Widow certificate | ஆதரவற்ற விதவை சான்றிதழ் குறித்து தமிழ்நாடு அரசு புதிய விளக்கம் கொடுத்துள்ளது. ]
Widow certificate Update | ஆதரவற்ற விதவை சான்றிதழ் என்பதற்கு மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு, மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதில் நடைமுறையில் பல பிரச்சனைகள் இருந்து வந்தது. குறிப்பாக அச்சான்றிதழ் வழங்க எவ்வித துணையுமில்லாமல் வசிக்க வேண்டும் என்பது போன்ற பொறுத்தமற்ற நிபந்தனைகள் இருந்தன. இவ்வித நிபந்தனைகளில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டுமென்று தமிழக முதல்வருக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் திரு. ராகேஷ் கக்காணி அவர்கள் சு வெங்கடேசனின் கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு, மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல; அவர்கள் இருந்தும் அவர்களால் ஆதரவற்ற விதவையின் வாழ்வாதாரத்திற்கு எந்தவித அணுகூலமும் கிடைக்காமல் ஆதரவற்ற நிலையில் இருப்பது என்றே பொருள்படும்,” என்று தெளிவுபடுத்தி உள்ளது.தமிழக அரசின் இந்த விளக்கத்திற்கு சு.வெங்கடேசன் எம்பி நன்றி தெரிவித்துள்ளார். தனது x தளத்தில், “ஆதரவற்ற விதவை சான்றிதழ் தொடர்பாக நான் எழுப்பிய பிரச்சனைக்கு தீர்வு. புதிய சுற்றறிக்கை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி.நடைமுறையில் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவற்கு தடையாக இருந்த முக்கியமான பிரச்சனை இச்சுற்றறிக்கையின் மூலம் தீர்வு காணப்பட்டிருக்கிறது. இது ஆதரவற்ற பெண்கள் எண்ணற்றோருக்கு பெரும் பலன் தரக்கூடிய ஒன்று. எனது கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.அம்மாடி, இவ்வளவு சம்பள உயர்வா!! 8வது ஊதியக்குழு...... மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போது நல்ல செய்திடோனால்ட் டிரம்பின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை பில்லியன் உயர்ந்துவிட்டதா...!நிவின் பாலி கடந்து வந்த பாலியல் குற்றங்கள் ! பெண் குற்றச்சாட்டில் நிரபராதியானர் நிவின் பாலி !
Tamil Nadu Govt TN Welfare Programs Widow Certificate News Su Venkatesan MP Su Venkatesan Destitute Widow Certificate Social Welfare Government Policy Widow Support Tamil Nadu Welfare Programs Legal Documentation தமிழ்நாடு அரசு சு வெங்கடேசன் எம்பி ஆதரவற்ற விதவைகள் ஆதரவற்ற விதவைகள் சான்று
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை கொடுக்கும் தமிழக அரசுtn velaivaaippu Scheme : தமிழ்நாடு அரசு வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய திறன் பயிற்சிகளை வழங்குகிறது.
Read more »
விடுமுறை! மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் -தமிழக அரசுWarning Schools & Colleges Leave: கனமழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவிப்பு.
Read more »
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு எப்போது.. அப்டேட் இதோState Government Employees DA Hike News: தமிழக அரசு அகவிலப்படியை தீபாவளிக்கு முன்னர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால், தீபாவளி பண்டிகைக்கான செலவுகளில் பணியாளர்களுக்கு பெரிய உதவி கிடைக்கும்.
Read more »
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் உத்தரவு வந்தாச்சுState Government Employees DA Hike News: அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 53 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Read more »
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை -தமிழக அரசு உத்தரவுTN School College Holiday: நாளை (அக்டோபர் 30) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பிற்பகல் அரைநாள் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவு
Read more »
ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி! பென்சனர்களுக்கு புதிய சிறப்பு சலுகை.. தமிழக அரசு அரசாணை!Ex Servicemen Pensioners News: ஓய்வூதியம் பெறும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தமிழக அரசு புதிய சிறப்பு சலுகை
Read more »
