மேகதாது அணை வழக்கு : தமிழ்நாடு அரசின் முழு விளக்கம்

Mekedatu Dam Case News

மேகதாது அணை வழக்கு : தமிழ்நாடு அரசின் முழு விளக்கம்
Supreme CourtTamil Nadu ClarificationDurai Murugan Statement
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 256 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 158%
  • Publisher: 63%

Mekedatu dam case : மேகதாது அணை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முழு விளக்கம் கொடுத்துள்ளார்.

Mekedatu dam case : மேகதாது அணை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முழு விளக்கம் கொடுத்துள்ளார்.8வது ஊதியக்குழு: 80%-157% சம்பள உயர்வு!! லெவல் 1-3 மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்8வது ஊதியக்குழு: குஷியில் அரசு ஊழியர்கள், 157% சம்பள உயர்வு சாத்தியம், காரணம் இதுதான்Mekedatu dam case : இது தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்காக மாண்பமை உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக வெளிவரும் தகவல்களில் எள்ளளவும் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஓர் அணையை மேகதாதுவில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக அரசு தன்னிச்சையாகத் தயாரித்து, மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 2018ஆம் ஆண்டில் சமர்ப்பித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.இத்திட்டத்தை மேற்கொள்வதற்காகத் தேவைப்படும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைக்கான ஆய்வு வரம்புகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காக, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சசுத்தை கர்நாடக அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு அணுகிய போது, மற்றொரு மனுவை மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து தமிழ்நாடு அரசு அதைத் தடுத்து நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து, கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் மேகதாது திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியபோது, தமிழ்நாடு அரசு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, அதற்கான எந்தவிதமான அனுமதியையும் அளிக்கக்கூடாது என்று ஒன்றிய அரசையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 21-3-2022 அன்று ஒருமனதாக தீர்மானத்தையும் இந்த அரசு நிறைவேற்றியது. மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களை 31-3-2022 மற்றும் 26-5-202 அன்று நேரில் சந்தித்த போது மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என ஒன்றிய ஜல்சக்தி அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் வலியுறுத்தினார். இந்த காலக்கட்டத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு, கர்நாடக அரசின் கருத்துருவை பரிசீலிக்க அதிகாரம் உள்ளது என ஒன்றிய அரசு கருத்து தெரிவித்ததையடுத்து, இந்த விரிவான அறிக்கை பற்றிய பொருண்மைகள் இந்த ஆணையத்தின் விவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்ட போதும், இதனை பரிசீலிப்பதற்கான அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு இல்லை என்பதை வலியுறுத்தி மேலும் ஒரு மனு 7-6-2022 அன்று தமிழ்நாடு அரசால் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறு தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் அடிப்படையில், அன்றிலிருந்து இன்றுவரை காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை விவாதிக்கப்படவில்லை. மேலும், தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு தொடர் முயற்சிகளின் பயனாக, மேகதாது அணை பற்றிய கருத்துருவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 9-2-2024 அன்று திருப்பியனுப்பியது. இது தமிழ்நாடு அரசின் முயற்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். இந்த சூழ்நிலையில், மேகதாது அணை குறித்துப் பேசிய கர்நாடக மாநில முதலமைச்சர், இந்த பாசன ஆண்டு 2025-2025இல் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய நீரின் அளவை விட கூடுதலாக நீர் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ள கூற்று எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடிய ஆண்டுகளில் வேறுவழியின்றி தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு நீரைத் திறந்து விடுகிறதேயன்றி, வறட்சி ஆண்டுகளில் நமக்கு விகிதாச்சாரப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவிற்கான நீர் வழங்கப்படுவது இல்லை என்பதையும், மேகதாது அணை கட்டப்பட்டால் வறட்சி ஆண்டுகளில், நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீர் கிடைக்காத சூழல் உருவாகும் என்பதையும் அனைவரும் அறிவார்கள். எனவே, மேகதாதுவில் அணை கட்டப்படுவது என்பது, தமிழ்நாட்டு விவசாயிகளை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குவதோடு, காவிரி நதிநீர்ப் பிரச்சினை தொடர்பான நடுவர் மன்றம் மற்றும் மாண்பமை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முரணாகவும் அமையும் என்பதே நிதர்சனமான உண்மையாகும். இந்நிலையில், இந்த அணை தொடர்பான வழக்குகளை விசாரித்த மாண்பமை உச்சநீதிமன்றம். இன்று மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் கருத்துக்கள் அனைத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளக் குழுமத்திடம் தெரிவிக்கலாம் என்றும், தமிழ்நாடு அரசின் கருத்துக்களைக் கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், வெற்றிகரமாக மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தியதைப் போன்றே. இனியும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமும், மத்திய நீர்வளக் குழுமத்தின் முன்பும் தமிழ்நாடு அரசு தனது வலுவான வாதங்களை முன்வைக்க உள்ளது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மாண்பமை உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாக சில தவறான தகவல்கள் வெளிவருவது கண்டிக்கத்தது என்பதையும், இத்தகவலில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்படும் திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரை, காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து மாண்பமை உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் எந்தவொரு முயற்சியையும், தமிழ்நாடு அரசு முளையிலேயே கிள்ளி எறியும் என அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்! 16 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.Farmersபாதி விலையில் கிடைக்கும் சாம்சங்கின் பிரீமியர் போன்: அமேசான், பிளிப்கார்ட்டில் அதிரடிThalaivar 173Zodiac Signsதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்: கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு ஆயத்தப் பணிகள் தீவிரம்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Supreme Court Tamil Nadu Clarification Durai Murugan Statement Cauvery Water Dispute மேகதாது அணை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் TN Vs Karnataka Water Issue Supreme Court Mekedatu உச்சநீதிமன்றம் காவிரி நீர் விவகாரம் தமிழ்நாடு அரசு விளக்கம் காவிரி வழக்கு மேகதாது அணை லேட்டஸ்ட் நியூஸ் CWMA Mekedatu Update Tamil Nadu Agriculture Water Rights

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Bengaluru lecturer tragic incident: হিম যৌনতায় নৃশংস স্বামী! চাহিদা, আরও টাকা আনো... অতিষ্ঠ যুবতী অধ্য়াপিকার ভিডিয়োয় আকুতি লিখেই ঝাঁপালেন নদীতে...Bengaluru lecturer tragic incident: হিম যৌনতায় নৃশংস স্বামী! চাহিদা, আরও টাকা আনো... অতিষ্ঠ যুবতী অধ্য়াপিকার ভিডিয়োয় আকুতি লিখেই ঝাঁপালেন নদীতে...Harassed for dowry lecturer ends her life at Ghati dam near Bengaluru
Read more »

SIR Controversy: ব্যাগ খুব ভারী, বাড়ি বাড়ি যাওয়ার বদলে BLO-র আজব কীর্তি! বিতর্ক...SIR Controversy: ব্যাগ খুব ভারী, বাড়ি বাড়ি যাওয়ার বদলে BLO-র আজব কীর্তি! বিতর্ক...jalpaiguri news SIR controversy BLO accused of distributing sir forms while sitting on a table and chair set up on the dam
Read more »

सुप्रीम कोर्ट का फैसला- नेशनल-स्टेट हाईवे से आवारा पशु हटाएं: कुत्तों से निपटने के लिए अस्पतालों, स्कूलों औ...सुप्रीम कोर्ट का फैसला- नेशनल-स्टेट हाईवे से आवारा पशु हटाएं: कुत्तों से निपटने के लिए अस्पतालों, स्कूलों औ...Supreme Court Stray Dog Suo Moto Case Case Hearing Update;
Read more »

SSC Case Update: মাথায় বাজ SSC চাকরিপ্রার্থীদের! ১০ নম্বর সংক্রান্ত এসএসসি মামলায় বিস্ফোরক রায় আদালতের...SSC Case Update: মাথায় বাজ SSC চাকরিপ্রার্থীদের! ১০ নম্বর সংক্রান্ত এসএসসি মামলায় বিস্ফোরক রায় আদালতের...SSC 2016 panel 10 marks related case update is pending and absolutely depends on main case
Read more »

Mekedatu: कर्नाटक सीएम ने मेकेदातु परियोजना पर फिर दिया जोर, तमिलनाडु की आपत्ति पर भी दिया जवाबMekedatu: कर्नाटक सीएम ने मेकेदातु परियोजना पर फिर दिया जोर, तमिलनाडु की आपत्ति पर भी दिया जवाबकर्नाटक के मुख्यमंत्री सिद्धारमैया ने मंगलवार को एक बार फिर मेकेदातु परियोजना पर जोर दिया। बंगलूरू में पानी की समस्या को हल करने के लिए यह कर्नाटक सरकार की महत्वकांक्षी योजना है और यही
Read more »

SSC: BIG UPDATE: অতিরিক্ত ১০ নম্বর কি সবাই পাচ্ছেন?... SSC শুনানি চলাকালীন-ই ঐতিহাসিক নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার...SSC: BIG UPDATE: অতিরিক্ত ১০ নম্বর কি সবাই পাচ্ছেন?... SSC শুনানি চলাকালীন-ই ঐতিহাসিক নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার...SSC case in Kolkata High Court extra 10 number case update live streaming order
Read more »



Render Time: 2026-04-01 20:35:19