கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்? பாதுகாப்பு கேட்டு தவெக மனு!

Karur Stampede News

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்? பாதுகாப்பு கேட்டு தவெக மனு!
TvkVijayMadurai High Court
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 122 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 143%
  • Publisher: 63%

கரூர் துயர சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது.

கரூர் துயர சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது.நாளை திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!Mathi Angadi Application2026 சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து நகர்ந்து வரும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் , தற்போது களத்தில் இறங்கி மக்களை சந்தித்து வருகிறார்.

இரண்டு வாரஙக்ளுக்கு முன்பாக மக்களை சந்திக்கும் பயணத்தை விஜய் தொடங்கினார். திருச்சி, அரியலூர், நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த அவர், நேற்று முன்தினம் நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு ரூ. 10 லட்சம் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரூ. 20 லட்சம் அறிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி ரூ. 2 லட்சம் என மூன்று தரப்பில் இருந்தும் நிவாரண உதவித் தொகை அறிவிக்கப்பட்டது. நேரில் சென்று முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல கட்சி தலைவர்கள் ஆறுதல் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு மைய பிரச்சனையாக பார்க்கப்பட்ட விஜய், அன்று இரவே பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல், சென்னை திரும்பினார். இது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. அவரை பார்க்கத்தான் ஆயிரக் கணக்கில் மக்கள் வந்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடன் நிற்காமல் சென்றவர் எப்படி தலைவராவார். அவர் இன்னும் நடிகராகதான் தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறார். ஒரு கட்சி தலைவருக்கான பொறுப்புணர்வு அவரிடம் இல்லை என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் நேற்று விஜய்யை பல்வேறு கட்சி தலைவர்கள் அழைத்து அவரை தைரியப்படுத்தும் விதமாக பேசி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நாடாளுமன்ற தலைவர் ராகுல் காந்தியும் அவரிடம் நீண்ட உரையாடல் மேற்கொண்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இன்று காலைதான் சுமார் 34 மணி நேரம் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார் விஜய். இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு மதுரை கிளையில் தமிழக வெற்றிக் கழகம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ளது.மேலும் படிக்க: "கரூர் மக்களின் அழுகுரலை கடந்து செல்ல வழியின்றி தவிக்கிறேன்" - ஆதவ் அர்ஜுனா! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Kerala Lotterytvk vijayVaibhav Suryavanshiபுதிய வீடு கட்டும் மக்களுக்கு ஜாக்பாட்! மணல் முற்றிலும் இலவசம் - முதல்வர் அறிவிப்பு!கரூரில் 38 பேர் மரணம்: உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கிய காரணங்கள் என்ன?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tvk Vijay Madurai High Court Vijay Ask Permission To Meet Karur People Latest News In Tamil Tamilaga Vetri Kalagam Karur Tragedy Aadhav Arjuna Vijay Campaign Karur Vijay Campaign Tvk Petition கரூர் கூட்ட நெரிசல் விஜய் தவெக உயர்நீதிமன்ற மதுரை கிளை விஜய் பிரச்சாரம் கரூர் பிரச்சாரம் கரூர் பிரச்சாரத்தில் நடந்தது என்ன அண்மைச் செய்திகள் தமிழ்நாடு தமிழக வெற்றிக் கழகம் கரூர் துயர சம்பவம் ஆதவ் அர்ஜுனா கரூர் விஜய் பிரச்சாரம் தவெக மனு பாதுகாப்பு கேட்டு தவெக மனு

 

United States Latest News, United States Headlines



Render Time: 2026-04-02 15:04:37