ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Ration Card Update 2025 News

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Ration Card Correction LimitTNPDS Ration CardKalignar Magalir Urimai Scheme

Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் Ration Card : ரேஷன் கார்டு வைத்திருக்கும் பொதுமக்கள் அதில் திருத்தம் செய்ய அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு வகைகளை அடிப்படையாக வைத்தே பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்முதியோர் ஓய்வூதியம் முதல் அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ரேஷன் கார்டு அவசியம்.

குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரேஷன் கார்டே அடிப்படையான மிக மிக முக்கிய ஆவணம். ரேஷன் கார்டு இல்லாதவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது. அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அரசு ஆவணமாக இருக்கும் ரேஷன் கார்டில் இனி அடிக்கடி திருத்தம் செய்ய முடியாது. ஆம், முன்பெல்லாம் எப்போது வேண்டுமானாலும் ரேஷன் கார்டுகளை திருத்தம் செய்ய முடியும். ஆன்லைன், ஆப்லைன் என இரண்டு வழிகளிலும் ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம். அதாவது, பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு பொதுவிநியோக திட்ட குறைதீர்ப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களிலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் நடக்கும் குறைதீர்ப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களிலோ நேரடியாக சென்று மனு கொடுக்கலாம். இதைவிட எளிமையானது ஆன்லைனில் நேரடியாக நீங்களே டிஎன்பிடிஎஸ் வெப்சைட்டில் ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளுக்கு உரிய ஆவணங்களை இணைத்து திருத்தங்கள் செய்யமாறு முறையிடலாம். அரசு இ-சேவை மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். ஆனால், இதில் இப்போது கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு ரேஷன் கார்டில் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே திருத்தம்கோரி விண்ணப்பிக்க முடியும். அதேபோல், டூபிளிகேட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம், ரேஷன் கார்டு பிடிஎப் டவுன்லோடு ஆகியவற்றையும் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே செய்ய முடியும் வகையில் கட்டுபாடுகளை அரசு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரவில்லை. அரசின் திட்டங்களுக்கு ரேஷன் கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் சரியானவையாக இருக்க வேண்டும் என்பதால், மக்கள் அடிக்கடி திருத்தம் கோரி விண்ணப்பிப்பதாக கூறப்படுகிறது. இது அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமையை அதிகரிப்பதால், துறை ரீதியாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. Guru PeyarchiGuru Peyarchi

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Ration Card Correction Limit TNPDS Ration Card Kalignar Magalir Urimai Scheme ரேஷன் கார்டு ரேஷன் கார்டு அப்டேட் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாடு அரசு டிஎன்பிடிஎஸ் ஆன்லைன் Tamil Nadu Welfare Schemes Ration Card Rules TNPDS Online Correction Duplicate Ration Card Limit Government Notification Ration Card Public Distribution System Tamil Nadu

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்Ration Card : தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு என்னென்ன திட்டங்களில் பலனடையலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..
Read more »

ரேஷன் கார்டு அப்டேட்! அக்டோபர் 5,6 ஆம் தேதிகளில் வீடு தேடி வரும் ரேஷன்ரேஷன் கார்டு அப்டேட்! அக்டோபர் 5,6 ஆம் தேதிகளில் வீடு தேடி வரும் ரேஷன்Ration Card update : தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்டோபர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் செய்யப்பட உள்ளது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்! நீங்களும் பொங்கல் பரிசு வாங்கலாம்ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்! நீங்களும் பொங்கல் பரிசு வாங்கலாம்Ration card : ரேஷன் கார்டு இல்லாதவர்கள் பொங்கல் பரிசு பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

ரேஷன் கார்டு முக்கிய அறிவிப்பு! எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே நாளில் தீர்வுரேஷன் கார்டு முக்கிய அறிவிப்பு! எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே நாளில் தீர்வுRation Card : அக்டோபர் மாத த்துக்கான ரேஷன் கார்டு குறைதீர்ப்பு முகாம்களுக்கான தேதி வெளியானது. சென்னை, திருப்பூர் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Read more »

ரேஷன் கார்டு : மாதந்தோறும் பொருள் வாங்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்புரேஷன் கார்டு : மாதந்தோறும் பொருள் வாங்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்புRation Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரசிடமிருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.முழு விவரம்
Read more »

ரேஷன் கார்டு திருத்தம்! தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மிக முக்கிய கட்டுபாடு!ரேஷன் கார்டு திருத்தம்! தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மிக முக்கிய கட்டுபாடு!Ration Card : ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கல் செய்வதில் புதிய கட்டுபாடுகளை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது.
Read more »



Render Time: 2026-04-04 08:12:46