பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் சேலம் ரா.அருள் மீதான தாக்குதலுக்கு பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ்கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.
பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் சேலம் ரா. அருள் மீதான தாக்குதலுக்கு பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.ஐப்பசி 18 செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Lord Shaniஒரு காலத்தில் ஹிட் ஹீரோயின்-இப்போ வீடியோ காலில் சம்பாதிக்கிறார்! யார் தெரியுமா? பா.
ம.க. சட்டமன்ற உறுப்பினர் சேலம் ரா.அருள் மீதான தாக்குதலுக்கு பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ்கண்டன அறிக்கைபாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரா.அருள் அவர்கள் இன்று காலை சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் பா.ம.க ஒன்றிய செயலாளர் சத்தியராஜின் தந்தை இறப்பு செய்தியை அறிந்து வடுகதத்தம் பட்டி கிராமத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பும் வழியில், ஏத்தாப்பூர் காவல் நிலைய எல்லையான மத்தூர் தரைப்பாலத்தில், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெ.பி என்கிற ஜெயப்பிரகாஷ் தலைமையில் அன்புமணி ஆதரவு சட்டவிரோத கும்பல் ஒன்று கத்தி, இரும்பு பைப்புகள், கட்டைகள் போன்ற ஆயுதங்களுடன் சட்ட மன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவருடன் வந்த கட்சியினரின் 5 கார்களை வழிமறித்து,"மருத்துவர் அன்புமணி வாழ்க" என்று கோஷம் எழுப்பி கொண்டு"அய்யாவுடன் சேர்ந்து கொண்டு அன்புமணி அண்ணனுக்கு எதிராகவே அரசியல் செய்கிறீர்களாடா.." என்றும் முழங்கியவரே கார் கண்ணாடிகளை அடித்து, உடைத்து, நொறுக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருளை குறி வைத்து கொலை செய்ய வேண்டும் என ஜெயப்பிரகாஷ் ஒரு கல்லை தூக்கி வந்து"அன்புமணி அண்ணன் தான் உன்னை அடித்து கொலை செய்ய சொன்னார்" என்றும்,"இனிமேல் அன்புமணி அண்ணனை எதிர்ப்பவர்களுக்கும், அய்யாவுடன் இருக்கும் ஆட்களுக்கும் இதே கதிதான் என கூறி உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன்" என்றும். கூறிக்கொண்டே கொலை செய்யும் நோக்கத்துடன் சட்ட மன்ற உறுப்பினர் அருள் தலையில் அடிக்க முற்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை காவல்துறையை சேர்ந்தவர்கள் நேரில் பார்த்து உள்ளனர். கருத்தை, கருத்தால் எதிர்கொள்ளாமல், ஜனநாயகத்திற்கு எதிராக நடந்த இந்த தாக்குதல் நிகழ்வு கடுமையான கண்டனத்துக்குரியது. கடந்த சில நாட்களாக சேலம், அரியலூர், தர்மபுரி, தஞ்சை போன்ற மாவட்டங்களில் அன்புமணி அவர்கள் பலரை தூண்டிவிட்டு என்னையும், என்னுடன் இருக்கும் முக்கிய பொறுப்பாளர்களையும் அவமானப்படுத்தும் வகையிலும், சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வன்முறையை தூண்டி விட்டு மோதல் போக்கை உருவாக்கி வருகிறார். வன்முறையை தூண்டுபவர்களை அன்புமணி அவர்கள் உற்சாகப்படுத்தி, பாராட்டி பொறுப்புகள் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார். மேலும் அன்புமணியின் தூண்டுதலின் பேரில் பல மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மோதல்கள் நடந்து வருகிறது. அதில் சிலர் கடுமையாக தாக்கப்பட்டும் வருகின்றனர். இவ்வாறு அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் மீதான தாக்குதலுக்கும், கலவரத்திற்கும் காரணம் அன்புமணியின் நடைபயணம்தான். அன்புமணி நடைபயணம் என்ற பெயரில் என்னை அவமானப்படுத்தி, என்னுடன் உள்ள பா.ம.க.வினரை அழித்து ஒழிக்க வேண்டும் என திட்டமிட்டு அமைதியாக உள்ள தமிழகத்தில் வன்முறையை தூண்டி வருகிறார். எனவே தான் இந்த நடை பயணம் தொடங்குவதற்கு முன்பாகவே, 'நடைபயணம் என்ற பெயரில் கலவரங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர், மோதல் சம்பவங்கள் நடைபெறும்' என்ற நம்பிக்கையின் அடிப்படையில் காவல்துறைக்கு உரிய தகவல் கொடுத்தோம். அதை ஏற்காமல் காவல்துறை நடைபயணத்திற்கு அனுமதி வழங்கியதே இந்த மோதல் சம்பவங்களுக்கு காரணம். அமைதிப் பூங்காவான தமிழகத்தை கலவரமாக்கும் நோக்கத்தில் செயல்படும் அன்புமணியின் நடைப்பயணத்திற்கு இனியும் அனுமதி வழங்கினால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும். காவல்துறை இவற்றை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அன்புமணியுடன் இருக்கும் கும்பலின் நடவடிக்கைகளால் தொண்டர்களும், மக்களும் அவர்கள் மீது நம்பிக்கையற்று, அவருக்கு எதிராக, உண்மையான பாட்டாளிகளாக அணி திரண்டு என்னிடம் வருகிறார்கள். என்னுடன் இருக்கும் பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்களை தம்பக்கம் இழுக்க பல்வேறு வலைகளை வீசியும், ஆசை வார்த்தைகள் கூறியும் இயலாமல் போன விரக்தியின் வெளிப்பாடாக தற்போது கட்சி நிர்வாகிகள் மீது ரவுடிகளை வைத்து தாக்குதல்களை கட்ட விழ்த்து விட்டுள்ளார்."டீசன்ட் அன்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ்" என்று, நாகரிக அரசியல் செய்வதாக மேடைக்கு மேடை போலியான வார்த்தைகளால் முழங்கி வரும் அன்புமணி தற்போது அநாகரிகமான அரசியலையும், வன்முறை அரசியலையும் கையில் எடுத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினரான அருள் மீதான இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், குண்டர்களாக செயல்பட்ட அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும் சட்டமன்ற உறுப்பினர் அருள் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் சுதந்திரமாக மக்கள் பணி செய்வதற்கும் ஏதுவாக அவருக்கு ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய குழு காவலர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம் ஆகும். அத்துடன், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இம்மாதிரியான, மோசமான சம்பவங்கள் நடத்தி கலவரத்தை ஏற்படுத்தலாம் என்கிற எண்ணத்தில் அன்புமணியே திட்டமிட்டு, தூண்டுதலை செய்ததே இந்த சம்பவத்திற்கு காரணம். இவ்வாறு திட்டமிட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் விதமாக, என்னுடன் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினரை தாக்க வேண்டும் என்று சதி திட்டத்தோடு செயல்படும் அன்புமணியின் கும்பலை தடை செய்து, அந்த சட்ட விரோத கும்பலில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும் என காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன். மேலும் படிக்க | அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! முக்கிய கோரிக்கைகள் மற்றும் அரசின் நடவடிக்கைMohammed Shamiகொல்கத்தா அணிக்கு கேப்டனாகும் பிரபல விக்கெட் கீப்பர்.. சஞ்சு சாம்சன் இல்லை.. யார் தெரியுமா?கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் 3 கேள்விகள்!அந்தரங்க உறுப்பை வீடியோ எடுத்து நடிகைக்கு அனுப்பிய நபர்.. பெங்களூரில் அதிர்ச்சி! நடந்தது என்ன?EPFO
Ramadoss Anbumani Arul அருள் அன்புமணி ராமதாஸ் PMK Ramadoss Offical Statement Arul Attack Case பாமக உள்கட்சி மோதல் எம்எல்ஏ அருள் தாக்குதல் ராமதாஸ் அன்புமணி மோதல் குண்டர் சட்ட கோரிக்கை சேலம் வன்முறை பாமக உள்கலவரம் PMK Faction Clash MLA Arul Attack Ramadas Anbumani Feud Goondas Act Demand
