Tamil Nadu electricity bill : தமிழ்நாட்டு மக்கள் தங்களின் மின் கட்டண பில்களை ஆன்லைனில் டவுன்லோடு செய்யலாம். எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu electricity bill : தமிழ்நாட்டு மக்கள் தங்களின் மின் கட்டண பில்களை ஆன்லைனில் டவுன்லோடு செய்யலாம். எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்பழைய மின்கட்டண பில்களை பதிவிறக்கலாம்நகை பிரியர்களுக்கு ஷாக்! இனி இந்த நகைகளை வாங்குவது கஸ்டம்.
. புது ரூல்ஸ் போட்ட அரசுபிக்பாஸ் 9 : இந்த வார எவிக்ஷன் யார்? அய்யோ இவரா! முக்கியமான போட்டியாளராச்சே..! Tamil Nadu electricity bill : தமிழ்நாடு மின்சார வாரியம், பொதுமக்களுக்கு உகந்த வகையில் சேவைகளை எளிமையாக கொண்டு சேர்க்கும் வகையில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால், பொதுமக்கள் தங்களின் மின் கட்டணங்களை செலுத்த தமிழ்நாடு அரசின் மின் வாரிய அலுவலங்களுக்கு செல்லத் தேவையில்லை. அங்கு லைன்களில் நிற்க தேவையில்லை. உங்களிடம் ஒரு செல்போன் இருந்தாலே ஆன்லைனில் எளிமையாக மின் கட்டணங்களை நொடியில் செலுத்திவிட முடியும்.இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது ஒரு முக்கிய அறிவிப்பை பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளது. அதில், மின்சார வாரியத்தின் TNPDCL செயலி மூலம் மின்கட்டணம் செலுத்துவது முதல் பழைய ரசீதுகளை எல்லாம் பதவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோரிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். உங்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட அடிப்படை தகவல்களை உள்ளிட்டு லாகின் செய்யுங்கள். அதன்பிறகு, மின்சார இணைப்பு எண், மொபைல் எண் உள்ளிட்டவற்றை கொடுத்து உங்களின் மின் கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள்.இதை செய்து முடித்தவுடன் உங்களின் மின் கட்டணம் தொடர்பான அறிவிப்புகள் எல்லாம் மாதம் மாதம் TNPDCL செயலியில் சரியாக வந்துவிடும். அந்த செயிலி வழியாகவே உங்களின் மின் கட்டணத்தை எளிமையாக செலுத்திவிடவும் முடியும். இதுதவிர, உங்களின் மின் கட்டண ரசீதுகளை எல்லாம் TNPDCL செயலியில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ செயலி என்பதால் மக்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம் என்று மின்சார வாரியம் கூறியுள்ளது. இதுதவிர இன்னும் பல சேவைகளை இந்த செயலி வழியாகவும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.இந்த தகவலுடன் சில முன்னெச்சரிக்கைகளையும் மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், மழைக்காலமாக இருப்பதால், அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொடுவது, மிதிப்பது தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மின் கம்பம் அருகில் செல்வதை தவிர்க்கவும். மின் கம்பத்தினை தொடுவதை தவிர்க்கவும், தெரு மற்றும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் நடப்பதை தவிர்க்கவும் என்றும் மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.மேலும், மின் சேவைகள் மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க | இலவச லேப்டாப் : இன்று தொடங்கி வைத்த முதலமைச்சர் - மாணவர்களுக்கு குட் நியூஸ் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.8th Pay CommissionMK Stalinமினி ஏலத்தில் DC குறிவைக்கும் 3 அதிரடி ஓபனர்கள்... கிடைக்கப்போவது யாரு?Green Ration Card | இலவச அரிசி & மகளிர் உரிமைத் தொகை: கிரீன் ரேஷன் கார்டு பற்றிய முழு விவரம்!senior citizensCentral Government Pensionersஊழியர் பணி நீக்கம், வீட்டில் இருந்து வேலை விதிமுறையில் மிகப்பெரிய மாற்றம்!
TN EB Receipts Online மின் கட்டண பில் பதிவிறக்கம் மின் கட்டண ரசீது திமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார வாரியம் லேட்டஸ்ட் அறிவிப்புகள் TNPDCL App Features TNEB Payment Online Old Power Bill Tamil Nadu Electricity Consumer Services TN Bill History Download TN Electricity Alerts Public Safety Rain Warning 94987 94987 Helpline
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
तमिलनाडु में अगले साल 3 बार होगा TET एग्जाम: क्लास 1 से 8 के सभी टीचर्स देंगे; SC ने कहा था- TET करें या ...TET exam will be held thrice in Tamil Nadu next year after Supreme Court Ruling
Read more »
தீபாவளி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புTamil Nadu Government : தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிக்க விதிக்கப்பட்டுள்ள நேரக்கட்டுப்பாடு குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Read more »
முத்துராமலிங்க தேவர் குருபூஜை : பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகள்Tamil Nadu Govt : முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை? வானிலை மையம் அப்டேட்!Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை சென்னை உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »
பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு! தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்Tamil Nadu Government : திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் பட்டதாரிகள் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
Read more »
திருவிழாக்களில் ராட்சத ராட்டினம் - அரசு வெளியிட்ட முக்கிய தகவல்Tamil Nadu government : திருவிழாக்களில் ராட்சத ராட்டினம் வைப்பதற்கான கட்டுபாடுகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
Read more »
