Ration Card : அக்டோபர் மாத த்துக்கான ரேஷன் கார்டு குறைதீர்ப்பு முகாம்களுக்கான தேதி வெளியானது. சென்னை, திருப்பூர் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Ration Card : அக்டோபர் மாத த்துக்கான ரேஷன் கார்டு குறைதீர்ப்பு முகாம்களுக்கான தேதி வெளியானது. சென்னை , திருப்பூர் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.அக்டோபர் மாதத்துக்கான அறிவிப்புநாளை வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!பணக்கார தொழிலதிபர்களை திருமணம் செய்துக்கொண்ட தமிழ் நடிகைகள்.
. யார் யார் தெரியுமா?Ration Card : தமிழ்நாட்டில் மாதந்தோறும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் அக்டோபர் மாதத்துக்கான குறைதீர்வு முகாம்கள் தேதி சென்னை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி, சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 11.10.2025 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடக்க உள்ளது.பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி அக்டேபார் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 11.10.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.திருப்பூர் மாவட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கான குறைதீர்ப்பு முகாம், அக்டோபர் 11, ஆம் தேதி நடக்க உள்ளது. பொதுமக்கள் அன்றைய தினம் காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை இந்த முகாமில் பங்கேற்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கீழ்க்கண்ட இடங்களில் இந்த குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் தனி வருவாய் உதவியாளர்கள் என அரசுத் தரப்பில் தேவையான அனைத்து அதிகாரிகளும் இந்த முகாமில் கலந்துகொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாகத் தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தின் முக்கிய வட்டங்களில் முகாம் நடைபெறும் இடங்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:தாராபுரம்: கெத்தரேவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்மடத்துக்குளம்: பாப்பன்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்திருப்பூர் வடக்கு: செட்டியகாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்உடுமலைப்பேட்டை: வடுகபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்பொதுமக்கள் தெரிவிக்க வேண்டிய கோரிக்கைகள் குடும்ப அட்டை வைத்திருக்கும் பொதுமக்கள் இந்தக் குறைதீர்ப்பு முகாமைப் பயன்படுத்தி, தங்கள் ரேஷன் அட்டையில் உள்ள பல்வேறு வகையான குறைகளைத் நேரடியாகத் தெரிவிக்கலாம். குறிப்பாக, கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கலாம்:முகவரி மாற்றம் குறித்த மனுக்கள் அளித்தல்.தேவைப்படும் மக்கள் அனைவரும் இந்த குறைதீர்வு முகாம்களில் கலந்துகொண்டு தங்கள் குறைகளைக் களைந்து கொள்ளுமாறு பொதுமக்களை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் படிக்க | ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்! நீங்களும் பொங்கல் பரிசு வாங்கலாம் - எப்படி தெரியுமா?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்! நிறுவனத்தின் ஒற்றை தவறால்..இப்போ பல கோடிக்கு அதிபதிJoy CrizildaaInbanithiED raidவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி.. "இந்த வீரர்தான் அதிக ரன் குவிப்பார்"!
Ration Card Update Tamil Nadu Senior Citizen Ration Card Service Chennai Ration Card Services Tirupur Ration Card Camp Public Distribution System Tamil Nadu ரேஷன் கார்டு ரேஷன் கார்டு அப்டேட் ரேஷன் கார்டு குறைதீர்வு முகாம் அக்டோபர் ரேஷன் கார்டு சென்னை திருப்பூர் Ration Card Grievance Redressal October 2025 Ration Card Camp Ration Card Name Change Address Update Ration Card Family Card Issue Resolution Public Distribution Scheme Tamil Nadu Ration Card Complaints Ration Card Services Chennai Ration Card Grievance Resolution Grievance Camp October 2025
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ஒரே நாளில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி? பலே ஐடியாRation Card : ஒரே நாளில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
வீடு இல்லாதவர்கள் ரேஷன் கார்டு பெறுவது எப்படி? முக்கிய தகவல்Ration Card : வீடு இல்லாதவர்கள் ரேஷன் கார்டு பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அக்டோபர் மாதத்துக்கான முக்கிய அப்டேட்Ration Card : அக்டோபர் மாதம் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்குவது தொடர்பான தேதி வெளியாகியுள்ளது.
Read more »
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்Ration Card : தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு என்னென்ன திட்டங்களில் பலனடையலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..
Read more »
ரேஷன் கார்டு அப்டேட்! அக்டோபர் 5,6 ஆம் தேதிகளில் வீடு தேடி வரும் ரேஷன்Ration Card update : தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்டோபர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் செய்யப்பட உள்ளது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்! நீங்களும் பொங்கல் பரிசு வாங்கலாம்Ration card : ரேஷன் கார்டு இல்லாதவர்கள் பொங்கல் பரிசு பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
