madhampatty rangaraj: ஜாய் கிரிஸில்டாவுடனான உறவு தொடர்பான விவகாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜிடம் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.
madhampatty rangaraj : ஜாய் கிரிஸில்டா வுடனான உறவு தொடர்பான விவகாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜிடம் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.இன்று அதிர்ஷ்டசாலி யார்? முதல் பரிசு 1 கோடி கேரளா லாட்டரி பாக்யதாரா பிடி-23 குலுக்கல்Kalaignar Magalir Urimai ThogaiTamil Nadu governmentசமையல் பிரபலம் மாதம்பட்டி ரங்கராஜ் தான் சமீப காலமாக சமூக வலைத் தளத்தில் பேசும் பொருளாக உள்ளார்.
காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜுடன் உடன் திருமணம் செய்த புகைப்படத்தை முதலில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின் தொடர்ந்து அவருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை வெளியிட்டு வந்த ஜாய், தான் மாதம்பட்டி ரங்கராஜால் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பேசும்பொருளானது.பலரும் ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஸ்ரூதி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், எப்படி வேறு ஒருவரை திருமணம் செய்து அவரை கர்ப்பமாக்க முடியும் என கேள்வி எழுப்பி வந்தனர். இந்த சூழலில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா போலீஸிடம் புகார் அளித்தார். தன்னை அவர் திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும் தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக கடந்த வாரத்தில் ஜாய் கிரிஸில்டாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் பல விஷயங்களை ஜாய் கிரிஸில்டா ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் மாதம்பட்டி ரங்கராஜை அழைத்து விசாரிக்க திட்டமிட்டு வருகின்றனர். இதற்கிடையில், தன்னை குறித்து அவதூரான வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு, இதனால் தனது நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் அடைந்ததாகவும், அவதூறு வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என மாதம்பட்டி ரங்கராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில், கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்ரூதி என்பவருடன் மாதம்பட்டி ரங்கராஜுக்கு திருமணமாகி அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த சூழலில், தொழில் ரீதியாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் தொழில் ரீதியாக பிரச்சனை ஏற்பட்ட நிலையில், ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக கூறி புகார் அளித்து மாதம்பட்டி ரங்கராஜின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளார். ஜாய் கிரிஸில்டா கொடுத்த பேட்டியால் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டு மகன்களும் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க ஜாய்-க்கு தடை விதிக்க வேண்டும் என்று மாதம்பாடி ரங்கராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த வாதத்தை கேட்ட நீதிபதி செந்தில்குமார், ஜாய் கிரிஸில்டாவின் குற்றச்சாட்டுகளை உங்களால் ஆதாரத்துடன் மறுக்க முடியுமா? ஆதாரங்கள் உள்ளதா? இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி, மனுவுக்கு அக்டோபர் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிஸில்டாவுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வந்த மாதம்பாடி ரங்காராஜ் - ஜாய் கிரிஸில்டா விவகாரம், தற்போது நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் தெரிவிப்பதை ஆதாரங்களுடன் மறுக்க முடியுமா? என நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க: Bigg Boss Tamil: பிக்பாஸ் சீசன் 9 தமிழ்! 18 போட்டியாளர்கள் யார் யார்? முழு விவரம் இதோ!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!இன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி, 4 ராசிகளுக்கு செல்வ மழை, டபுள் அதிஷ்டம்ஒரு லாட்டரி டிக்கெட்டில் 5 பெண்களுக்கு அடிச்சது ஜாக்பாட்... கேரளாவில் சுவாரஸ்யம்!Rohit Sharmaசெல்போன் ரீச்சார்ஜ் : குமுறும் மக்கள்! பழைய முறையே வேண்டும் என ஆதங்கம்M.K. Stalin
Joy Crizildaa Defamation Case Chennai High Court Madhampatty Rangaraj Latest News Madhampatty Rangaraj First Wife Joy Crizildaa Husband Joy Crizildaa Madhampatty Rangaraj Problem Shruti Rangraj மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா அவதூறு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மைச் செய்திகள் மாதம்பட்டி ரங்காராஜ் முதல் மனைவி யார் ஜாய் கிரிஸில்டா கணவர் ஸ்ரூதி ரங்கராஜ் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா பிரச்சனை
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ஜாய் கிரிஸில்டாவுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் வைத்த ட்விஸ்ட்! நீதிமன்றத்தில் வழக்கு..Madhampatty Rangaraj Case Against Joy Crizildaa : மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Read more »
இட்லி கடை படம் மாதம்பட்டி ரங்கராஜின் கதையா? இனையத்தில் வைரலாகும் டெம்ப்ளேட்Netizens Troll Idli Kadai Madhampatty Rangaraj : சமீபத்தில் ‘இட்லி கடை’ படத்தின் டிரைலர் வெளியானது. இதில் இடம் பெற்றிருந்த சில போட்டோக்களை மாதம்பட்டி ரங்கராஜின் கதை என்று கூறி பலர் இணையத்தில் ஒரு டெம்ப்ளேட்டை வைரலாக்கி வருகின்றனர்.
Read more »
ஷபானாவிடம் வம்பு செய்த மாதம்பட்டி ரங்கராஜ்? நடந்தது என்ன? முழு விவரம்!Madhampatty Rangaraj Messed With Shabana : சமீப காலமாக, இணையவாசிகள் மத்தியில் செம அடி வாங்கி வருபவர், மாதம்பட்டி ரங்கராஜ். இதற்கு காரணம், இவர் சிக்கிய சர்ச்சைகள்தான். இவர் குறித்து தற்பாேது வெளிவந்த குற்றச்சாட்டுகள் அதிர்ச்சிகரமாக இருக்கின்றன.
Read more »
மாதம்பட்டி ரங்கராஜுடன் ஜாய் கிரிஸில்டா..புது புகைப்படம்! கேப்ஷனில் அவ்ளோ துயரம்Joy Crizildaa Madhampatty Rangaraj New Photo : பிரபல நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸி்டாவை ஏமாற்றி திருமணம் செய்ததாக பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இதையடுத்து, ஜாய் புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Read more »
மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக உத்தரவு! ஜாய் கிரிஸில்டா கொடுத்த புகாரில் முன்னேற்றம்..Madhampatty Rangaraj Joy Crizildaa Police Compliant : மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட பதிவுகளால், தங்களுக்கு ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மாதம்பட்டி பகஷாலா வழக்கு தொடர்ந்திருந்தது.
Read more »
சர்ச்சைகளுக்கு பின்..மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி ஸ்ருதியின் முதல் பதிவு! என்ன கூறியிருக்கிறார்?Shruthi Rangaraj Post After Joy Crizildaa Controversy : கடும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி, இப்போது புதிதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Read more »
