தவெக பெண் நிர்வாகி மீது போலீசார் தாக்கியதாக புகார் எழுந்த நிலையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Seeman Support Vijay : தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட வழிக்காட்டு நெறிமுறைகள்சென்னை வியாசர்பாடி முல்லை நகரில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய தவெக பெண் நிர்வாகியை போலீசார் தாக்கியதாக புகார் எழுந்தது. இதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையான நிலையில், குடிசைகளை இழந்த மக்களுக்கு உதவும் நோக்குடன் தமிழக வெற்றிக் கழகத் பொறுப்பாளர்கள் அத்தியாவசியப் பொருட்களும், உணவும் வழங்கியதை தமிழ்நாடு காவல்துறை தடுத்ததோடு, பெண் நிர்வாகிகள் என்றும் பாராமல் கடுமையாகத் தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என்ன தேசக்குற்றமா? அதற்காக திமுக அரசு காவல்துறையை ஏவி கடுமையாகத் தாக்கியுள்ளது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும். சனநாயக நாட்டில் மக்கள்தானே மன்னர்கள்? அரசியல் என்பதே மக்களுக்கு செய்கின்ற சேவைதானே? அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் தொடங்கி அரசு அதிகாரிகள்வரை அனைவருமே மக்களுக்குத் தொண்டு செய்யும் சேவகர்கள்தான் எனும்போது மக்களுக்கு உதவிசெய்வதை, அதுவும் எதிர்பாராத விபத்தில் சிக்கி ஆதரவற்று நிற்கும் மக்களுக்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்ததைத் தடுத்து நிறுத்தி திமுக அரசின் காவல்துறை தாக்கியது ஏன்? உண்மையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி இருக்க வேண்டியது நல்ல அரசின் முழுமுதற் கடமையாகும். திமுக அரசு செய்யத்தவறியதை ஓர் அரசியல் இயக்கத்தினர் தாமாக முன்வந்து உதவினார்கள் என்றால் அதைத் தட்டிக்கொடுத்து பாராட்ட வேண்டுமே தவிர, தடுத்துநிறுத்தி, தாக்குவது சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும். பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது என்றால் கூட எங்கள் பெயரை ஒட்டி நாங்கள் மட்டும்தான் செய்ய வேண்டும், நாங்கள் செய்யும்வரை வேறு யாரும் உதவக்கூடாது என்பது என்ன மாதிரியான மனநிலை? இதற்குப் பெயர்தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச்செய்யும் திராவிட மாடலா? இதுதான் திமுக பெற்றுத்தந்த சமூக நீதியா? திமுக அரசின் இத்தகைய அதிகார அட்டூழியங்கள் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்! ஆகவே, த.வெ.க பெண் நிர்வாகிகளைத் தாக்கிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டுமெனவும், மக்களுக்கு உதவுவதைக்கூட தடுத்து, தாக்கும் இதுபோன்ற கொடுமைகள் தொடரா வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் தமிழ்நாட்டு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் படிங்க: அண்ணா பல்கலை வழக்கு: குற்றவாளி ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட 11 குற்றச்சாட்டுகள் என்ன?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!PPF: மாதம் ரூ.60,941 உத்திரவாத வருமானத்துடன்... ரூ. 1 கோடி கார்பஸ் தரும் சூப்பர் முதலீடுதிருந்தாத ஜெயம் ரவி! கோர்ட் சொல்லியும் வெளியிட்ட பதிவு..என்ன சொல்லியிருக்காரு?ஏர்டெல் நிறுவனத்தின் மிகப்பெரிய அறிவிப்பு... எல்லா ஓடிடியும் ஒரே ரீச்சார்ஜில் பார்க்கலாம்..!!
Ntk Tvk Vijay Police Attack Tvk Female Executive Tvk Leader Vijay Chennai Vyasarpadi Fire Accident Chennai Fire Relief Vyasarpadi Fire Incident Police Attack Women Tamilaga Vetri Kazhagam Fire Relief Distribution Women Leaders Assaulted Chennai Police Controversy சீமான் நாதக தவெக விஜய் தொலைக்காட்சி பெண் நிர்வாகி மீது போலீசார் தாக்குதல தவெக தலைவர் விஜய் சென்னை வியாசர்பாடி தீ விபத்து சென்னை தீ நிவாரணம் வியாசர்பாடி தீ விபத்து போலீசார் பெண்களைத் தாக்கினர் தமிழக வெற்றி கழகம் தீயணைப்பு நிவாரண விநியோகம் பெண் தலைவர்கள் தாக்கப்பட்டனர் சென்னை காவல்துறை சர்ச்சை
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் மதம் மாறிய இந்து தான்காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் உள்நாட்டில் இருந்து கொண்டு நாட்டிற்கு எதிராக பேசும் திருமாவளவன், சீமான், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்ராமையா உள்ளிட்டோர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பேட்டி.
Read more »
இந்தியாவில் அணு ஆயுத தாக்குதல் நடந்தால்... எந்த நகரங்களில் பாதிப்பு இருக்கும்?ஒருவேளை, இந்தியாவின் மீது அணு ஆயுத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் எந்தெந்த பகுதிகளில் அதிக பாதிப்பு இருக்கும் என்பதை இதில் காணலாம்.
Read more »
Operation Sindoor : ஸ்ரீநகர், ராணுவ தலைமையகம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது உண்மையா?Operation Sindoor : ஆப்ரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக ஸ்ரீநகர், ராணுவ தலைமையகம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது உண்மையா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
Read more »
நள்ளிரவில் 15 நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்... அதிரடியாக முறியடித்த இந்திய ராணுவம்India Pakistan War: பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரை தொடர்ந்து 2வது நாளாக தாக்குதல் நடத்தி உள்ளது.
Read more »
India Pakistan: இந்தியா - பாக் மோதல்! இரவு முழுவதும் நடந்தது என்ன?India Pakistan war: பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய மக்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
Read more »
போர் நிறுத்தத்தை உடனே மீறிய பாகிஸ்தான்... உமர் அப்துல்லா பதிவிட்ட ஷாக் வீடியோ!India Pakistan Tension: பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Read more »
