Kalaignar Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை புதிய விண்ணப்பங்கள் நிராகரிப்பு தொடர்பாக பெண்களுக்கான முக்கிய தகவல்
Kalaignar Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை புதிய விண்ணப்பங்கள் நிராகரிப்பு தொடர்பாக பெண்களுக்கான முக்கிய தகவல் Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்தவர்கள் யாருடைய விண்ணப்பங்கள் எல்லாம் நிராகரிக்கப்படப்போகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ரூ.
1000 கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்து விண்ணப்பித்தவர்களில் யாரெல்லாம் அப்டேட்டுக்காக காத்திருக்க வேண்டியதில்லை என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முழுக்க முழுக்க ஏழை எளிய குடும்பங்களுக்காக உருவாக்கப்பட்டு, அந்த குடும்ப பெண்களுக்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுவதை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். தமிழ்நாடு அரசு சரியாக இத்திட்டத்தை செயல்படுத்தி வருவதாலும், மாந்தோறும் சரியாக ஆயிரம் ரூபாய் பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைத்துவிடுவதாலும், இத்திட்டத்தின் மீதான நம்பிக்கையும், எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு பெண்களிடம் அதிகரித்துவிட்டது. அதன் காரணமாகே கடந்த முறை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்கள் கூட, எப்போது இத்திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு வரும் என பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஜூலை 15 ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தவுடன் அவசர அவசரமாக மகளிர் உரிமைத்தொகை கேட்டு புதிதாக விண்ணப்பித்துள்ளனர், விண்ணப்பித்தும் வருகின்றனர். ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் பலர் புதிய ரேஷன் கார்டு கேட்டும் விண்ணப்பித்துள்ளனர். இந்த மனு எண்ணிக்கையும் இப்போது பல ஆயிரங்களாக அதிகரித்துள்ளது. அதாவது, ரேஷன் கார்டு வைத்திருக்கும் எல்லோரும் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என நினைத்து விண்ணப்பிக்கின்றனர். ஆனால், இங்கு தான் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவலே இருக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்றாலும், எல்லோரும் விண்ணப்பிக்க முடியாது. ஏனென்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு என பிரத்யேகமாக விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகளை பூர்த்தி செய்யாதவர்கள் கட்டாயம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தாலும், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். எல்லா தகுதிகளையும் பூர்த்தி செய்தால் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு அரசு அனைத்து துறைகளிலும் காலிப் பணியிடங்களுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறது. அவர்களின் குடும்பத்தினரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்திருக்கலாம். அப்படியானவர்களின் விண்ணப்பங்கள் எல்லாம் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு கட்டாயம் நிராகரிக்கப்படும். ஏனென்றால், அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்பங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது. எனவே, யாரேனும் புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் இருப்பின், அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்தால், கட்டாயம் உங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அரசின் அப்டேட்டுகாக நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. அதேபோல், தகுதியில்லாதவர்கள் யாரேனும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வாங்கிக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்தால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வெப்சைட்டில் சென்று அந்த பயனாளி குறித்தும் ஆன்லைனில் புகார் அளிக்கலாம். Actress net worthபுதிய ரேஷன் கார்டு, பட்டா, முதியோர் உதவித் தொகை ஒரே நாளில் கிடைக்க வேண்டுமா?
TN Rs. 1000 Scheme Tamil Nadu Women Scheme Rejection Magalir Thogai New Application Update கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மகளிர் உரிமைத் தொகை மகளிர் உரிமைத் தொகை லேட்டஸ்ட் அப்டேட் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை புதிய விண்ணப்பம் நிராக யாருடைய மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் எல்லாம் Kalaignar Scheme Eligibility TN Government Women Scheme Magalir Urimai Thogai Rejected List 2025 தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கலைஞர் கனவு இல்லம் : புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு குட் நியூஸ்..!!kalaignar kanavu illam : கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிதாக 10 ஆயிரம் வீடுகள் கட்ட முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
Read more »
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை புதிய மனுக்களின் நிலை என்ன? தெரிந்து கொள்ளுங்கள்Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட புதிய மனுக்களின் நிலையை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.
Read more »
மகளிர் உரிமைத்தொகை : புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு !Kalaignar magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப நிலையை பெண்கள் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.
Read more »
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை! இந்த அப்டேட் பற்றி உங்களுக்கு தெரியுமா?Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக காத்திருக்கும் பெண்கள் மத்தியில், புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Read more »
முதல் முறையாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வாங்குபவர்களுக்கான முக்கிய அறிவிப்புKalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : எல்லோருக்கும் ரூ.1000Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்த எல்லோருக்கும் ரூ.1000 கிடைக்குமா? அரசின் லேட்டஸ்ட் அப்டேட்
Read more »
