Best Monsoon Vegetables: மழைக்காலத்தில், பல வகையான சீசன் காய்கறிகள் சந்தையில் எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றில் சில முக்கிய காய்கறிகள் மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
Best Monsoon Vegetables : மழைக்காலத்தில், பல வகையான சீசன் காய்கறிகள் சந்தையில் எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றில் சில முக்கிய காய்கறிகள் மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.இவற்றால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?கொரோனா போல்தான் குரங்கு அம்மையும்: எச்சரிக்கும் நிபுணர்கள், WHO கொடுத்த கிரேட் 3 அலர்ட்மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் பரிசு: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுசுக்கிரன் வீட்டை மாற்றினால் பிரச்சனை வீடு தேடி வரும்! கன்னி சுக்கிரனால் நஷ்டப்படப்போகும் ராசிகள்! மழைக்காலம் பொதுவாக அனைவருக்கும் பிடித்தமான காலமாக உள்ளது.
மழை என்றால் அனைவருக்கும் குதூகலமான உணர்வுதான் ஏற்படுகின்றது. மழைக்காலம் இயற்கைக்கு புதிய தோற்றத்தை தருவதோடு மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை அள்ளித் தருகிறது. இந்த பருவத்தில் விளையும் புதிய காய்கறிகள் சுவையானவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகவும் இருக்கின்றன. குறிப்பாக மழைக்காலத்தில் சில காய்கறிகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மழைக்காலத்தில் எந்தெந்த காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்? இவற்றால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.மழைக்காலத்தில், பல வகையான சீசன் காய்கறிகள் சந்தையில் எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றில் சில முக்கிய காய்கறிகள் மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம். சுரைக்காய்: சுரைக்காயில் ஏராளமான நீர்ச்சத்து உள்ளது. இந்த காரணத்தால் இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, சுரைக்காயில் வைட்டமின் சி -யும் அதிகமாக உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. பீர்க்கங்காய்: பீர்க்கங்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிப்பதுடன் செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. வெண்டைக்காய்: வெண்டைக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்த சோகையிலிருந்து பாதுகாப்பதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. பூசணிக்காய்: பூசணிக்காயில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வைக்கு நல்லது. இது தவிர இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றது. பாகற்காய்: பாகற்காயின் சுவை கசப்பாக இருந்தாலும் இதில் பல வித மருத்துவ குணங்கள் உள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகப்படியான நன்மைகளை செய்வதோடு செரிமான பிரச்சனைகளுக்கு நன்மை பயக்கும்.மழைக்காலத்தில் அதிக அளவில் காய்கறிகளை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் செரிமானம் சீராகும்: மழைக்கால காய்கறிகளில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இவற்றை உட்கொள்வது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது: மழைக்கால காய்கறிகளில் வைட்டமின் சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் பிற ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. இவை தொற்றுகளிலிருந்து நம்மை காக்க உதவும். சருமத்திற்கு நன்மை பயக்கும்: பூசணி மற்றும் கேரட் போன்ற சில காய்கறிகள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் உதவுகின்றன.கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கின்றன. இவற்றை உட்கொள்வதால், நீண்ட நேரத்திற்கு நிரம்பிய உணர்வு இருப்பதால், அடிக்கடி எடுக்கும் பசி தவிர்க்கப்படுகின்றது. இது எடை இழப்பில் உதவுகிறது. உஷ்ணத்திலிருந்து நிவாரணம்: மழைக்கால காய்கறிகளில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இவை உதவுகின்றன.மழைக்காலத்தில் பச்சை இலை காய்கறிகள் போன்ற சில காய்கறிகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இவற்றில் பாக்டீரியா வளரும் அபாயம் அதிகம் இருக்கும். இது தவிர, செரிமானமாக கடினமாக இருக்கும் காய்கறிகளையும் தவிர்க்க வேண்டும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Aavin factory accidentகிராஜுவிட்டி கணக்கீட்டில் நோட்டீஸ் பீரியடும் சேர்க்கப்படுமா? இதற்கான விதிகள் என்ன?இரவில் கவலையை மறந்து... அசந்து தூங்க வேண்டுமா... படுக்கைக்கு முன் இதனை பின்பற்றுங்கள்!Jay ShahMK stallinசெப்டம்பர் மாத ராசிபலன்! ஐபோன் 16 வாங்கும் அளவு பணம் வந்து குவியும்! அதிர்ஷ்டக்கார ராசி...ஆம்ஸ்ட்ராங் வழக்கு: கைமாறியதா ரூ.75 லட்சம்...? நெல்சன் மனைவி மறுப்பு - முழு விளக்கம்
Best Monsoon Vegetables Monsoon Vegetables Vegetables Benefits Monsoon Vegetables Benefits Benefits Of Vegetables In Monsoon Health Tips Health Tips In Tamil சுரைக்காய் பீர்க்கங்காய் வெண்டைக்காய் பூசணிக்காய் பாகற்காய் செரிமானத்தை Digestion நோய் எதிர்ப்பு சக்தி Immunity சரும ஆரோக்கியம் Skin Care எடை இழப்பு Weight Loss
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மழைக்காலத்தில் காரை பத்திரமாக பார்த்து கொள்வது எப்படி? எளிய வழிகள் இதோ!கார் இன்சூரன்ஸ் திட்டங்கள் மழைக்காலத்தில் அதிகம் உதவுகின்றன. பருவ காலநிலையில் உங்கள் கார் பாதுகாப்பாக இருக்க இந்த இன்சூரன்ஸ் உதவுகிறது.
Read more »
கல்லீரலை கச்சிதமாய் காக்கும் காபி: ஆனால், ஒரு நாளைக்கு இவ்வளவுதான்Benefits of Coffee in Liver Diseases: காபி, டீ என இரண்டிலுமே நல்ல பலன்களும் உள்ளன, தீய விளைவுகளும் உள்ளன. காபியின் ஒரு முக்கியமான நன்மை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »
மழைக்காலத்தில் ஷூ, செப்பல் அதிகம் அழுக்காகிறதா? எளிதாக சுத்தம் செய்ய டிப்ஸ்!மழைக்காலத்தில் சேறு மற்றும் சகதியில் நமது காலணிகள் அதிகம் அழுக்காக வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் தண்ணீர் இல்லாமல் பின்வரும் வழிகளில் சுத்தம் செய்யலாம்.
Read more »
இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகளும் பக்க விளைவுகளும்: முழு பட்டியல் இதோBenefits of Ginger: இஞ்சியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை உட்கொள்வதால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படுகின்றது.
Read more »
இதய ஆரோக்கியம் முதல் உடல் பருமன் வரை... முளை கட்டிய தானியங்களை மிஸ் பண்ணாதீங்கமுளை கட்டிய தானியங்களின் ஆரோக்கிய நன்மைகள்: முளை கட்டுவதால் தானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாகும். இந்த முளை கட்டிய தானியங்கள் அனைத்தும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை.
Read more »
மழைக்காலத்தில் வாக்கிங் செல்லும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!Rainy Season: மழைக்காலத்தில் மலேரியா பாதிப்புகளை ஏற்படுத்தும் கொசுக்கள் அதிகம் இருக்கும். எனவே இந்த சமயத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கைகள் தேவைப்படுகிறது.
Read more »
