Health Benefits of Eating Amla: நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி ஆயுர்வேதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
Health Benefits of Eating Amla : நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி ஆயுர்வேதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
குரு ஆட்டம் இன்னும் 82 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்வக்ரமடையும் குரு... ‘இந்த’ ராசிகளுக்கு கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி..!!8வது ஊதியக்குழு, டிஏ அரியர், ஓபிஎஸ்: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் ஜாக்பாட் நாம் தினமும் உட்கொள்ளும் காய்கள் மற்றும் பழங்கள் மூலமாகவே நமது உடல் ஆரோக்கியத்தை நன்றாக பராமரிக்கலாம். இவை நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல வித நோய்கள் மற்றும் தொற்றுகளிலிருந்து நம்மை காக்கின்றன. பருவகால பழங்கள் மற்றும் காய்களை நமது டயட்டில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் பழங்களில் முக்கியமான ஒரு பழமாக இருக்கும் நெல்லிக்காயை பற்றியும், அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.நெல்லிக்காய் வைட்டமின் சி-இன் பவர் ஹவுஸாக கருதப்படுகின்றது. இது புளிப்பு சுவை கொண்ட பழமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல வித சத்துக்களின் பொக்கிஷமாகவும் உள்ளது. நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி ஆயுர்வேதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆரோக்கிய நன்மைகளின் பொக்கிஷமாக கருதப்படும் நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் 5 அற்புதமான நன்மைகளை பற்றி இங்கே காணலாம்.நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற சிறிய பிரச்சனைகளிலிருந்தும், பல பெரிய தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்தும் நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். இதுமட்டுமின்றி, உடலில் ஏற்படும் காயங்கள் விரைவாக குணமாகவும் இது உதவுகிறது.நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது உடலின் செரிமாத்தை சீராக்க உதவுகிறது. தினமும் நெல்லிக்காய் உட்கொண்டால் சரியான செரிமானத்தை பராமரிக்கலாம். இதன் மூலம், உடல் உப்பசம், மலச்சிக்கல், அமிலத்தன்மை ஆகிய பிரச்சனைகள் குணமாகி வயிறு சுத்தமாகும்.நெல்லிக்காயில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ கண்களுக்கு மிக முக்கியமான வைட்டமினாக பார்க்கப்படுகின்றது. தினமும் நெல்லிக்காய் உட்கொள்வதால் கண்பார்வை மேம்படுகிறது. இதுமட்டுமின்றி கண்புரை போன்ற பிரச்சனைகளின் அபாயத்தையும் இது குறைக்கிறது.நெல்லிக்காயும் கூந்தலின் ஆரோக்கியத்திலும் நன்மை பயக்கும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கூந்தலுக்கு ஊட்டமளித்து, அவை உதிராமல் தடுக்கின்றன. இது கூந்தலை அடர்த்தியாகவும், வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.அதிகமாக இருந்து, உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு நெல்லிக்காய் உதவியாக இருக்கும். இது கொழுப்பு எரியும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. மேலும், இது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு நீண்ட நேரத்திற்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது. இதன் காரணமாக நாம் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இந்த வகையில் நெல்லிக்காய் எடை குறைக்க உதவுகிறது.- இதை பச்சையாகவும் உட்கொள்ளலாம்.- சிலர் வெல்லம் சேர்த்து இதை சட்னியாகவும் செய்வார்கள்.- நெல்லிகாய் ஊறுகாய் பலருக்கு விருப்பமான ஒரு ரெசிபியாக உள்ளது. மேலும் படிக்க | கர்ப்பிணிப் பெண்களை அச்சுறுத்தும் டெங்கு: இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ind vs sl“வரலக்ஷ்மியின் முதல் காதல் நான் இல்லை..” தன் மனைவி குறித்து ஓபனாக பேசிய நிக்கோலாய்!இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்படும் ஹர்திக் பாண்டியா? மும்பை இந்தியன்ஸ் காரணமா?OTT releasesCell phoneஅருள் பாலிக்கும் கடவுளை பணக்காரராக்கும் பக்தர்கள்! இந்தியாவின் பணக்கார கோவில்கள்!
Amla Nellikkai Health Benefits Of Eating Amla Weight Loss Digestion Hair Care Immunity Eye Care நெல்லிக்காய் எடை இழப்பு செரிமானம் நோய் எதிர்ப்பு சக்தி கண்பார்வை கூந்த பராமரிப்பு Health Tips Health Tips In Tamil What Happens If We Eat Amla Daily What Are The Main Benefits Of Amla Who Should Not Eat Amla
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
தினமும் 1 ஆப்பில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 மேஜிக் நன்மைகள்!தினமும் 1 ஆப்பில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 மேஜிக் நன்மைகள்!
Read more »
பெண்களே தினமும் ஒரு ஸ்பூன் ஜாதிக்காய் சாப்பிடுங்கள்.. இந்த நோய்கள் வரவே வராதுHealth Benefits Jathikai: இன்று இந்த கட்டுரையில் ஜாதிக்காய் சாப்பிடுவதால் பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
Read more »
துளசியை பச்சையாக மென்று சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!துளசியை பச்சையாக மென்று சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!
Read more »
காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் 7 நன்மைகள்!காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் 7 நன்மைகள்!
Read more »
உருளைக்கிழங்கு சாற்றை தினமும் முகத்தில் தடவினால் இவ்வளவு நன்மைகளா?முகத்தில் ஏற்படும் பருக்கள் தொடங்கி, கருவளையங்கள் வரை உருளைக்கிழங்கு சாற்றை தினசரி முகத்திற்கு தடவி வந்தால் பல நன்மைகள் கிடைக்கிறது.
Read more »
இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
