Fair Delimitation: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இன்று நடந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
Chennai JAC Meeting: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இன்று நடந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களை இங்கு காணலாம்.கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
குரு பெயர்ச்சி 2025: 4 ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... பணம், பதவி, புகழ் அனைத்தும் கிட்டும்மீனத்தில் உதயமாகும் சனி பகவான்... இந்த 3 ராசிகளின் கனவுகள் மெய்ப்படும் - அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!8வது ஊதியக்குழு: எதிர்பார்ப்பை விட அதிக ஊதிய உயர்வு.. யாருக்கு எவ்வளவு? முழு கணக்கீடு இதோகே.எல்.ராகுல் இல்லை.. அப்போ டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் யார்? இம்பேக்ட், பிளேயிங் XI என்ன? சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய முதல்"கூட்டு நடவடிக்கைக் குழு" கூட்டம் இன்று நடைபெற்றது. பல்வேறு மாநில அரசுகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரிடம் எந்த ஆலோசனையும் இல்லாமல் வரவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவு இல்லாதது குறித்து JAC தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.இந்தியாவில் செயல்படும் மாநிலங்களின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தைப் பாதுகாக்க இந்த முயற்சியை மேற்கொண்டதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, JAC தனது பாராட்டுகளைத் தெரிவித்தது. விவாதங்களின் போது பிரதிநிதிகள் முன்வைத்த பல்வேறு கருத்துக்கள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில், JAC ஒருமனதாகத் நிறைவேற்றிய முக்கிய தீர்மானங்களை இங்கு வரிசையாக காணலாம். நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்!- ஜனநாயகத்தின் தன்மை மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு மேற்கொள்ளும் எந்தவொரு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையும் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால் அனைத்து மாநிலங்களின் அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் பிறர் இந்த விஷயம் குறித்து ஆலோசிக்கவும், விவாதிக்கவும், பங்களிக்கவும் முடியும். - 42வது, 84வது மற்றும் 87வது அரசியலமைப்பு திருத்தங்களுக்குப் பின்னால் உள்ள நோக்கம், மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்திய மாநிலங்களைப் பாதுகாக்கவும், ஊக்குவிப்பதற்கும் ஆகும். - தொகுதி மறுசீரமைப்பு குறித்த நிலைப்பாடு இன்னும் உறுதியாகவில்லை. அதுவரை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். - மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை திறம்பட செயல்படுத்திய மாநிலங்கள் மற்றும் அதன் விளைவாக மக்கள்தொகை பங்கு குறைந்துள்ளது. இதற்காக அந்த மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. இதற்காக மத்திய அரசு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செயல்படுத்த வேண்டும். - பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மையக் குழு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளுக்கு முரணான, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையில் மத்திய அரசு மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியையும் எதிர்கொள்ள நாடாளுமன்ற உத்திகளை ஒருங்கிணைக்கும். - நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மையக் குழு, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, மேற்கண்ட வழிகளில் ஒரு கூட்டுப் பிரதிநிதித்துவத்தை பிரமதர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பிக்கும். - கூட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், இந்தப் பிரச்சினையில் அந்தந்த மாநிலங்களில் பொருத்தமான சட்டமன்றத் தீர்மானங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தொடங்கி, அதை மத்திய அரசுக்குத் தெரிவிக்கும். - கடந்த கால தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வரலாறு, அதன் சூழல் மற்றும் முன்மொழியப்பட்ட தொகுதி மறுசீரமைப்பினால் ஏற்பட்ட விளைவுகள் குறித்த தகவல்களைப் பரப்புவதற்கு JAC ஒருங்கிணைந்த பொதுக் கருத்துத் திரட்டல் உத்தி மூலம், தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும்.முன்னதாக, இப்பிரச்சினையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களில் உள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு"கூட்டு நடவடிக்கைக் குழு" அமைக்க மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்திருந்த அழைப்பை ஏற்று, இன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் அனைவரையும் வரவேற்று, தொடக்க உரை ஆற்றினார். தீர்மானங்கள் நிறைவேற்ற பின்னர் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு நன்றியுரை ஆற்றினார். மேலும், நியாயமான தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கான 2வது கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் அடுத்து ஹைதராபாத் நகரில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த முதல் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி. ராமாராவ், பிஜு ஜனதா தள கட்சியின் சஞ்சய் குமார் தாஸ் பர்மா, பிஜு ஜனதா தள கட்சியின் அமர் பட்நாயக், பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தள கட்சியின் சர்தார் பல்வீந்தர் சிங், கேரள மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினாய் விஸ்வம், கேரள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சலாம், கேரள புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பிரேம சந்திரன், கேரள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கும்பக்குடி சுதாகரன், தெலங்கானா அகில இந்திய மஜ்லிஸ்- இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் இம்தியாஸ் ஜலில், கேரளா காங்கிரஸ் கட்சியின் ஜோஸ் கே. மணி, தெலங்கானா மாநில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மகேஷ் கவுட், கேரளா காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்று, தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தினர்.நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு, சமூகப் பொருளாதார நலத் திட்டங்களைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்திய எந்தவொரு மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடக்கூடாது என்றும், ஒன்றிய அரசு உத்தேசித்துள்ள மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்த விவரங்களை பல்வேறு மாநில அரசுகளைக் கலந்தாலோசித்து, அவர்களது கருத்துகளைப் பெற்று, ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களும் வலியுறுத்தினர்.மேலும் படிக்க | தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது என்ன? - முழு பேச்சு இதோ உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கோடை அமிர்தம் வெள்ளரி ஜூஸ் யாரெல்லாம் குடிக்கலாம்? யாரெல்லாம் குடிக்கக்கூடாது? தெரிந்து கொள்ளுங்கள்கெட்ட கொழுப்பை மொத்தமாக காலி செய்யும் ஆப்பிள்: தினமும் கண்டிப்பா சாப்பிடுங்க10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த குட்நியூஸ்..! வாய்ப்பை நழுவ விடாதீர்கள்..!கால்நடை பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் கடன், மானியம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு - உடனே விண்ணப்பிக்கவும்62வது அகில இந்திய சாஸ்த்ரோத்சவம்: பதஞ்சலி விழாவில் கலந்துகொண்ட உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமிBank Strike | வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.. வேலை நிறுத்த போராட்டம்! 4 நாட்கள் பேங்க் செயல்படாது!IPL 2025
First JAC Meeting On Fair Delimitation Joint Action Committee Chennai JAC Meeting MK Stalin Delimitation Delimitation First Joint Action Committee Meeting Key Decisions Passed At First JAC Meeting நியாயமான நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொகுதி மறுசீரமைப்பு தொகுதி மறுசீரமைப்பு குறித்த முதல் கூட்டு நடவடிக்க முக ஸ்டாலின் முதல் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் எடுக்கப்ப Chennai News சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் Chennai Latest Updates
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?TN All Party Meeting: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது, மற்ற கட்சியின் பிரதிநிதிகள் பேசியது, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆகியவற்றை இங்கு காணலாம்.
Read more »
ஆஸ்திரேலியா நாக் அவுட்... உடனே ஸ்டீவ் ஸ்மித் எடுத்த முக்கிய முடிவுSteve Smith: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்த கையோடு, ஸ்டீவ் ஸ்மித் முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
Read more »
மீண்டும் அகவிலைப்படி அதிகரிப்பு: காத்திருக்கும் ஊழியர்கள்.... இன்று வருகிறதா முக்கிய அறிவிப்பு?7th Pay Commission DA Hike: அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு. டிஏ உயர்வு எவ்வளவு இருக்கும்?
Read more »
லட்சக்கணக்கான ரூபாய் சேமிக்கலாம்.. பெண்களுக்கான 5 முக்கிய அரசுத் திட்டங்கள்Top 5 Government Schemes For Women: 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டுக்குப் பிறகு லட்சக்கணக்கான பெண்களுக்கான ஐந்து முக்கிய அரசுத் திட்டங்களின் நன்மைகள் என்ன? அதன் விவரங்கள்
Read more »
பூமிக்கு வந்தவுடன் சுனிதா வில்லியம்ஸ் செய்த முதல் செயல்! என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ..பூமிக்கு வந்தவுடன் சுனிதா வில்லியம்ஸ் செய்த முதல் செயல்! என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ..
Read more »
IPL 2025 LIVE : ஐபிஎல் 2025 திருவிழா இன்று தொடக்கம் சென்னையில் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு கூட்டம்IPL 2025 LIVE : ஐபிஎல் 2025 திருவிழா இன்று தொடக்கம் சென்னையில் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு கூட்டம் - இன்றைய முக்கிய செய்திகள்
Read more »
