திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தீ விபத்து எப்படி எற்பட்டது என்பது குறித்து பார்க்கலாம்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தீ விபத்து எப்படி எற்பட்டது என்பது குறித்து பார்க்கலாம்.இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 23 புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?Guru PeyarchiArugampul Juice திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் ஒன்று மிக மோசமான தீ விபத்தில் சிக்கியது.
இந்த சரக்கு ரயில், டிசல் ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. திருவள்ளூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பின்னர் அது வேகமாக மற்ற பெட்டிகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியே புகைமண்டலமாக காணப்படுகிறது. இந்த பயங்கர தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.இந்த சரக்கு ரயில் துறைமுகத்தில் இருந்து டிசல் ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு வேகன் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே வந்த நிலையில், 3 வேகன்கள் தண்டவாளத்தில் இருந்து விலகியதில் எரிபொருள் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் யாருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. தீ விபத்தை அடுத்து தெற்கு ரயில்வே சார்பில் விசாரணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த தீ விபத்து காரணமாக அவ்வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவு ரயில் செல்லும் வழித்தடத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் பயணிகள் பாதுக்காப்பிற்காக ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை சென்டிரலில் இருந்து செல்லும் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காலை 5.30 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் வந்தே பாரத் ரயில், 6 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ், 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை அதிவிரைவு ரயிகள் உள்ளிட்ட அவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னைக்கு வர வேண்டிய ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் வழியாக சென்னை சென்டிரல் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மங்களூருவில் இருந்து காலை 6.10 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய சென்னை சென்டிரல் மெயில் எக்ஸ்பிரஸ் திருவள்ளூரில் நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாலையிலேயே சரக்கு ரயில் பயங்கர தீ விபத்தில் சிக்கியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சரக்கு ரயில் தீ விபத்து காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட இடத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து கேஸ் சிலிண்டர் அகற்றப்பட்டு வருகிறது. அனல் காரணமாக கேஸ் சிலிண்டர் வெடிக்க வாய்ப்புள்ளதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகே இருப்போரை பாதுக்காப்பான இடத்திற்கு அழைத்து செல்லும் பணிகளும் நடைபெற்று வருகிறது.மேலும் படிங்க: ரிதன்யா தற்கொலை! வழக்கை சிபிஐக்கு மாற்றுக - தந்தை பரபரப்பு மனு! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Kadambur S RajuShruti Haasan“லோகி என்னை வேஸ்ட் செய்து விட்டார்” KD The Devil டீசர் வெளியிட்டு விழாவில் சஞ்சய் தத் பேசியது..கலைஞர் கைவினைத் திட்டம் : தொழில் தொடங்க உள்ளவர்களுக்கு குட் நியூஸ்..!!
Tiruvallur Fire Accident Freight Train Frie Reason For Tiruvallur Train Fire Accident Latest News In Tamil Tiruvallur Railway Station Chennai News Chennai Latest News Chennai Train Accident சரக்கு ரயில் தீ விபத்து திருவள்ளூர் திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்து அண்மைச் செய்திகள் திருவள்ளூர் செய்திகள் திருவள்ளூர் ரயில் தீ விபத்தின் காரணம் என்ன திருவள்ளூர் ரயில் நிலையம் சென்னை சென்னை செய்திகள் சென்னை சமீபத்திய செய்திகள் ரயில்கள் ரத்து Train Cancelled Train Delayed Chennai Central சென்னை சென்ட்ரல் தெற்கு ரயில்வே Southern Railway
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
SCSS: மூத்த குடிமக்களுக்கு அட்டகாசமான திட்டம், 5 ஆண்டுகளில் 24 லட்சம்... முழு விவரம் இதோSCSS Latest News: SCSS திட்டம் எவ்வாறு செயல்படுகிறது? இதன் பிரத்யேக நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »
தினசரி ராசிபலன், ஆனி 6: சில ராசிக்காரர்கள் இன்று யோசித்து செயல்பட வேண்டும்!June 20 Today Rasipalan: ஆனி மாதம் 6ஆம் நாளான இன்று (ஜூன் 20), 12 ராசிகளுக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »
அதிமுக கூட்டணி.. யார் தலைமை! எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும்.. திருமாவளவன்!ஒர் ஆண்டுக்கு முன்பாகவே அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துவிட்டார்கள் என்றும் என்ன அவசரம். என்ன அழுத்தம் என்று தெரியவில்லை என்றும் இதற்கு எடப்பாடி பழனிசாமிதான் பதிலளிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
Read more »
த்ரிஷா பரிசளித்த ‘கஜா’ இயந்திர யானை! அதன் விலை என்ன தெரியுமா?த்ரிஷா பரிசளித்த ‘கஜா’ இயந்திர யானை! அதன் விலை என்ன தெரியுமா?
Read more »
வரும் ஆசிய கோப்பையில் ரோகித், கோலி இல்லை.. என்ன காரணம்?2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
Read more »
Air India மீது வழக்கு? விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் தீவிர ஆலோசனைAhmedabad Plane Crash Latest Update: அகமதாபாத் விமான விபத்து சம்பவத்தில் மொத்தம் 274 பேர் இறந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் முரளிதர் மோகல் தெரிவித்துள்ளார்.
Read more »
