றும் மருத்துவ வசதிகளை நீட்டிப்பது குறித்து எந்தக் காலக்கெடுவையும் அரசு அறிவிக்கவில்லை. - பல ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை எழுப்பி வரும் EPS-95 ஓய்வூதியதாரர்களுக்கு, இந்த பதில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. - ஆனால் கொள்கை முடிவை வழங்குவதில் இருந்து அரசு தவறிவிட்டதால் இபிஎஸ் குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வுக்கான காத்திருப்பு தொடர்கிறது.மேலும் படிக்க | ATM -இல் EPF பணம் எடுக்கும் வசதி இந்த நாளில் தொடங்கும்: அமைச்சர் அதிரடி அப்டேட் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.8th Pay CommissionATM -இல் EPF பணம் எடுக்கும் வசதி இந்த நாளில் தொடங்கும்: அமைச்சர் அதிரடி அப்டேட்டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே அலெர்ட்! தேர்வில் வெற்றி பெற சூப்பர் சான்ஸ்.. தமிழக அரசு அறிவிப்பு2026ல் வெற்றியை மட்டுமே ருசிக்கும் ராசிகள்! தொட்டதெல்லாம் அதிர்ஷ்டம் தான்.. யாரெல்லாம் தெரியுமா?NPS சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: புதிய விதிகள்... 80% கார்பஸை எடுக்க அனுமதி, எளிதாகும் செயல்முறை
What Is The Status Of Minimum Monthly Pension Hik Minimum Monthly Pension Hike Minimum Monthly Pension Monthly Pension From Rs 1000 To Rs 7500 Pension Central Government Parliament Eps Epfo Epf இபிஎஸ் மாத ஓய்வூதியம் அதிகரிக்கிறதா நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியது என்ன இபிஎஸ் மாத ஓய்வூதியம் இபிஎஸ் மாத ஓய்வூதியம் ஓய்வூதியம் மத்திய அரசு EPS Pension Hike PS Pension Latest News குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் Parliament Winter Session நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் EPF Members இபிஎஃப் உறுப்பினர்கள் Private Sector Employees Epfo News Business News In Tamil Epfo News In Tamil Pensioners Latest News Eps News Eps Pension News In Tami EPS Pensioners இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Pension Scheme: కేంద్ర ప్రభుత్వ ఉద్యోగులకు కీలక అప్డేట్.. వారందరికీ బిగ్ రిలీఫ్.. పూర్తి వివరాలు ఇవే..!!Central Government Employees: కేంద్రంలోని మోదీ సర్కార్ .. UPSపై కీలక అప్డేట్ ఇచ్చింది. నవంబర్ 30, 2025 వరకు కేవలం 1.22 లక్షల మంది మాత్రమే UPS ఎంచుకున్నట్లు తెలిపింది. UPS తీసుకున్న ఉద్యోగులకు షరతులతో తిరిగి NPSకు వెళ్లే ఛాన్స్ ఇచ్చింది. ఇది కేంద్ర ప్రభుత్వ ఉద్యోగులకు బిగ్ రిలీఫ్ గా భావిస్తున్నారు.
Read more »
EPFO Pension: प्राइवेट नौकरी करते हैं और अगले साल हो रहे हैं रिटायर, कितनी पेंशन मिलेगी? कैसे होता है इसका कैलकुलेशनPF Pension Calculator: प्राइवेट नौकरी करने वालों के लिए भी पेंशन की व्यवस्था होती है। यह पेंशन ईपीएफओ की तरफ से मिलता है। इसे इम्पलॉइज पेंशन योजना कहते हैं। हम बता रहे हैं इस पेंशन की गणना का फॉर्मूला।
Read more »
EPS ಪಿಂಚಣಿ: ಖಾಸಗಿ ವಲಯದ ಉದ್ಯೋಗಿಗಳಿಗೆ ಯಾವ ವಯಸ್ಸಿಗೆ, ಎಷ್ಟು ಪಿಂಚಣಿ ಸಿಗುತ್ತೆ?EPFO Update: ಇದು EPF ಸದಸ್ಯರಿಗೆ ಬಹಳ ಮುಖ್ಯವಾದ ಸುದ್ದಿ. ಅದರಲ್ಲೂ ಖಾಸಗಿ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಿರುವ ನೌಕರರಿಗೆ ಇನ್ನೂ ಪ್ರಮುಖವಾದ ಸುದ್ದಿ. ನಿವೃತ್ತಿಯಾದ ಬಳಿಕ EPF ಸದಸ್ಯರಿಗೂ ಪಿಂಚಣಿ ಸೌಲಭ್ಯ ಇದೆಯಾ? ಇದ್ದರೆ ತಿಂಗಳಿಗೆ ಎಷ್ಟು ಪಿಂಚಣಿ ಸಿಗುತ್ತೆ? ಪಿಂಚಣಿ ಪಡೆಯಲು ಇರುವ ನಿಯಮಗಳು ಯಾವ್ಯಾವು? ಎನ್ನುವ ಪ್ರಶ್ನೆಗಳಿಗೆ ಇಲ್ಲಿವೆ ಉತ್ತರಗಳು.
Read more »
EPFO Pension: 2030లో రిటైర్ అవుతున్నారా? మీకు ప్రతీ నెలా ఎంత పెన్షన్ అందుతుందంటే? పూర్తి లెక్కలివే..!!EPFO Pension Calculation: ప్రైవేట్ రంగంలో పనిచేసే ఉద్యోగులకు రిటైర్మెంట్ తర్వాత నెలవారీ పెన్షన్ ఎంత, ఎలా లభిస్తుందన్న సందేహం చాలామందిలో ఉంటుంది. అయితే ఎంప్లాయీస్ ప్రావిడెంట్ ఫండ్ ఆర్గనైజేషన్ నిర్వహిస్తున్న ఎంప్లాయీస్ పెన్షన్ స్కీమ్ ఈ విషయంలో భరోసా కల్పిస్తోంది.
Read more »
E-shram Card se Pension: कैसे मिलेगी हर महीने 3000 रुपये पेंशन? यहां जानें स्कीम से जुड़ी सारी डिटेल्सE-shram Card se Pension: असंगठित क्षेत्र के श्रमिकों के लिए ई-श्रम कार्ड एक अहम पहचान बन चुका है. इसके जरिए श्रमिक प्रधानमंत्री श्रम योगी मानधन योजना से जुड़कर भविष्य में नियमित पेंशन का लाभ ले सकते हैं. आवेदन की प्रक्रिया आसान और ऑनलाइन व ऑफलाइन दोनों माध्यमों से उपलब्ध है.
Read more »
EPS Pension: தனியார் துறை ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகின்றது?EPS Pension: EPS 95 திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியமாக எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.
Read more »
