இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகளும் பக்க விளைவுகளும்: முழு பட்டியல் இதோ

Ginger News

இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகளும் பக்க விளைவுகளும்: முழு பட்டியல் இதோ
Home RemediesHealthHealth Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 141 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 154%
  • Publisher: 63%

Benefits of Ginger: இஞ்சியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை உட்கொள்வதால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படுகின்றது.

Benefits of Ginger : இஞ்சி யில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை உட்கொள்வதால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படுகின்றது. Benefits of Ginger : ஆயுர்வேதத்தில் இஞ்சி ஒரு நல்ல மருந்தாக கருதப்படுகின்றது. நாம் நமது சமையலில் பயன்படுத்தும் இஞ்சி உணவின் சுவையை அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற பல வித ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள இஞ்சி குறிப்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பல வழிகளில் அதிகப்படுத்துகின்றது. இஞ்சி உட்கொள்வதால் நம் உடலுக்கு கிடைக்கும் பல வித ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இஞ்சியை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது. இதை உட்கொள்வதால், நோய்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் அதிகரிக்கின்றது. உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல பண்புகள் இஞ்சியில் உள்ளன. அஜீரணம், குமட்டல் போன்ற சங்கடங்கள் ஏற்பட்டால் இஞ்சியை உட்கொள்வது பெரிய அளவில் நிவாரணம் அளிக்கும். வாயுத்தொல்லையை சீராக்கவும் இது உதவுகின்றது. உடல் எடையை குறைக்கவும் இது நல்ல வீட்டு வைத்தியமாக உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பதால் கலோரிகள் வேகமாக எரிக்கப்படும். இதனால் தொப்பை கொழுப்பையும், உடல் எடையை குறைக்கலாம். இதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடிப்பது அதிக பலன்களை அளிக்கும். இஞ்சி டீ சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கின்றது. இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரையும் குடிக்கலாம். குறிப்பாக, மழை காலங்களில், பருவ மாற்றத்தால் ஏற்படும் சளி, இருமலுக்கு இது மிகவும் உதவும்.உடலில் ஏற்படும் வலிகளை குறைப்பதில் இஞ்சி உதவுகிறது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியில் இஞ்சி பெரிய அளவில் நிவாரணம் அளிக்கின்றது. ஒரு ஆய்வில், 60 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் இஞ்சி வலியைக் குறைப்பதாக உணர்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. மூட்டுவலியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இஞ்சி ஒரு மருந்தாக உதவுகின்றது.நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் இஞ்சியை குறைவாக சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சில மருத்துவ குணங்களின் தொடர்பு காரணத்தால், அதிகமாக இஞ்சியை உட்கொள்வது இந்த மருந்துகளின் செயல்திறனைக் குறைத்து, பாதகமான பலன்களை ஏற்படுத்தக்கூடும்.கர்ப்பிணிப் பெண்கள் இஞ்சி சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். இதனால் கருச்சிதைவு அபாயம் அதிகரிக்கலாம் என சில நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக இதை கண்டிப்பாக அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. ஒவ்வாமை: பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதை அதிகமாக உட்கொள்வது சொறி, அரிப்பு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். சருமத்தில் ஒவ்வாமை பிரச்சினைகள் உள்ளவர்கள், இதை அதிகமாக உட்கொள்வதை தவிர்ப்ப்பது நல்லது.பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.இன்னும் 15 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. ராஜாதி ராஜ பொற்காலம், நல்ல அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குஇன்னும் 7 நாட்களில் சனி பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம், பொற்காலம் இந்த ராசிகளுக்குஇன்னும் 14 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, மாக அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவையே

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Home Remedies Health Health Tips Side Effects Benefits Of Ginger Ginger Benefits Side Effects Of Ginger Immunity Digestion Weight Loss Pain Killer Blood Thinner Pregnant Women Allergy Health Tips Health Tips In Tamil இஞ்சி இஞ்சி நன்மைகள் இஞ்சி பக்க விளைவுகள் நோய் எதிர்ப்பு சக்தி செரிமானம் எடை இழப்பு தொப்பை கொழுப்பு வலி நிவாரணி இரத்தத்தை மெலிதாக்கும் கர்ப்பிணிப் பெண்கள் ஒவ்வாமை

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

நோய்கள், தொற்றுகள்...அனைத்தையும் சொல்லி அடிக்கும் நெல்லிக்காய்: ஆரோக்கிய நன்மைகள் இதோநோய்கள், தொற்றுகள்...அனைத்தையும் சொல்லி அடிக்கும் நெல்லிக்காய்: ஆரோக்கிய நன்மைகள் இதோHealth Benefits of Eating Amla: நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி ஆயுர்வேதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
Read more »

Budget 2024: நிபுணர்கள் எதிர்பார்க்கும் முக்கிய அறிவிப்புகள்... முழு பட்டியல் இதோBudget 2024: நிபுணர்கள் எதிர்பார்க்கும் முக்கிய அறிவிப்புகள்... முழு பட்டியல் இதோBudget 2024: தரகு நிறுவனங்கள், பொருளாதார நிபுணர்கள், பட்ஜெட் வல்லுநர்கள், அரசாங்க வட்டாரங்கள் என பல இடங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த பட்ஜெட் குறித்து இருக்கும் முக்கிய எதிர்பார்ப்புகள் பற்றி இங்கே காணலாம்.
Read more »

பெண் குழந்தை உள்ள பெற்றோருக்கான அட்டகாசமான LIC Policy: முழு விவரம் இதோபெண் குழந்தை உள்ள பெற்றோருக்கான அட்டகாசமான LIC Policy: முழு விவரம் இதோLIC Policy: எல்ஐசி கன்யாதான் திட்டத்தின் மூலம், உங்கள் மகளின் எதிர்காலத்திற்காக ரூ. 22.5 லட்சம் அல்லது அதற்கு மேல் சேர்க்க முடியும். இதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தின் மூலம், வரிச் சலுகைகள், கடன் வசதி மற்றும் இன்னும் பல சலுகைகளையும் பெறலாம்.
Read more »

பட்ஜெட்டில் பெண்களுக்கு வந்த முக்கிய அறிவிப்புகளை கவனித்தீர்களா? முழு லிஸ்ட் இதோபட்ஜெட்டில் பெண்களுக்கு வந்த முக்கிய அறிவிப்புகளை கவனித்தீர்களா? முழு லிஸ்ட் இதோBudget 2024: பெண்கள் சார்ந்த முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் நலத்திட்டங்களுக்காக 3 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Read more »

தினமும் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகளை சந்திப்பீர்கள்..!தினமும் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகளை சந்திப்பீர்கள்..!Lifestyle Tips : உடற்பயிற்சி தினமும் செய்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்றாலும், அதனை செய்யாதபோது பல ஆரோக்கிய பிரச்சனைகளை கட்டாயம் சந்திக்க வேண்டியிருக்கும்.
Read more »

மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: 3% டிஏ ஹைக், பம்பர் ஊதிய உயர்வு.. முழு கணக்கீடு இதோமத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: 3% டிஏ ஹைக், பம்பர் ஊதிய உயர்வு.. முழு கணக்கீடு இதோ7th Pay Commission:ஜூலை மாதம் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருந்தார்கள். இப்போது அது குறித்த தெளிவு கிடைத்துள்ளது.
Read more »



Render Time: 2026-04-02 07:32:44