ரேஷன் கார்டு வைத்துள்ள கள்ளக்குறிச்சி மக்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு

Ration Card News

ரேஷன் கார்டு வைத்துள்ள கள்ளக்குறிச்சி மக்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு
Tamil Nadu GovernmentKallakurichi NewsKallakurichi Ration Card
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 206 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 159%
  • Publisher: 63%

Ration Card : ரேஷன் கார்டு வைத்திருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Ration Card : ரேஷன் கார்டு வைத்திருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைInd Vs Aus 2nd Odiநாளை புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு! Ration Card : வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 766 நியாயவிலைக் கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்கான அரசியினை மட்டும் அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மழைக்காலத்திலும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொதுமக்களுக்கு பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் தொடர்ந்து தடையின்றி வழங்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமையுடன், சர்க்கரை, மண்ணெய்ணெய் மற்றும் சிறப்பு பொது விநியோகத்திட்டத்தின்கீழ் துவரம்பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 766 நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெய்யக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடையும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய நவம்பர்-2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர்-2025 மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கல்வராயன்மலை பகுதியில் இயற்கை பேரிடரால் பாதிக்கக்கூடிய பகுதிகளான தொரடிப்பட்டு, கொடுந்துறை, சின்னகருவேலம்பாடி, வாரம், வஞ்சிக்குழி, மோட்டாம்பட்டி பகுதிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி நியாயவிலைக் கடைகளிலும், பொதுமக்களுக்கு வழங்கத் தேவையான அனைத்து பொது விநியோகத் திட்டப் பொருட்களும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மழை பொழிந்தாலும், மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொதுமக்களுக்கு பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் தடையின்றி வழங்கிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வசதியினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் 1077 மற்றும் 04151-228801 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வது மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும், இடிமின்னலுடன் கனமழை பெய்யும் போது திறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் தவிர்க்க வேண்டும். மேலும் மழை / வெள்ள நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது. வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இருகரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதார் / குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள், பால், தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அவசரகால கட்டுப்பாட்டு அறையில் 1077 மற்றும் 04151-228801 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களும் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். மேற்படி பெறப்படும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் அனைத்துத் துறை அலுவலர்கள் மூலம் புகார்களை பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும், மழைப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மாவட்ட நிருவாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க | பெங்களூரு – ஓசூர் மெட்ரோ வாய்ப்பே இல்லை: கைவிரித்த கர்நாடகா - என்ன பிரச்சனை?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்ணை..பாலியல் சீண்டல் செய்த மருத்துவர்! அதிர்ச்சி சம்பவம்..doctorDiwali ReleasesPF, ஓய்வூதியம், டேக்ஸ் ரீஃபண்டில் பிரச்சனையா? CPGRAMS மூலான் புகார் அளிப்பது எப்படி?BangaloreEPFO

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Government Kallakurichi News Kallakurichi Ration Card Tamil Nadu Ration News வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை கனமழை எச்சரிக்கை பொதுவிநியோகத்திட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு Ration Rice News November Ration Tamil Nadu Kallakurichi District Collector Announcement Northeast Monsoon Alert Tamil Nadu Flood Warning Kallakurichi Tamil Nadu Government Ration Update Ration Rice October 2025 கள்ளக்குறிச்சி ரேஷன் அறிவிப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி ரேஷன் அரிசி விநியோகம் நவம்பர் மாத அரிசி அக்டோபர் மாத ரேஷன் பேரிடர் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ரேஷன் கார்டு அப்டேட்! அக்டோபர் 5,6 ஆம் தேதிகளில் வீடு தேடி வரும் ரேஷன்ரேஷன் கார்டு அப்டேட்! அக்டோபர் 5,6 ஆம் தேதிகளில் வீடு தேடி வரும் ரேஷன்Ration Card update : தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்டோபர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் செய்யப்பட உள்ளது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்! நீங்களும் பொங்கல் பரிசு வாங்கலாம்ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்! நீங்களும் பொங்கல் பரிசு வாங்கலாம்Ration card : ரேஷன் கார்டு இல்லாதவர்கள் பொங்கல் பரிசு பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

ரேஷன் கார்டு முக்கிய அறிவிப்பு! எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே நாளில் தீர்வுரேஷன் கார்டு முக்கிய அறிவிப்பு! எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே நாளில் தீர்வுRation Card : அக்டோபர் மாத த்துக்கான ரேஷன் கார்டு குறைதீர்ப்பு முகாம்களுக்கான தேதி வெளியானது. சென்னை, திருப்பூர் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Read more »

ரேஷன் கார்டு : மாதந்தோறும் பொருள் வாங்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்புரேஷன் கார்டு : மாதந்தோறும் பொருள் வாங்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்புRation Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரசிடமிருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.முழு விவரம்
Read more »

ரேஷன் கார்டு திருத்தம்! தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மிக முக்கிய கட்டுபாடு!ரேஷன் கார்டு திருத்தம்! தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மிக முக்கிய கட்டுபாடு!Ration Card : ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கல் செய்வதில் புதிய கட்டுபாடுகளை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது.
Read more »

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்புரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்புRation Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »



Render Time: 2026-04-02 17:38:45