பேக்கரி பொருட்கள் தயாரிக்க தமிழக அரசு வழங்கும் பயிற்சி! எப்படி சேர்வது?

Tamil Nadu 3 Day Bakery Training Millet Products News

பேக்கரி பொருட்கள் தயாரிக்க தமிழக அரசு வழங்கும் பயிற்சி! எப்படி சேர்வது?
Bakery Training Using Millets Chennai Nov 25-27EDII Chennai Bakery Course Millet BiscuitsTamil Nadu Govt Bakery Training Certificate Schem
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 127 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 127%
  • Publisher: 63%

தமிழக அரசு சார்பில் மூன்று நாட்கள், உடல் நலத்திற்கு நன்மை தரும் சிறுதானியங்களை பயன்படுத்தி, பல்வேறு வகையான பேக்கரி பொருட்களை தயாரிப்பது குறித்து கற்று தரப்பட உள்ளது.

தமிழக அரசு சார்பில் மூன்று நாட்கள், உடல் நலத்திற்கு நன்மை தரும் சிறுதானியங்களை பயன்படுத்தி, பல்வேறு வகையான பேக்கரி பொருட்களை தயாரிப்பது குறித்து கற்று தரப்பட உள்ளது.தினை பேக்கரி பொருட்கள் தயாரிப்புக்கு.

.இந்தியாவின் டாப் 7 பணக்கார கோவில்கள்.. முதல் இடத்தில் திருப்பதி கிடையாது.. எந்த கோவில்?2 மனைவிகள்- 6 குழந்தைகள்..கோடி கோடியாய் சொத்து! யார் இந்த தர்மேந்திரா?இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றும் நோக்கில்,பல்வேறு சிறப்பு பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது சிறுதானியங்களை கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரிப்பதற்கான மூன்று நாள் சிறப்புப் பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு அரசு சான்றிதழும், தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.நவம்பர் 25, 2025 முதல் நவம்பர் 27, 2025 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், உடல் நலத்திற்கு நன்மை தரும் சிறுதானியங்களை பயன்படுத்தி, பல்வேறு வகையான பேக்கரி பொருட்களை தயாரிப்பது குறித்து விரிவாக கற்று தரப்படும். இதில், கோதுமை வெண்ணெய் பிஸ்கட், ராகி நட்ஸ் குக்கீ, கம்பு நெய் பிஸ்கட், கருப்பு கவுனி பாதாம் குக்கீ போன்ற விதவிதமான பிஸ்கட் வகைகள், ராகி சாக்லேட் கேக், தினை வாழை கேக், சோளம் கேரட் கேக் போன்ற கேக் வகைகள் மற்றும் மல்டிமில்லட் ரொட்டி, பால் ரொட்டி போன்ற பல வகையான ரொட்டி வகைகளும் அடங்கும். செய்முறை விளக்கத்தோடு, தொழில் தொடங்குவதற்கு அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் கடன் உதவிகள் குறித்தும் விளக்கமளிக்கப்படும்.சுயதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள், முன்பதிவு செய்வது அவசியம். வெளியூர்களில் இருந்து பயிற்சிக்கு வருபவர்கள் தங்குவதற்கு, குறைந்த வாடகையில் விடுதி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த பயிற்சி, சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதுகுறித்த கூடுதல் விவரங்களைப் பெறவும், முன்பதிவு செய்யவும் [) என்ற இணையதளத்தை பார்க்கலாம். மேலும், அலுவலக வேலை நாட்களில் 8668102600 மற்றும் 9943685468 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்புகொண்டு விவரங்களை கேட்டு அறியலாம். சுயதொழில் மூலம் வாழ்வில் உயர நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!EPFOமாதம் ரூ.1,000 கிடைக்கலாம்.. டெலிவரி பணியாளர்களுக்கு அரசு கொடுத்த சப்ரைஸ்!Life CertificateEPFO : இந்த 6 தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம், பிஎப் பணம் காலி - இபிஎப்ஓ எச்சரிக்கைAadhaarடெல்லி கார் குண்டுவெடிப்பு: கார் ஓனர் கைது? சிக்கும் மருத்துவர்கள் - முழுமையான தகவல்கள்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Bakery Training Using Millets Chennai Nov 25-27 EDII Chennai Bakery Course Millet Biscuits Tamil Nadu Govt Bakery Training Certificate Schem Millet Bakery Course TN Government Millet Products Bakery Training Chennai TN Government Skill Development Bakery Training Bakery Entrepreneurship Training Millets Tamil Na Biscuit Baking Course Millet TN Govt Millet Biscuit Cake Bakery Training Chennai தமிழ்நாடு 3 நாள் பேக்கரி பயிற்சி தினை வகைகள் பேக்கரி பயிற்சி சென்னை நவம்பர் 25-27 தினை பேக்கரி பயிற்சி சென்னை தமிழ்நாடு அரசு பேக்கரி பயிற்சி சான்றிதழ் திட்டம் மிலேட்ஸ் தயாரிப்பு பேக்கரி பயிற்சி தமிழ் தினை வைத்த பேக்கரி பயிற்சி சென்னை தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பேக்கரி தமிழ்ந தினை பிஸ்கட் கேக் பயிற்சி சென்னை பேக்கரி சான்றிதழ் தினை வகைகள் தமிழ்நாடு தினை பயிற்சி தமிழக அரசு இலவச பயிற்சி பேக்கரி தயாரிப்பு

 

United States Latest News, United States Headlines



Render Time: 2026-04-02 05:34:58