செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...
நம்மில் பலருக்கு செல்போனை அதிகம் உபயோகிக்கும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கத்தினால் மனதளவிலும் உடல் அளவிலும் பாதிக்கப்படுகிறோம் என்பது தெரிந்தே பலர் இந்த பழக்கத்தை தொடருவர். இதனை நிறுத்துவது எப்படி? கற்றது கைமண் அளவாக இருந்தாலும், உலகளவாக இருந்தாலும், அனைத்தையும் கைக்குள் அடக்கும் வகையில் வந்து விட்டது செல்போன்.
15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு சிலரின் பயன்பாட்டில் மட்டுமே இருந்து வந்த தொடுதிரை மொபைல்கள், இன்று ஏறக்குறைய அனைவர் கைகளிலும் தவழ்கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் உலகும் செல்போன் மயம் நிரம்பியதாக இருக்கிறது. இதற்கு அடிமையாகும் சிலர், தங்கள் வாழ்வில் முன்னேற முடியாமலும், தான் நினைத்த காரியங்களை செய்ய முடியாமலும் தவிப்பர். இவர்கள், இந்த சமூக வலைதளம் மற்றும் செல்போன் பயன்பாட்டின் அடிமைத்தனத்தில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்கள் உள்ளன. அவை என்ன தெரியுமா?உலகில், மொத்தம் 3.8 மில்லியன் பேர் செல்போனிற்கு அடிமையாக கிடப்பதாக ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. கணக்கிலடங்கா சமூக வலைதளங்களாலும், கொட்டிக்கிடக்கும் கண்டண்டுகளாலும் நாம் நமக்கே தெரியாமல் ஒரு நாள் முழுவதும் சமூக வலைதளத்திற்காக செலவிடுகிறோம். ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு அடிமையானதை கண்டுபிடிப்பது எப்படி? >போன் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் போனை கீழே வைத்தவுடன் தோன்றுவது >போன் உபயோகிக்கவில்லை என்றால், பதற்றம் போன்ற மன நிலை உருவாகுவது. >நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவது. >போன் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று தோன்றியும் அதில் வெற்றி பெறாமல் இருப்பது. >உடலிலும் மனதிலும் என்ன பிரச்சனை இருந்தாலும் செல்போன் பயன்பாட்டை நிறுத்தாமல் இருப்பது. Notification Settings: பலருக்கு, அவர்கள் வைத்திருக்கும் வெவ்வேறு ஆப்களில் இருந்து வரும் அழைப்புகளால் செல்போனை மீனும் உபயோகிக்க வேண்டும் என்று தோன்றலாம். இதை தவிர்க்க, உங்கள் போன் செட்டிங்ஸிற்கு சென்று நீங்கள் அதிக நேரம் செலவிடும் செயலியின் நோட்டிஃபிகேஷனை ஆஃப் செய்து விடலாம். Schedule: காலையில் எழுவதற்கு, வேலை செய்வதற்கு என அனைத்திற்கும் ஒரு நேரத்தை குறிப்பிட்டு வைத்திருப்பதை போல, உங்கள் செல்போனை உபயோகிப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட அட்டவணையை நிர்ணயிக்க வேண்டும். இரவு நேரத்தில் போன் உபயோகிப்பது: என்ன நடந்தாலும் இரவு நேரத்தில் போன் உபயோகிக்க கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் தூக்கமும் பாதிக்கும், உங்கள் மன நலனும் பாதிக்கும். Use Tracker: எந்த செயலியை எவ்வளவு நேரம் உபயோகிக்கிறீர்கள் என்பதை, ட்ராக்கரை வைத்து கணக்கிடுங்கள். இதை வைத்து, குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அந்த செயலியே தானாக வெளி வந்து விடும். Seek Help: உங்களால் இந்த பிரச்சனையில் இருந்து தனியாக மீள முடியவில்லை என்றால், ஒரு மன நல ஆலோசகரிடமோ, நீங்கள் பேச விரும்பும் நபரிடமோ சென்று உதவி கேட்பதில் தவறே இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். Astro: ‘இந்த’ ராசிகளுக்கு... ஏழரை நாட்டு சனியிலும் படுத்தாமல் அருளை பொழிவார் சனி!Cucumberசச்சினை சதம் அடிக்க விடாமல் செஞ்சது தப்பு தான் - நினைவுகளை பகிர்ந்த தினேஷ் கார்த்திக்
Social Media Addiction Phone Addiction Social Media Usage Cell Phone Addiction Recovery How To Recover From Phone Addiction Cell Phone Addiction Tips How To Recover From Cell Phone Addiction Easy Tip செல்போன் பயன்பாட்டில் இருந்து தப்பிப்பது எப்படி செல்போன் பயன்பாட்டை குறைப்பது எப்படி சமூக வலைதளங்களின் உபயோகத்தை குறைப்பது எப்படி
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
Read more »
தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »
முகேஷ் அம்பானி போல டாப் பணக்காரர் ஆவது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க..முகேஷ் அம்பானி போல டாப் பணக்காரர் ஆவது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க..
Read more »
ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி? ‘இந்த’ ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க..ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி? ‘இந்த’ ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க..
Read more »
Weekly horoscope: இந்த வாரம் இந்த 4 ராசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!Weekly horoscope: ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
Read more »
