ICC T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் தேதி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
ICC T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் தேதி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.மார்ச் மாதம் வரை டி20 உலகக் கோப்பை நடைபெறும்.PF உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசு: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்.
..கார்பஸ், ஓய்வூதியம் அதிகரிக்கும்புகைப்படம் + எடிட்டிங்... தமிழ்நாடு அரசின் 5 நாள்கள் பயிற்சி - பதிவு செய்வது எப்படி? கடைசியாக ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் 2024ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் நடைபெற்றது. அடுத்து 2026ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதிவரை டி20 உலகக் கோப்பை நடைபெற இருக்கிறது. ஆனால், இதுவரை பிசிசிஐ மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை மற்றும் பிரிவுகள் வெளியிடவில்லை.பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 2026 ஐசிசி உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியும்,ICC T20 World Cup 2026: இந்தியாவில் 5 மைதானங்களில் மட்டுமே... மேலும், இந்தியாவில் மொத்தம் 5 மைதானங்களிலேயே டி20 உலகக் கோப்பை தொடரை நடைபெறும் என்று தகவல்கள் கூறப்படுகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், டெல்லி அருண் ஜெட்லி மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானம், மும்பை வான்கடே மைதானம், சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானம் என ஐந்து நகரங்களில் தொடர் நடைபெற உள்ளது. அரையிறுதிப் போட்டிகளில் ஒன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மற்றொரு போட்டி இலங்கை கொழும்புவில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிபெற்றால் அந்த போட்டி இலங்கையிலேயே நடைபெறும். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெறாது.ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் அட்டவணை வரும் நவ. 25ஆம் தேதி அன்று வெளியாகும் என தகவல்கள் கூறப்படுகிறது. மொத்தம் 20 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதும். குரூப் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் குரூப் 8 சுற்றுக்கு தகுதிபெறும். குரூப் 8 சுற்றில் இரு பிரிவுகளாக 8 அணிகளும் பிரிக்கப்படும். இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.இந்தியா, இலங்கை அணிகள் தொடரை நடத்துவதால் அவர்கள் நேரடியாக தகுதிபெற்றுவிட்டார்கள். கடந்த உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்குச் சென்ற ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா அணிகளும் நேரடியாக தகுதிபெற்றுள்ளன. பாகிஸ்தான், நியூசிலாந்து, அயர்லாந்து அணிகள் ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் தகுதிபெற்றுள்ளன.அமெரிக்க தகுதிச்சுற்றில் வென்று கனடா அணியும்; ஐரோப்பிய தகுதிச்சுற்றில் வென்று நெதர்லாந்து, இத்தாலி அணிகளும்; ஆப்பிரிக்கா தகுதிச்சுற்றில் வென்று நம்பீபியா, ஜிம்பாப்வே அணிகளும்; ஆசிய நாடுகள் தகுதிச்சுற்றில் நேபாளம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கின்றன. இந்தியா இடம்பெற உள்ள பிரிவில் பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா அணிகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை தொடர் எப்போது...? வந்தது முக்கிய செய்தி - குஷியில் இந்திய ரசிகர்கள்!மேலும் படிக்க | மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்... வெளியான புதிய தகவல் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.Ladaki Bahin YojanaBSNL Rs 99 planMK Stalin8வது ஊதியக்குழு: லெவல் 1 அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பாகும் சம்பளம், HRA, TA, DA எல்லாம் உயரும்salary hikeவிருச்சிக ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி: பண மழையில் நனையப் போகும் 3 ராசிகள்
ICC T20 World Cup 2026 Schedule ICC T20 World Cup 2026 IND Vs PAK Match India Vs Pakistan IND Vs PAK Match Date ICC T20 World Cup 2026 Venues ICC T20 World Cup 2026 Teams ICC T20 World Cup 2026 Groups Team India India National Cricket Team ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 ஐசிசி உலகக் கோப்பை 2026 அட்டவணை ஐசிசி உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி இந்தியா பாகிஸ்தான் போட்டி இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 அட்டவணை ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 மைதானங்கள் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 அணிகள் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 பிரிவுகள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
U19 World Cup 2026 Schedule: U19 वर्ल्डकप 2026 के शेड्यूल का हुआ ऐलान, जानिए कब और कहां खेलेगी टीम इंडियाU19 World Cup 2026 Schedule: इंटरनेशनल क्रिकेट काउंसिल की ओर से आगामी अंडर-19 विश्वकप 2026 के शेड्यूल का ऐलान कर दिया है. क्रिकेत्त | खेल समाचार
Read more »
टी-20 वर्ल्ड कप में 15 फरवरी को भारत-पाकिस्तान मैच: टूर्नामेंट की शुरुआत 7 फरवरी से; 8 मार्च को अहमदाबाद मे...ICC T20 World Cup 2026 Schedule Update; Follow IND Vs PAK Match Venue, Date And Details On Dainik Bhaskar.
Read more »
T20 World Cup 2026 Schedule: कोलंबो में हो सकता है भारत-पाकिस्तान मैच, यह होगी तारीख, अहमदाबाद में होगा फाइनलT20 World Cup 2026 Schedule: आईसीसी ने अगले साल होने वाले टी20 वर्ल्ड कप की तारीख की घोषणा कर दी है। वर्ल्ड कप के मुकाबले 7 फरवरी को शुरू होंगे, जबकि फाइनल 8 मार्च को खेला जाएगा। किस दिन, किन टीमों के मैच होंगे, इसकी ऑफिशियल घोषणा अभी बाकी है।
Read more »
T20 World Cup 2026 Schedule: फिर टकराएंगे भारत और पाकिस्तान, अगले साल इस तारीख को होगा महा-मुकाबलाअगले साल भारत और श्रीलंका की मेजबानी में टी20 वर्ल्ड कप का आयोजन किया जाना है। इस टूर्नामेंट में एक बार फिर भारत और पाकिस्तान की टीमें टकराएंगी। दोनों को एक ही ग्रुप में रखा गया है।
Read more »
भारत-पाकिस्तान टी20 वर्ल्ड कप 2026 में कब और कहां भिड़ेंगे...किस टीम के खिलाफ टीम इंडिया करेगी अभियान की शु...IND vs PAK T20 World Cup 2025 Clash Date: टी20 विश्व कप 2026 का आयोजन अगले साल भारत में होगा. भारतीय टीम को यूएसए, नामीबिया, पाकिस्तान और नीदरलैंड्स के साथ ग्रुप में रखा गया है. भारत और पाकिस्तान का मैच 15 फरवरी को कोलंबो में होगा.
Read more »
18 ವರ್ಷಗಳ ನಂತರ ಒಂದೇ ದಿನ ರಾಹು-ಕೇತು ಸಂಚಾರ: 3 ರಾಶಿಯವರಿಗೆ ಕೋಟ್ಯಾಧಿಪತಿ ಯೋಗRahu Ketu transit 2026 Lucky Zodiac Signs: ಈ ಮೂರು ರಾಶಿಯವರು ರಾಹು ಕೇತು ಸಂಚಾರದಿಂದ ಅದೃಷ್ಟಶಾಲಿಗಳಾಗಲಿದ್ದಾರೆ.
Read more »
