Thalapathy 50: ‘தளபதி’ 50 ஸ்பெஷல்..விஜய் குறித்த 50 சுவாரஸ்ய தகவல்கள்!

Vijay Birthday News

Thalapathy 50: ‘தளபதி’ 50 ஸ்பெஷல்..விஜய் குறித்த 50 சுவாரஸ்ய தகவல்கள்!
Thalapathy VijayActor Vijay BirthdayThalapathy 50
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 311 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 215%
  • Publisher: 63%

Thalapathy 50: ‘தளபதி’ 50 ஸ்பெஷல்..விஜய் குறித்த 50 சுவாரஸ்ய தகவல்கள்!

Actor Vijay Unknown Facts : ரசிகர்களால், தளபதி என்று அன்புடன் அழைக்கப்படும் விஜய்க்கு, இன்று 50வது பிறந்தநாள். இந்த நாளில், அவர் குறித்து யாரும் அறியாத தகவல்களை இங்கு பார்ப்போம்.Actor Vijayசுகப்பிரசவம் எளிமையாக நடைபெறும்.

. இந்த யோகாசனங்கள் செய்தால் போதும் பொதுவாகவே, 90கள் மற்றும் 2000ம் ஆண்டுகளில் பிறந்தவர்களில் பெரும்பாலனோருக்கு விஜய் அல்லது அஜித்தான் பிடித்த ஹீரோக்களாக இருப்பார்கள். காரணம், இவர்களின் படங்களை பார்த்துதான் அவர்கள் வளரவே செய்திருப்பார்கள். நடிகரும், தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியின் தலைவருமான விஜய், தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும், இங்கு பார்ப்போம்.20 வருடங்களுக்கு முன்பு வரை, கல்லூரியில் படிக்கும் மாணவனாக நடித்து வந்தவர்,. அப்போதே அவர் தனது 30களில் இருந்தார் என்பது இப்போதுதான் தெரிகிறது. தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் திரையுலகிற்கு வந்திருந்தாலும், தற்போது தென்னிந்திய திரையுலகிலேயே தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர். இவருக்கு பல லட்சம் ரசிகர்கள் இருப்பதற்கு காரணம், நடிப்புத்திறமை மட்டுமல்ல, பலருக்கு உதவும் நல்ல குணமும்தான் என்று இவரது ரசிகர்களால் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான லியோ படத்தில் கூட, இளமையுடனும் துள்ளளுடனும் இருந்த விஜய்யை பார்க்க முடிந்தது. இந்த நிலையில், இவருக்கு 50 வயதாகி விட்டது என்பதை பலரால் நம்பவே முடியவில்லை.உண்மை பெயர்..மறைந்த தங்கை..குடும்ப பின்னணி..விஜய் 1984 முதல் 1998 வரை, தனது தந்தை இயக்கிய 5 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்ரஜினிகாந்துடன் நான் சிவப்பு மனிதன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.கலைத் துறையில் தமிழகத்தின் உயரிய விருதான கலைமாமணி விருதைப் பெற்றவர்.விஜய்க்கு வித்யா சந்திரசேகரன் என்ற தங்கை இருந்தார். இவர், 2 வயதாக இருந்த போது உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். விஜய், தனது தங்கை இறந்தவுடன் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அதிலிருந்துதான் மிகவும் அமைதியான மனிதராக மாறியதாகவும் அவரது தாய் சோபனா ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார். தனது மறைந்த தங்கை மீது மிகவும் பாசம் கொண்ட விஜய், விவி ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இது, விஜய்-வித்யா என்பதை குறிக்கிறது. 2009ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் என்ற இவரது ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தனது ரசிகர்களை நற்பணிகள் செய்யுமாறு அறிவுருத்தினார் விஜய். விஜய், கல்லூரி படிப்பை முடிக்கவில்லை என்று பலர் நடித்திருக்கின்றனர். ஆனால், அவர் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிக்கேஷன் பட்டம் பெற்றிருக்கிறார்.விஜய், தனது பெற்றோர்களால் பார்த்து வைக்கப்பட்ட சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். விஜய், போக்கிரி படத்தின் இந்தி ரீ-மேக்கான ரவுடி ராத்தோர் படத்தின் ஒரு பாடல் காட்சியில் மட்டும் நடித்திருக்கிறார். விஜய் ஒரு முறை அமெரிக்காவிற்கு சென்றிருந்த போது டாம் க்ருஸின் அழகிய இல்லத்தை பார்த்தார். இதைப்பார்த்து வியந்து போன இவர், அதை போட்டோ எடுத்து தனது வீட்டையும் அதே போல கட்டியிருப்பதாக கூறப்படுகிறது.ஆசியாவின் ஈஸ்டர்ன் ஐ 2023ஆம் ஆண்டிற்கான டாப் பிரபலங்களின் பட்டியலில்விஜய் இடம் பெற்றிருக்கிறார் இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர்களை தாண்டி இடம் பெற்ற ஒரே தமிழ் நடிகர் இவர்தான்.நடிப்பில் பிரியமானவளே படம் வெளியானது. இதில் அவர் குழந்தைக்காக ‘ஜூன் ஜூலை மாதத்தில்’ பாடல் இடம் பெற்றிருக்கும். இந்த படப்பிடிப்பின் போது, அவரது மனைவி சங்கீதா உண்மையாகவே கர்ப்பமாக இருந்தார். அதனால், இந்த பாடலில் விஜய் மிகுந்த ஆனந்தத்துடன் நடித்ததாக கூறப்படுகிறது.விஜய்க்கு 2010-2012 ஆம் ஆண்டு வரை வெளியான விஜய் படங்களில், பெரும்பாலானவை நல்ல வெற்றியை பெற்றன. விஜய், முன்பு இளைய தளபதி என்று அழைக்கப்பட்டார். பின்பு அவருக்கு வயதானவுடன் ‘இளைய’ எனும் டைட்டில் மறைந்து போனது. நடிகர் விஜய் நடிப்பு மட்டுமல்ல, திறமையாக பாடலும் பாடுபவர். இதுவரை தான் நடித்த படங்களில் 35ற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார் தமிழ் திரையுலகில் வேகமாகவும், சூப்பராகவும் நடனமாடத்தெறிந்த நடிகர்களுள் முதன்மையானவர் விஜய். இவர் வேகத்திற்கு எந்த நடிகையாலும் ஈடுகொடுத்து ஆட முடியாதாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகரான விஜய், அவரது படங்கள் அனைத்தையும் பார்த்து விடுவாராம்.தமிழ் திரையுலகில் இருக்கும் 20ற்கும் மேற்பட்ட இயக்குநர்கள் விஜய்யால்தான் திரையுலகிற்கு வந்ததாக கூறப்படுகிறது.விஜய் இதுவரை கோட் படத்துடன் சேர்த்து 68 படங்களில் நடித்திருக்கிறார்.விஜய்யின் படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும், பாக்ஸ் ஆபிஸில் எப்படியேனும் ஹிட் அடித்து விடும்.விஜய் ஒரே மாதிரியான கதையை தேர்ந்தெடுத்து நடிக்காதவர். ஒரு படம் ஆக்ஷன் படமாக இருந்தால், இன்னொரு படம் காமெடி-காதல் படமாக இருக்கும். சமீப காலமாகத்தான் அவர் இது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில்லை. விஜய் இதுவரை அதிகம் கோக்கோர்த்து நடித்த இயக்குநர், அவரது தந்தை எஸ்.ஏ சந்திரகேர்தான். விஜய்யின் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் அவர் 11க்கும் மேற்பட்ட படங்களில் அவருடன் கைக்கோர்த்திருக்கிறார். தனது தந்தைக்கு பிறகு விஜய் மூன்று முறை கைக்கோர்த்த இயக்குநர், அட்லீ. அதன் பிறகு 2 முறை லாேகேஷ் கனகராஜ் உடன் இணைந்திருக்கிறார்.விஜய்யின் வீட்டில் 2020ஆம் ஆண்டு வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால், அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இவரது படங்கள் வெளியாகும் சமயங்களில் அதன் பாடல்கள் குறித்தும், போஸ்டர் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுவதுண்டு. விஜய்யின் வெளிநாட்டு ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க வேண்டும் என்று கோர்டில் வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு, எந்த வரியும் செலுத்த வேண்டாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.தனது தாய்க்காக சோலிங்கநல்லூரில் நடிகர் விஜய் ஒரு சாய் பாபா கோயிலை கட்டிக்கொடுத்து இருக்கிறார். விஜய், கோட் படத்தில் 2 பாடல்களை பாடியிருக்கிறார். இதற்கு முன்னர் எந்த படங்களில் ஒரு பாடலுக்கு மேல் பாடியதாக தெரியவில்லை.உச்ச நட்சத்திரமாக இருக்கும் போதே முழு நேர அரசியலில் ஈடுபட, திரையுலகை விட்டு விலகும் நடிகரும் இவரே.சாதுவான நடிகர் விஜய், வில்லு படத்தின் பத்திரிக்கையளார்கள் சந்திப்பில் கோபமடைந்தது பேசு பொருளாக மாறியது. விஜய், எப்போதும் அமைதியாக இருப்பாராம். ஆனால் சிரிக்க ஆரம்பித்தால் ஃபிரண்ட்ஸ் படத்தில் வருவது போல சிரித்துக்கொண்டே இருப்பாராம். தனது பெற்றோரிடம் ஓராண்டான நடிகர் விஜய் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் தனது தாய் தந்தையை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அரசியல் கட்சியை அறிவித்த விஜய், போட்டியிட்டால் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் என விடாப்பிடியாக இருக்கிறார். விஜய், கடந்த ஆண்டில் இன்ஸ்டாகிராம் கணக்கை தாெடங்கினார். அதி வேகமாக 10 மில்லியன் ஃபாலோவர்ஸை பெற்ற நடிகர்களுள் ஒருவர் இவர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன? முன்னாள் ஆட்சியர் சொன்ன அந்த ஒரு வார்த்தைகள்ளக்குறிச்சி விவகாரம்: 34 பேர் மரணம்... உயரும் பலி எண்ணிக்கை! நிவாரணம் அறிவிக்கப்படுமா?maharajaWeather ReportT20 World Cup 2024

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Thalapathy Vijay Actor Vijay Birthday Thalapathy 50 Vijay Unknown Facts Actor Vijay Mysterious Facts Actor Vijay Sister Actor Vijay Biography Actor Vijay Education Actor Vijay Birthday Date Actor Vjay Unknown Facts Latest Actor Vijay Lates Actor Vijay Family Details Actor Vijay Personal Details நடிகர் விஜய் நடிகர் விஜய் குறித்த அறியாத தகவல்கள் நடிகர் விஜய் பற்றி யாரும் அறியாத தகவல்கள் விஜய் க நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் விஜய்யின் உண்மையான பெயர் Vijay Real Name Actor Vijay Real Name Actor Vijay Upcoming Films Actor Vijay GOAT Movie Vijay Movies Tamil Vijay Cameo Movies Actor Vijay Controversies Actor Vijay Lesser Known Facts

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

தளபதி விஜய்யின் 50வது பிறந்த நாள்.. ரீ ரிலீஸாகும் பிளாக்பஸ்டர் படம் போக்கிரிதளபதி விஜய்யின் 50வது பிறந்த நாள்.. ரீ ரிலீஸாகும் பிளாக்பஸ்டர் படம் போக்கிரிPokiri Movie To Be Re Released: தளபதி விஜய்யின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு போக்கிரி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Read more »

Thalapathy 69 : விஜய் ரசிகர்களுக்கு ஷாக்!‘தளபதி 69’ படம் டிராப்பா?!Thalapathy 69 : விஜய் ரசிகர்களுக்கு ஷாக்!‘தளபதி 69’ படம் டிராப்பா?!Thalapathy 69 : விஜய் ரசிகர்களுக்கு ஷாக்!‘தளபதி 69’ படம் டிராப்பா?!
Read more »

பாகிஸ்தானின் பணக்கார பிச்சைக்காரர்... ஆத்தாடி... சொத்து மதிப்பு இவ்வளவா?பாகிஸ்தானின் பணக்கார பிச்சைக்காரர்... ஆத்தாடி... சொத்து மதிப்பு இவ்வளவா?Richest Beggar In Pakistan: கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான் நாட்டில் பல லட்சங்களுக்கு அதிபதியாக இருக்கும் பணக்கார பிச்சைக்காரர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.
Read more »

Maharashtra: बीएमसी मुख्यालय सहित मुंबई के 50 अस्पतालों को बम से उड़ाने की धमकी, अज्ञात शख्स ने भेजा ई-मेलMaharashtra: बीएमसी मुख्यालय सहित मुंबई के 50 अस्पतालों को बम से उड़ाने की धमकी, अज्ञात शख्स ने भेजा ई-मेलMaharashtra: बीएमसी मुख्यालय सहित मुंबई के 50 अस्पतालों को बम से उड़ाने की धमकी, अज्ञात शख्स ने भेजा ई-मेल Mumbai BMC headquarters including 50 hospitals received bomb threats
Read more »

Motorola Edge 50 Ultra: మూడు 50MP, ఒక 64MP కెమేరాతో శక్తివంతమైన మోటోరోలా ఎడ్జ్ 50 అల్ట్రాMotorola Edge 50 Ultra: మూడు 50MP, ఒక 64MP కెమేరాతో శక్తివంతమైన మోటోరోలా ఎడ్జ్ 50 అల్ట్రాMotorola launches its new smartphone Motorola Edge 50 Ultra మోటోరోలా ఎడ్జ్ 50 అల్ట్రా కొత్తగా భారతీయ మార్కెట్‌లో నిన్న జూన్ 18న లాంచ్ అయింది. ఇప్పటికే ఈ సిరీస్‌లో మోటోరోలా ఎడ్జ్ 50 ప్రో, ఎడ్జ్ 50 ఫ్యూజన్ లాంచ్ కాగా ఇప్పుడు ఇదే సిరీస్ కొనసాగింపుగా మోటోరోలా ఎడ్జ్ అల్ట్రా విడుదలైంది.
Read more »

Thalapathy 69: தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தாெடக்கம்! எந்த மாதத்தில் தெரியுமா?Thalapathy 69: தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தாெடக்கம்! எந்த மாதத்தில் தெரியுமா?Thalapathy 69: தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தாெடக்கம்! எந்த மாதத்தில் தெரியுமா?
Read more »



Render Time: 2026-04-02 00:37:57