Rahul Gandhi Allegations On Stock Market Scam: இந்திய பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா மீது காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
Rahul Gandhi Allegations On Stock Market Scam: இந்திய பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா மீது காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
இன்று மாலை டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி இதனை தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய அவர், பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு ஊழல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கும், வெளிநாட்டு முதலீட்டுக்கும் தொடர்பிருப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதற்கு முன்னர் பங்குச்சந்தை குறித்து பேசியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுவும் தேர்தல் சமயத்தில் பிரதமர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோர் பங்குச்சந்தை குறித்து பேசுவது இதுவே முதல்முறை. பங்குச்சந்தை குறித்து ஏன் பிரதமர் மோடி பேச வேண்டும் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அதிலும், ஜூன் 4ஆம் தேதிக்குள் பங்குகளை வாங்கும்படி மே 13ஆம் தேதியே அமித்ஷா மக்களிடம் கூறுகிறார் என ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். கருத்துக்கணிப்பை சுட்டிக்காட்டி மோடியும், அமித்ஷாவும் பரிந்துரை செய்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சிலர் பல கோடிகள் சம்பாதிப்பதற்காக மோடியும் அமித்ஷாவும் உதவியுள்ளனர் என்றார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு பின்னர்தான் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வை கண்டன. அதே நேரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பங்குச்சந்தை கடுமையாக சரிந்தன. அதாவது, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியான அடுத்த நாள் 3.39% வரை பங்குச்சந்தை உயர்ந்தது. அதே தேர்தல் முடிவுகள் வெளியான அன்று 6% சரிவை கண்டன. ராகுல் காந்தி மூன்று முக்கிய கேள்விகளை எழுப்பினார். முதலில்,"ஏன் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பங்குச் சந்தையில் குறிப்பிட்ட முதலீட்டை சார்ந்து 5 கோடி குடும்பங்களுக்கு பரிந்துரை செய்தது ஏன்?. மக்களுக்கு முதலீட்டு சார்ந்த அறிவுரை வழங்குவது அவர்களின் பணியா?" என்றார். இரண்டாவது கேள்வியாக,"அவர்கள் ஏன் ஒரே வணிக குழுமத்தைச் சேர்ந்த ஊடகத்திடம் இருவரும் இதுகுறித்து பேட்டியளித்தனர். அந்த வணிக நிறுவனமும் பங்குச் சந்தைகளை தவறாக கையாண்ட குற்றச்சாட்டுக்காக செபி விசாரணையின் கீழ் உள்ளது" என்றார். மூன்றாவதாக,"சந்தேகத்திற்குரிய முதலீட்டாளர்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிவருவதற்கு முந்தைய நாள் பெரும் முதலீடு செய்து, 5 கோடி குடும்பங்களின் பணத்தில் பெரும் லாபத்தை அடைந்துள்ளனர். அந்த வகையில்பாஜகவுக்கும் - போலி கருத்துக்கணிப்பாளர்களுக்கும் - சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது" என கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய பங்குச்சந்தையில் நடந்த முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை எனவும் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இதன்மூலம் மட்டும் 30 லட்சம் கோடி ரூபாய் பங்குச்சந்தையில் இழப்பு ஏற்பட்டுள்ளதை ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார். குறிப்பாக, பாஜக 200-220 இடங்களையே வெல்லும் என உளவுத்துறை அவர்களுக்கு அறிக்கை அளித்தும் மோடியும் அமித்ஷாவும், பங்குச்சந்தை குறித்து மக்களிடம் பேசினர். எனவேதான் விசாரணையை கோருகிறோம் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். Actor Santhanamகுரு சண்டாள யோகத்தினால் யாருக்கு நன்மை? சனியும் குருவும் இணைந்தால் ஏற்படும் தோஷம்!
Huge Share Market Scam Rahul Gandhi Share Market Scam Regarding Exit Poll PM Modi Share Market Scam Amit Shah Share Market Scam Rahul Gandhi Rahul Gandhi Stock Market Scam Rahul Gandhi News Rahul Gandhi Updates Pm Modi News ராகுல் காந்தி ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு அமித்ஷா பங்குச்சந்தை பிரதமர் மோடி பங்குச்சந்தை
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இந்த வழிகளில் பண பரிமாற்றம் செய்தால் வருமான வரி நோட்டீஸ் வரும் ஜாக்கிரதைIncome Tax Notice: ஒரு நிதியாண்டில் ஒருவர் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், அதை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
Read more »
‘என் போட்டி பிரியங்காவுடன்தான்’: அமெதி பிரச்சாரத்தில் ஸ்மிருதி இரானிLok Sabha Elections:அமேதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி போட்டியிடுவார்கள் என நம்பப்பட்ட நிலையில், அக்கட்சி அங்கு காந்தி குடும்ப விசுவாசியான கிஷோரி லால் ஷர்மாவை ஸ்மிருதி இரானிக்கு எதிராக களமிறக்கியது.
Read more »
நான் உங்கள் இதயத்துடன் இணைந்துள்ளேன், நான் உங்களுடையவன்: அமேதியில் ராகுல் காந்தி உருக்கம்Lok Sabha Elections: உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களிடம் தனது அமேதி நினைவுகளையும், அமேதிக்கும் தனக்கும் இடையிலான பந்தத்தையும் பற்றி பேசினார்.
Read more »
10 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 கோடி ரூபாய் சொத்தை பறிமுதல் செய்ய முயற்சி! தனியார் வங்கி மேனேஜர் மீது புகார்10 லட்சம் பணம் கொடுக்காததால் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆந்திரா வங்கி மேலாளர் பறித்து வேறு நபருக்கு கொடுக்க முயல்வதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.
Read more »
உங்கள் மலத்தை தானம் செய்தால் மாதம் ரூ.1.4 கோடி சம்பாதிக்கலாம்!மைக்கேல் ஹாரோப் என்பவரால் தொடங்கப்பட்ட ஹ்யூமன் மைக்ரோப்ஸ் என்ற நிறுவனம் உங்கள் மலத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 1 கோடியே 40 லட்சம் வழங்குகிறது.
Read more »
மத்திய அரசுக்கு RBI அளித்த மிகப்பெரிய பரிசு: ரூ.2.11 லட்சம் கோடி ஈவுத்தொகைReserve Bank of India: ரிசர்வ் வங்கி, மத்தியில் ஆட்சிக்கு வரப்போகும் அரசுக்கு ஒரு பெரிய பரிசை அளித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி டிவிடெண்ட் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
Read more »
