7th Pay Commission DA Hike: அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு. டிஏ உயர்வு எவ்வளவு இருக்கும்?
7th Pay Commission DA Hike: இந்த அறிவிப்பால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்திலும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்திலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படக்கூடும். டிஏ உயர்வு எவ்வளவு இருக்கும்?12ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? இந்த கோர்ஸ்கள் உயர் சம்பளத்திற்கான வாய்ப்புகளை தரும்!2025யில் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள்! குறிப்பாக இந்த நடிகைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா!Astro Traitsமத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது.
மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இன்று ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி கிடைக்கக்கூடும். ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்திற்கான அறிவிப்பு இன்று வரக்கூடும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவராண அதிகரிப்புக்காக காத்திருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு இன்று வரலாம் என கூறப்படுகின்றது. இந்த அறிவிப்பால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்திலும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்திலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படக்கூடும்.அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி குறித்து முடிவு எடுக்கப்படக்கூடும் என கூறப்படுகின்றது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று அதாவது மார்ச் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அகவிலைப்படியை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம். கடந்த ஆண்டும் மார்ச் மாதத்தில் ஹோலிக்கு முன்பு அரசாங்கம் அகவிலைப்படியை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலிக்கு முன் இந்த பரிசு கிடைக்கக்கூடும்.இந்த முறை அகவிலைப்படி 2% அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது நடந்தால், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 53% -இலிருந்து 55% ஆக அதிகரிக்கும்.அரசாங்கம் இன்று அகவிலைப்படியை அதிகரித்தால், அது ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வருவதாக கருதப்படும். மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை அதிகரிக்கிறது. பெரும்பாலும், ஜனவரி மாத டிஏ உயர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் ஹோலி பண்டிகையையொட்டியும் ஜூலை மாத அகவிலைப்படி அதிகரிப்பின் அறிவிப்பு நவராத்திரி பண்டிகையை ஒட்டியும் வெளிவரும்.அறிவிப்பு எப்போது வந்தாலும், ஜனவரி 2025 முதலான அகவிலைப்படி அரியர் மற்றும் அகவிலை நிவாரண நிலுவைத் தொகை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும்.கடந்த முறை, ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் வந்தது. அப்போது டிஏ 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அது ஜூலை 1 முதல் செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு மொத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக அதிகரித்தது. அதற்கு முன்பு, மார்ச் 2024 இல், அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இப்போது அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தில் 53 சதவீதமாக உள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணமும் 53 சதவீதமாக உள்ளது.மேலும் படிக்க | EPFO: ஓய்வுக்கு பிறகு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்.... விதிகள் கூறுவது என்ன... எளிய கணக்கீடு இதோ உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் பதஞ்சலி! புதிய திட்டம் இதுதான்!VijayakanhNPS vs UPS: அரசு ஊழியர்களுக்கு எது பெஸ்ட்? அனைத்து அம்சங்களிலும் முழுமையான ஒப்பீடு இதோ7th pay commission
Big News Dearness Allowance Da Hike Expected Today Da Hike Cabinet Meeting Central Government Employees Pensioners Dearness Relief 7Th Pay Commission DA Hike 7Th Pay Commission Latest News DA Hike Latest News Da Hike News In Tamil Business News In Tamil 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு அகவிலைப்படி அதிகரிப்பு ஊழியர்கள் முக்கிய அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் டிஏ உயர்வு அகவிலைப்படி அகவிலை நிவாரணம் டிஏ அரியர் 7Th Pay Commission News In Tamil
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்சில் டபுள் ஜாக்பாட்: மீண்டும் அகவிலைப்படி உயர்வு7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கவுள்ளது. மார்சில் முக்கிய அறிவிப்பு. டிஏ உயர்வு எவ்வளவு இருக்கும்?
Read more »
பழைய ஓய்வூதிய திட்டம் வருமா?அதிருப்தியில் அரசு ஊழியர்கள்... ஸ்டாலின் போட்ட உத்தரவு?தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்கள் தொடர்ந்து அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
Read more »
இன்று அனைத்து கட்சி கூட்டம்.. சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா..! முக்கிய அப்டேட்ஸ்LIVE | இன்று அனைத்து கட்சி கூட்டம்.. சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா..! முக்கிய அப்டேட்ஸ்
Read more »
ஜாக்பாட் அறிவிப்பு.. கேஸ் சிலிண்டர் உள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்புLPG Cylinder News In Tamil: கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் டெலிவரி சார்ஜ் கொடுப்பது அவசியமா? எந்த எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது?
Read more »
பாஜக கூட்டணி அண்ணாமலைக்கு பதிலடி திமுக முக்கிய அறிவிப்புLIVE : அதிமுக - பாஜக கூட்டணி அண்ணாமலைக்கு பதிலடி திமுக முக்கிய அறிவிப்பு - இன்றைய அப்டேட்ஸ்
Read more »
ராணுவப் பள்ளியில் உங்கள் குழந்தைகள் படிக்க வாய்ப்பு - தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புIndian Military School Admission : இந்திய ராணுவ பள்ளியில் உங்கள் குழந்தைகள் படிக்க முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Read more »
