வரதட்சணை கொடுமை..பெண் உயிரிழப்பு! கணவனின் தண்டனையை நிறுத்திய உச்ச நீதிமன்றம்..
Vismaya Dowry Death SC Suspends Jail Sentence : 2021ஆம் ஆண்டு, நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த வரதட்சணை கொடுமை வழக்கு, கேரளாவை சேர்ந்த விஸ்மயாவுடையது. இந்த வழக்கில், அவரது கணவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
crimeதிருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற பெண், திருமணமான 3 மாதத்திற்குள் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பலருக்கு, 2021 ஆம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த ஒரு பெண் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட வழக்கை ஞாபகப்படுத்தியது. தற்போது இந்த வழக்கில் அவரது கணவருக்கு கிடைத்திருக்கும் தீர்ப்பு, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.படித்து வந்த பெண், விஸ்மயா. கேரளா கொள்ளம் பகுதியை சேர்ந்த இந்த 22 வயது பெண்ணிற்கு கிரண் என்பவரை 100 சவரன் நகை, 1 ஏக்கர் நிலம், ஒரு டொயோட்ட கார் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கொடுத்து திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஆனால், விஸ்மயா திருமணமான ஒரு ஆண்டிற்குள், கடந்த ஜூன் 21, 2021ஆம் ஆண்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விஸ்மயா, உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது உறவினரிடம் வரதட்சணை கொடுமை நடப்பதாக தெரிவித்திருக்கிறார். அவர்களது வாட்ஸ் ஆப் மெசஜ்களில் காயங்களை இவர் போட்டோ எடுத்து அனுப்பியது, அவர்களுக்கு இடையேயான உரையாடல் ஆகியவை முக்கிய ஆதாரங்களாக கருதப்பட்டன. இதை வைத்து விஸ்மயா தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் வரதட்சணை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மகளின் தற்கொலையை அடுத்து அவரது பெற்றோர்கள் விஸ்மயாவின் கணவர் கிரண் மீது காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். இதனால் கிரணுக்கு வேலை போனதோடு, இந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறார். 2022ல் இவரது மனுவை நிராகரித்த கேரளா உயர்நீதிமன்றம், அவர் மீது குற்றப்பத்திரைக்கை தாக்கல் செய்திருக்கிறது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கு, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.மேல்முறையீடு செய்திருந்தார். நீதி மன்றத்தில் கிரண் குமார் வரதட்சணை கேட்டதற்கும் தற்கொலைக்கு தூண்டியதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்றும் விவாதிக்கப்பட்டது. மேலும், அவர் ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து விட்டதகாவும் எனவே அவரது தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் விவாதிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தகுந்த ஆதாரங்களை வழங்கும் வரை அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக உத்தரவிட்டுருக்கின்றனர்.மேலும் படிக்க | தொடரும் வரதட்சணை கொடுமை.. திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் எடுத்த சோக முடிவு! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Air IndiaIndian CricketWeight Loss Tips8வது ஊதியக்குழு: பம்பர் ஊதிய உயர்வை தீர்மானிக்கவுள்ள அந்த 2 முக்கிய அம்சங்கள் இவைதான்கொலை செய்தது உங்கள் அரசு.. "SORRY" என்பது தான் உங்கள் பதிலா? எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!
Dowry Death Supreme Court Jail Sentence Vismaya Case Death Vismaya Dowry Death Supreme Court Supreme Court Vismaya Dowry Death விஸ்மயா தற்கொலை வழக்கு விஸ்மயா தற்கொலை உச்ச நீதிமன்ற வழக்கு விஸ்மயா வரதட்சணை கொடுமை வழக்கு விஸ்மயா கணவர் கிரண் குமார்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
எதேச்சதிகாரத்தின் உச்சம்! தவெக பெண் நிர்வாகி மீது போலீசார் தாக்குதல்.. விஜய்க்கு ஆதரவாக சீமான்!தவெக பெண் நிர்வாகி மீது போலீசார் தாக்கியதாக புகார் எழுந்த நிலையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read more »
பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் ரூ.12,000 உதவித்தொகை! எப்படி விண்ணப்பிப்பது?அரசுப் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் சேர்க்கை மற்றும் இடைநிற்றலை குறைக்க தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
Read more »
23 கிலோவை குறைத்த பெண்... உடல் எடையை குறைக்க அவர் கைவிட்ட 5 பழக்கங்கள் இவைதான்!Weight Loss Journey: பெண் ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் 5 மாதங்களில் 23 கிலோவை குறைக்க, அவர் கைவிட்ட 5 முக்கிய விஷயங்கள் குறித்து பேசி உள்ளார்.
Read more »
12 ஆண்டுகள்.. கடகத்தில் பெயர்ச்சியாகும் குரு; செல்வம் புழங்கும், அதிர்ஷ்டம் மேலோங்கும்ஜூலை 9 ஆம் தேதி குரு மிதுன ராசியில் உதயமாகி, அதன் பிறகு அக்டோபர் மாதத்தில் உச்ச ராசியான கடக ராசியில் நுழைவார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு கடக ராசியில் நுழைவார்.
Read more »
49 கிலோவை குறைத்த பெண்... உடல் எடையை குறைக்க அவருக்கு உதவிய 5 பழக்கவழக்கங்கள்!Weight Loss Journey: இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள பெண் ஒருவர் 49 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். அதற்கு அவர் பின்பற்றிய 5 பழக்கவழக்கங்களை இங்கு காணலாம்.
Read more »
