பழைய ஓய்வூதிய திட்டம் ரீ எண்ட்ரி? தீபாவளி பரிசாக வருகிறதா ஓபிஎஸ்?

செப்.30 முக்கிய அறிக்கை News

பழைய ஓய்வூதிய திட்டம் ரீ எண்ட்ரி? தீபாவளி பரிசாக வருகிறதா ஓபிஎஸ்?
United States Latest News,United States Headlines
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 233 sec. here
  • 5 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 97%
  • Publisher: 63%

Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருகிறதா? இது குறித்த சமீபத்திய அப்டேட்டை இங்கே காணலாம்.

Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருகிறதா? இது குறித்த சமீபத்திய அப்டேட்டை இங்கே காணலாம்.NPS மற்றும் UPS -க்கு கடும் எதிர்ப்பு.புரட்டாசி 07 செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?புரட்டாசி 08 புதன்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்? மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் பல காலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா? ஊழியர்கள் தொடர்ந்து ஓபிஎஸ் -க்கான கோரிக்கையை வைப்பதற்கான காரணம் என்ன? இது குறித்த சமீபத்திய அப்டேட் என்ன? அனைத்து தகவல்களையும் இந்த பதிவ்ல் காணலாம்.பழைய ஓய்வூதிய முறையை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசு ஊழியர் அமைப்புகளிடையே வலுப்பெற்று வருகிறது. பாதுகாப்பு சிவில் ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய தொழிற்சங்கங்களில் ஒன்றான அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் கூட்டமைப்பு , பழைய ஓய்வூதிய திட்டத்தின் மீட்டமைப்பு, 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் உள்ளிட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 14 ஆம் தேதி அகில இந்திய"போராட்ட நாளை" அறிவித்துள்ளது.2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய ஓய்வூதிய முறை மற்றும் ஏப்ரல் 2025 இல் தொடங்கப்பட்ட புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை AIDEF கடுமையாக எதிர்க்கிறது. இரண்டும் பங்களிப்பு மற்றும் சந்தை அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஊழியர்களின் நிதிச் சுமை நாளுக்கு நாள் அதிகரிப்பதாலும், ஊழியர்கள் அரசாங்கத்தின் சீரான செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாலும், 1972 CCS ஓய்வூதிய விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க ஊழியர்கள் கோருகின்றனர். பாதுகாப்பு நிறுவனங்களில் கருணை நியமனங்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் AIDEF கோரியுள்ளது. ஓபிஎஸ்-ஐ மீட்டெடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர், ஆனால் அரசாங்கம் யுபிஎஸ்-ஐ அறிமுகப்படுத்தியது. இதை ஊழியர்கள் நிராகரித்துள்ளனர். பணவீக்கம் சாதனை அளவில் உயர்ந்து, சம்பள தேக்க நிலையில், கண்ணியத்துடன் வாழ்வது ஒரு பெரிய சவாலாக மாறிவிட்டது என்று ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் கூறுகின்றனர்.மீண்டு கொண்டு வர தொடர்ந்து போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. 2003 ஆம் ஆண்டில் மத்திய அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நீக்கி, ஓய்வூதியத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து, பங்களிப்பு ஓய்வூதிய திட்டமான தேசிய ஓய்வூதிய முறையை அமல்படுத்தியது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதனால் அரசு ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து பல மாநிலங்களில் போராட்டங்கள் ஆரம்பம் ஆயின. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர். ஊழியர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டமே மீண்டும் அமலுக்கு வந்தது. ஆனால், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் இந்த மாற்றம் இன்னும் நிகழவில்லை.இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆறுதலான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக, தமிழக அரசு சார்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசின் கூடுதல் தலைமை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமை தாங்குகிறார். இந்தக் குழு வரும் செப்டம்பர் 30ஆம் தேதி தனது இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அரசு ஊழியர்களுக்கு அனுகூலமான ஒரு அறிவிப்பை அரசு வெளியிடும் என நம்பப்படுகின்றது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை தீபாவளி பரிசாக அளிக்க அரசு தயாராகி வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகே வரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | UPS முக்கிய அப்டேட்: ஓய்வூதியம் மட்டுமல்ல, இன்னும் ஏகப்பட்ட நன்மைகள்... செப்.30 கடைசி நாள்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.திருமணத்திற்கு ‘நோ’ சொன்ன விஷால்...விதியின் விளையாட்டு ஆரம்பம்! பாரிஜாதம் இன்றைய எபிசோட் அப்டேட்!7267 காலி பணியிடங்கள்.. ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கடைசி நாள் மற்றும் தகுதிMadhya Pradeshஇந்தியா அசத்தி வருகிறது.. ஆனால் நீங்கள்? பாகிஸ்தானை சாடிய வாசிம் அக்ரம்!Flipkart Big Billion Days Sale 2025: அதிரடி சலுகைகளுடன் கிடைக்கும் 5 ஸ்மார்ட்போன்கள்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

பழைய ஓய்வூதிய திட்டம்: அமல்படுத்துமா தமிழக அரசு? ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை!பழைய ஓய்வூதிய திட்டம்: அமல்படுத்துமா தமிழக அரசு? ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை!Old Pension Scheme: தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Read more »

Old Pension Scheme: ఓపీఎస్‌ పునరుద్ధరణకు డిమాండ్.. సీపీఎస్ రద్దుకు పోరాటంOld Pension Scheme: ఓపీఎస్‌ పునరుద్ధరణకు డిమాండ్.. సీపీఎస్ రద్దుకు పోరాటంOPS Latest Update: తెలంగాణలో పాత పెన్షన్ విధానాన్ని పునురుద్ధరించాలని ఉద్యోగ సంఘాలు డిమాండ్ చేస్తున్నాయి. సెప్టెంబర్ 1వ తేదీ సీపీఎస్ ఉద్యోగులకు చివరి విద్రోహా దినం కావాలని పిలుపునిచ్చాయి. సీపీఎస్ ఉద్యమానికి తన వంతు మద్దతు ఉంటుందని మాజీ ఎమ్మెల్సీ ఎం.కోదండంరాం అన్నారు.
Read more »

பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது? வெளியான தகவல்!பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது? வெளியான தகவல்!Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாக வாய்ப்புள்ளது என்பதை இங்கு பார்க்கலாம்.
Read more »

Pension Scheme New Rule: जरूरी खबर! 1 अक्टूबर से लागू होगा पेंशन स्कीम का नया नियम, मिलेगा डबल फायदाPension Scheme New Rule: जरूरी खबर! 1 अक्टूबर से लागू होगा पेंशन स्कीम का नया नियम, मिलेगा डबल फायदाPension Scheme New Rule: 1 अक्टूबर 2025 से NPS में मल्टीपल स्कीम फ्रेमवर्क लागू होगा, जिससे कॉर्पोरेट कर्मचारियों, गिग वर्कर्स और प्रोफेशनल्स को निवेश में ज्यादा ऑप्शन मिलेंगे.
Read more »

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரும் மிகப்பெரிய மாற்றம் - அக்டோபர் 1 முதல் அமல்தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரும் மிகப்பெரிய மாற்றம் - அக்டோபர் 1 முதல் அமல்Pension : அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme) -ல் வரும் மிகப்பெரிய மாற்றங்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

40-45 வயதினருக்கு முக்கிய செய்தி : மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் அளிக்கும் மாநில அரசின் சூப்பர் திட்டம்40-45 வயதினருக்கு முக்கிய செய்தி : மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் அளிக்கும் மாநில அரசின் சூப்பர் திட்டம்Vishwakarma Pension Scheme Scheme: இந்தத் திட்டம் முக்கியமாக, குறிப்பிட்ட வயது வரம்பைச் சேர்ந்த அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு உதவி அவர்களுக்கு மாத ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்யும்.
Read more »



Render Time: 2026-04-02 06:24:08