H Raja: SIR-க்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, இதன்மூலம் தேர்தல் ஆணையத்தில் திமுகவின் கட்சிப் பதிவு அபாயத்தில் உள்ளது என்றும் இதனை புரிந்து முதலமைச்சர் பேச வேண்டும் என்றும் பாஜகவின் மூத்த நிர்வாகி ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
H Raja : SIR-க்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, இதன்மூலம் தேர்தல் ஆணையத்தில் திமுக வின் கட்சிப் பதிவு அபாயத்தில் உள்ளது என்றும் இதனை புரிந்து முதலமைச்சர் பேச வேண்டும் என்றும் பாஜக வின் மூத்த நிர்வாகி ஹெச்.
ராஜா தெரிவித்துள்ளார்.ஹெச். ராஜா இதில் பங்கேற்றார்.புதுமைப் பெண் திட்டம் : மாணவிகள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? அரசு முக்கிய தகவல்மெகா ஜாக்பாட்.. உங்களிடம் இந்த 50 ரூபாய் நோட்டு இருக்கா? அப்போ லட்சம் லட்சமாய் அள்ளலாம்இன்னும் 5 நாட்களில் குரு வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மினுமினுவென மின்னும் கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி திமுக அரசை கண்டித்தும் மதுரை மாநகர பாஜக சார்பில் புதூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த நிர்வாகி ஹெச். ராஜா கலந்து கொண்டார். 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராகவும், கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா,"கோயம்புத்தூர் பயங்கரவாதிகளின் புகழிடம். கோவையில் அத்வானி வரும்போது குண்டு வைத்து பல பேரை கொன்றார்கள். எல்லாத் தீய சக்தியையும் பாதுகாக்கும் அரசு திமுக. இது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இல்லை. ரஜினிகாந்த் சொன்னது போல் தமிழ்நாட்டில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டிய ஆர்ப்பாட்டம்" என்றார். கோவையில் கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை இழைத்த கொடிய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க தமிழக காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கத் தவறிய ஜனநாயக விரோத ஊழல்,… தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் முடிவடைந்து செய்தியாளர்களை ஹெச். ராஜா,"தமிழகத்தில் ஒவ்வொரு சம்பவங்கள் நடக்கும் போது காவல்துறை உடனடியாக எதிர்வினையாற்றுகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஒருவர்தான் இருந்தார்கள் என்று சொன்னார்கள், அதையே நீதிமன்றத்திலும் சொல்லி இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் நடக்கின்ற சட்ட விரோத நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதனால்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை இரண்டு பேர் என்கவுண்டர் செய்தாலும், இந்த வழக்கு முடியவில்லை என கூறி சிபிஐ வசம் அதை ஒப்படைத்திருக்கிறது. அதேபோன்று அஜித்குமார் கொலை வழக்கில் அரசாங்கமே முன்வந்துதான சிபிஐயிடம் ஒப்படைத்தீர்கள். அதேபோன்று இந்த வழக்கையும் அரசாங்கமே சிபிஐயிடம் ஒப்படைக்கலாமே என்ன தடுக்கிறது?. கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை அறிக்கை முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. முதலில் காவல்துறை அதிகாலை 3 மணிக்கு ஆண் நண்பரிடம் இருந்து தகவல் வந்தது என்று சொன்னார்கள், ஆனால் ஆணையாளர் சொன்னபோது 11.20 தகவல் வந்தது, இரவு 11:35 மணிக்கு ஸ்பாட்டுக்கு சென்றுவிட்டோம், நூறு பேர் சென்று தேடினோம் என்கிறார்.100 பேர் தேடியும் ஏன் அந்தப் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே காவல்துறையினுடைய அறிக்கைகள் நம்பிக்கை தருவது போன்று இல்லை. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார். 2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவம் என்பது ஆண்டுக்கு 2 ஆயிரமாக ஆக இருந்தது, ஆனால் இப்போது 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. 4 மாதத்தில் எப்படியும் திமுக அரசு வீட்டிற்குதான் போகப் போகிறது. இப்போதே ஸ்டாலின் ராஜினாமா செய்துவிட்டு போனால் கௌரவமாக இருக்கும். இந்த நான்கரை ஆண்டில் ஸ்டாலின் அரசாங்கத்தில் 6,200 படுகொலைகள் நடந்துள்ளன, காவல் விசாரணையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர், இதெல்லாம் முதல்வருக்கு மண்டையில் ஏறவில்லை" என கடுமையாக சாடினார்.தேர்தல் ஆணையம் வாக்கை திருடுகிறது என முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு,"முதல்வர் நிதானமாக பேச வேண்டும், வார்த்தை சரியாக பிரயோகிக்க வேண்டும். எஸ்ஐஆர் என்பது முதல் தடவை நடக்கிறதா? இதுவரை 10 முறை நடந்துள்ளது. 2003ஆம் ஆண்டில் நடந்துள்ளது, 197 தொகுதிகளிலும், 2005ஆம் ஆண்டில் மீதம் உள்ள 37 தொகுதிகளில் நடந்துள்ளது. இது எப்போதும் நடக்க கூடியதுதான். தலைமை தேர்தல் ஆணையர் 12 மாநிலத்திற்கும் சேர்த்து சொல்லி இருக்கிறார். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களுக்கு BLA2 முகவர்கள் இருக்கிறார்களா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களை ஒழுங்காக வேலை பார்க்கச் சொல்லுங்கள்.மத்திய அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இதனை அணுகுகிறது. தேர்தல் ஆணையம் என்பது தனித்துவ அமைப்பு, ஒரு கட்சிக்கு அங்கீகாரம் வாங்கும்போது நாங்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்போம் என சொல்லி எழுதி கொடுத்து விட்டுதான் திமுக அங்கீகாரம் வாங்கி இருக்கிறீர்கள். அதனை மீறுவீர்களேயானால் உங்களுடைய கட்சி பதிவு அபாயத்தில் உள்ளது. இதனை புரிந்து முதலமைச்சர் பேச வேண்டும்" என பதிலளித்தார்.எதிராக திமுக போராட்டம் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு,"வீணா போறது என முடிவு செய்துவிட்டால் யார் தடுக்க முடியும்?. இது எப்படிப்பட்ட நிர்வாகம் என்பது தெரியும். இந்த மதுரையில் விசிக கூட்டம் போட்டு பிரதமருடைய வாகனத்தை தாக்குவேன் என பேசியுள்ளனர். மதுரை காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ஏன் அந்த நபரை இதுவரை கைது செய்யவில்லை?. விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது சட்டவிரோத அமைப்பு என்பது தெரிகிறதா? பிரதமர் வண்டியை தாக்குவது என்பது சட்டவிரோதம் தானே, புரிந்து கொண்டு மக்களிடம் இதனை கொண்டு செல்ல வேண்டும்" என்றார்.எதிர்க்கட்சியாக இருந்தபோது கூட எனது ஏரியா நல்லா இருந்தது என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது குறித்த கேள்விக்கு,"அதிமுக ஆட்சியில் இருந்தபோது நல்லா இருந்தது என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்லி இருக்கிறார், அது ஸ்டாலினுக்கு கொடுத்திருக்கின்ற சான்று. அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தின் மா.சுப்ரமணியன் நண்பர் சார் என்றார். ஆனால் அந்த சார் இல்லவே இல்லை என்றார்கள், இப்போ SIR என்றவுடன் முதலமைச்சருக்கு ஜீரம் வந்துவிடுகிறது" என்றார். தனியரசு திமுகவிற்கு சென்று பேசியது குறித்த கேள்விக்கு,"திமுகவிற்கு போனால் அடிமை சாசனம் கையெழுத்து போட்டுவிட்டு தான் போக வேண்டும், அதனால் தனியரசு அப்படி பேசுகிறார். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்" என்றார்.மேலும் படிக்க | தமிழ்நாட்டில் பாஜகவுக்கு போட்டியாக யாரும் இல்லை - நயினார் நாகேந்திரன்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.சுவாதி நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு பொற்காலம், பணம் கொட்டும்Indian Railwayramadoosகருணை அடிப்படையிலான அரசு பணி நியமனம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த தமிழக அரசுஜாக்பாட்! இந்த 2 ரூபாய் நோட்டு இருந்தா.. ஒரே நைட்டில் லட்சாதிபதியாகலாம்
BJP DMK H Raja Latest News Updates Tamil Nadu Latest News Updates DMK Party Registration In Danger DMK Protest Announced Against SIR Special Intensive Revision In Tamilnadu Tamilnadu SIR Protest MK Stalin Election Commission Coimbatore Sexual Harassment Case H Raja News Tamil Nadu Latest News Tamil Nadu News ஹெச். ராஜா பாஜக திமுக திமுகவின் கட்சி பதிவு அபாயத்தில் இருக்கு தமிழ்நாடு லேட்டஸ்ட் நியூஸ் அப்டேட்ஸ் திமுக கட்சி பதிவு அபாயத்தில் இருக்கிறது சிறப்பு தீவிர திருத்தம் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் முக ஸ்டாலின் தேர்தல் ஆணையம் கோவை பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ்நாடு லேட்டஸ்ட் நியூஸ்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
SIR in Bengal: SIR নিয়ে এবার আইনি লড়াই! লিগ্যাল সেলকে অভিষেকের বড় নির্দেশ... ১১-তে ডোরিনায়...SIR in Bengal: West Bengal Assembly Election 2026 SIR controversy Abhishek Banerjee big order to TMC Legal cell
Read more »
West Bengal SIR: बंगाल जाएगी चुनाव आयोग की टीम, एसआईआर प्रक्रिया के लिए अधिकारियों के साथ होगी बैठकWest Bengal SIR: बंगाल जाएगी चुनाव आयोग की टीम, एसआईआर प्रक्रिया के लिए अधिकारियों के साथ होगी बैठक ECI team Bengal Visit to Monitor SIR Process देश
Read more »
SIR: হঠাত্ পাড়া-য় হুলুস্থুল, একবার আসে বিজেপি তো পরেরবার তৃণমূল, SIR নিয়ে আতঙ্কে ৫০ পরিবারPeople of Haththpara in Midnapur town is in panic due to SIR
Read more »
SIR in Bengal: নিউটাউনের পর দমদমের সাঁপুই পাড়া! SIR আতঙ্কে রাতারাতি উধাও সব...SIR in Bengal: West Bengal Assembly Election 2026 SIR controversy Dumdum Slum vacant news
Read more »
SIR Controversy: ব্যাগ খুব ভারী, বাড়ি বাড়ি যাওয়ার বদলে BLO-র আজব কীর্তি! বিতর্ক...jalpaiguri news SIR controversy BLO accused of distributing sir forms while sitting on a table and chair set up on the dam
Read more »
SIR In Bengal: SIR আতঙ্কে সপ্তম মৃত্যু! এবার বহরমপুর, স্ত্রী বাড়ি ফিরে দেখলেন স্বামী...Another Death reportedly for SIR in Berhampore
Read more »
