யார் சாமி இவன்? இந்தியாவை கதறவைத்த தமிழர் முத்துசாமி - CSK ஏலத்தில் எடுக்குமா?

Senuran Muthusamy News

யார் சாமி இவன்? இந்தியாவை கதறவைத்த தமிழர் முத்துசாமி - CSK ஏலத்தில் எடுக்குமா?
Who Is Senuran MuthusamyTeam IndiaCSK
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 224 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 177%
  • Publisher: 63%

இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து மிரட்டிய சேனுரன் முத்துசாமி குறித்தும், அவரை சிஎஸ்கே மினி ஏலத்தில் எடுக்குமா?

IND vs SA: இந்திய அணி க்கு எதிராக சதம் அடித்து மிரட்டிய சேனுரன் முத்துசாமி குறித்தும், அவரை சிஎஸ்கே மினி ஏலத்தில் எடுக்குமா என்பது குறித்தும் இங்கு விரிவாக காணலாம்.இது அவரது 8வது டெஸ்ட் போட்டி ஆகும்.Baba Vangaபுகைப்படம் + எடிட்டிங்.

.. தமிழ்நாடு அரசின் 5 நாள்கள் பயிற்சி - பதிவு செய்வது எப்படி?49 நாட்களுக்குப் பிறகு கஜகேசரி யோகம்: 3 ராசிகளுக்கு டபுள் போனஸ் ஜாக்பாட், பொற்காலம் ஆரம்பம் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி தொடர்ந்து ஆறு இன்னிங்ஸ்களாக பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய இரண்டாம் நாளில் மதிய உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 428 ரன்களை குவித்துள்ளது. தற்போது சேனுரன் முத்துசாமி 107 ரன்களுடனும், மார்கோ யான்சன் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியிலும் இந்தியாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா 247 ரன்களை எடுத்து 6 விக்கெட்டை இழந்திருந்தது. ஆனால், இன்று சுமார் 55 ஓவர்களை எதிர்கொண்டு 1 விக்கெட்டை மட்டும் இழந்து 181 ரன்களை குவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, இன்றைய இரண்டாவது செஷனில் 112 ரன்களை அடித்திருக்கிறது. யான்சனின் வெறும் 53 பந்துகளில் அரைசதம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.ஆனால், இன்று ஒரு முனையில் விக்கெட் சரியாமல் பார்த்துக்கொண்டவர் முத்துசாமி தான். அவர் தற்போது வரை 203 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். இது இவரின் முதல் டெஸ்ட் சதமாகும். இதற்கு முன் 2 அரைசதங்களை டெஸ்டில் அடித்திருக்கிறார். உணவு இடைவேளைக்கு பின் முத்துசாமி 109 ரன்களில் ஆட்டமிழந்தார். முத்துசாமியின் இன்றைய நிதான ஆட்டம், 'யார் சாமி இவன்?' என ரசிகர்களை பீமா படத்தின் பிரகாஷ் ராஜ் வசனத்தை பேச வைத்துவிட்டது எனலாம். அந்த வகையில், யார் இந்த சேனுரன் முத்துசாமி என்பதை இங்கு பார்க்கலாம்.இந்திய வம்சாவளி குடும்பத்தில் கடந்த 1994ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவின் குவா-சுலு நடால் மாகாணத்தில் பிறந்தவர், சேனுரன் முத்துசாமி. தென்னாப்பிரிக்கா 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடுதலை பெற்ற நிலையில், அதற்கு 2 மாதங்களுக்கு முன் பிறந்தவர் முத்துசாமி. இவரின் குடும்ப உறவினர்கள் சிலர் இன்னும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் வசிக்கின்றனர். இவர் தந்தையின் ஊரும் நாகப்பட்டினம் தான். சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டில் ஆர்வமாக இருந்த முத்துசாமி, ஆல்-ரவுண்டராக வலம் வந்தார். இவர் 2019ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணத்தின்போது தான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முத்துசாமி விளையாடும் 8வது டெஸ்ட் போட்டி இதுவாகும். தவிர நடப்பாண்டில்தான் அவர் ஓடிஐ மற்றும் டி20ஐ போட்டிகளிலும் அறிமுகமானார். இதுவரை 5 ஓடிஐ போட்டிகள் மற்றும் 5 டி20ஐ போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்டில் 12 இன்னிங்ஸில் 22 விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார்.ஐபிஎல் தொடரில் சேனுரன் முத்துசாமி விளையாடியதே இல்லை. இடது கை பேட்டர் மற்றும் இடது கை ஆல்-ரவுண்டரான இவர்கடந்த முறை பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே, சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை தேடும் சிஎஸ்கேவுக்கு முத்துசாமி நல்ல ஆப்ஷன்தான். சிஎஸ்கேவுக்கு 4 வெளிநாட்டு வீரர்கள் இன்னும் தேவை. சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் மேக்ஸ்வெல் அல்லது லிவிங்ஸ்டன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இவரை ரூ.1 கோடி - ரூ.2 கோடிக்கு எடுத்து பேக்அப்பாக வைக்கலாம். இவரிடம் பின்வரிசையில் இருந்து பேட்டிங்கும் கிடைக்கும், நான்கு ஓவர்கள் சிறப்பாகவும் வீசக்கூடியவர். மேலும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டிருக்கிறார் என்பதால் இவரை எடுத்தால் அதுவும் சிறப்பானதாக அமையும்.மேலும் படிக்க | IND vs SA: 2வது போட்டி காலையில் சீக்கிரமே தொடங்குவது ஏன்? பின்னணி இதுதான்...!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.senior citizensCentral Government Pensionersஊழியர் பணி நீக்கம், வீட்டில் இருந்து வேலை விதிமுறையில் மிகப்பெரிய மாற்றம்!மாறும் சம்பளக் கணக்கீடு: ஐடி துறை ஊழியர்களுக்கு வரவிருக்கும் ஜாக்பாட் சலுகைகள்!விஜயகாந்த் இறப்பிற்கு போகாத வடிவேலு..காரணம் இதுதான்! பிரபலம் சொன்ன தகவல்..சொந்த முகவரியில் வசிக்காத தமிழக வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Who Is Senuran Muthusamy Team India CSK CSK Might Target Senuran Muthusamy In IPL 2026 Mi IPL 2026 Mini Auction IPL Mini Auction IPL 2026 Chennai Super Kings Senuran Muthusamy Scores Ton Against Team India IND Vs SA India Vs South Africa IND Vs SA 2Nd Test Score Updates Senuran Muthusamy Tamilnadu Relation சேனுரன் முத்துசாமி யார் இந்த சேனுரன் முத்துசாமி இந்திய அணி சிஎஸ்கே சேனுரன் முத்துசாமியை CSK ஏலத்தில் எடுக்கும் ஐபிஎல் 2026 ஐபிஎல் மினி ஏலம் ஐபிஎல் 2026 மினி ஏலம் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்த சேனுரன் முத்துச இந்தியா தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் போட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த சேனுரன் முத்துசாமி

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

CSK-ல் தொடங்கி CSK-ல் முடித்த இந்த 4 பேர்... தோனிக்கு ரொம்ப ஸ்பெஷலான வீரர்கள்CSK-ல் தொடங்கி CSK-ல் முடித்த இந்த 4 பேர்... தோனிக்கு ரொம்ப ஸ்பெஷலான வீரர்கள்CSK: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடத் தொடங்கி, கடைசியில் சிஎஸ்கேவிலேயே ஓய்வும் பெற்ற இந்த 4 நட்சத்திர வீரர்கள்
Read more »

CSK मध्ये मोठा बदल! अश्विनच्या बदल्यात येणार 'हा' टीम इंडियाचा महत्त्वाचा खेळाडू?CSK मध्ये मोठा बदल! अश्विनच्या बदल्यात येणार 'हा' टीम इंडियाचा महत्त्वाचा खेळाडू?IPL 2026: चेन्नई सुपर किंग्ज (CSK) आगामी आयपीएल सिझनसाठी मोठा निर्णय घेण्याच्या तयारीत आहे.
Read more »

வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு செல்கிறாரா இல்லையா? உண்மையை விளக்கும் முன்னாள் வீரர்!வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு செல்கிறாரா இல்லையா? உண்மையை விளக்கும் முன்னாள் வீரர்!Washington Sundar Csk Trade: வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணி செல்கிறாரா இல்லாயா என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
Read more »

ஜடேஜா, சாம் கரன் இல்லை.. 2026 ஐபிஎல்லில் CSK பிளேயிங் 11 என்னவாக இருக்கும்?ஜடேஜா, சாம் கரன் இல்லை.. 2026 ஐபிஎல்லில் CSK பிளேயிங் 11 என்னவாக இருக்கும்?CSK: சிஎஸ்கே அணியின் ஐபிஎல் 2026க்கான பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
Read more »

IPL 2026 की नीलामी के लिए CSK की तैयारीIPL 2026 की नीलामी के लिए CSK की तैयारीचेन्नई सुपर किंग्स (CSK) IPL 2026 की नीलामी के लिए कमर कस रही है, टीम के पास अपनी टीम को मजबूत करने के लिए पर्याप्त धन है। रिटेंशन के बाद, टीम अगले सीज़न के लिए किन खिलाड़ियों पर दांव लगाएगी, यह एक महत्वपूर्ण सवाल है।
Read more »

'अपने लक को थैंक्स कहता हूं...', संजू सैमसन ने सुनाया धोनी से पहली मुलाकात का किस्सा'अपने लक को थैंक्स कहता हूं...', संजू सैमसन ने सुनाया धोनी से पहली मुलाकात का किस्सासंजू सैमसन ने बताया कि वह हमेशा एमएस धोनी के साथ रहने और उनसे सीखने की इच्छा रखते थे. CSK में शामिल होने के बाद उनकी यह इच्छा पूरी हो गई है. उन्होंने अपनी पहली मुलाकात, धोनी के आसपास रहने की मुश्किलें और अब उनसे एक ही ड्रेसिंग रूम साझा करने को लेकर उत्साह व्यक्त किया.
Read more »



Render Time: 2026-04-02 13:23:14