Monkeypox Virus: ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் தொடங்கிய குரங்கு அம்மை வைரஸ் தொற்று, ஸ்வீடன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பரவித் தொடங்கி, நமது அண்டை நாடான பாகிஸ்தான் வரை வந்துவிட்டதால், இந்திய அரசு தேவையான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Monkeypox Virus: ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் தொடங்கிய குரங்கு அம்மை வைரஸ் தொற்று, ஸ்வீடன் , பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பரவித் தொடங்கி, நமது அண்டை நாடான பாகிஸ்தான் வரை வந்துவிட்டதால், இந்திய அரசு தேவையான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளுடன் எய்மஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டார்.இந்தியாவில் குரங்கு அம்மை பரவல்: தில்லியில், குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளுடன் நோயாளி ஒருவர் சிகிச்சையில் உள்ளதாக எய்ம்ஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. நோயாளி வெளிநாடு சென்றுவிட்டு நாடு திரும்பிய நிலையில், அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தலைவலியுடன் குரங்கு காய்ச்சலின் பிற அறிகுறிகள் இருந்தன. அவசர சிகிச்சை பிரிவு: எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த அவர் AB-7 என்னும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்த வார்டு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.குரங்கு அம்மை காய்ச்சல் அறிகுறிகளுடன் வந்த அவருக்கு பரிசோதனை நடத்தியதில், அவர் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. இருப்பினும், அவர் எங்கிருந்து வந்தார்... அவருடன் வந்த வேறு யாருக்காவது குரங்கு அம்மை அறிகுறிகள் இருக்கிறதா என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. தில்லி எய்மஸ் மருத்துவமனையில் தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள நிலையில், நோயாளிக்கு என்ன வகையான அறிகுறிகள் இருந்தன என்பது குறித்து மருத்துவமனை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.Mpox தடுப்பூசி: நேற்று முன் தினம், கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி தயாரித்த சீரம் நிறுவனம் குரங்கு அம்மை வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.MPOX சிகிச்சை: குரங்கு அம்மை வைரஸ் தொற்று நோய்க்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும், வலி மற்றும் காய்ச்சல் போன்ற அதன் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்து கொடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. பெரியம்மை தடுப்பூசி: பெரியம்மை அறிகுறிகளும் குரங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளும், ஒரே மாதிரி இருப்பதால், பெரியம்மை தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை வைரஸ் தாக்குதலில் இருந்து ஓரளவு பாதுகாப்பு கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.குரங்கு வைரஸ் தொற்று தொற்று அறிகுறிகள்: Mpoxதொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் காய்ச்சல், தலைவலி, தசை வலி ஆகியவற்றுடன் கைகள், கால்கள், வாய் அல்லது பிறப்புறுப்புகளில் அரிப்பு ஏற்படலாம். இறுதியில் இவை கொப்புளங்களாக உருவாகின்றன. கொரோனா போல்தான் குரங்கு அம்மையும்: எச்சரிக்கும் நிபுணர்கள், WHO கொடுத்த கிரேட் 3 அலர்ட்மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் பரிசு: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுசுக்கிரன் வீட்டை மாற்றினால் பிரச்சனை வீடு தேடி வரும்! கன்னி சுக்கிரனால் நஷ்டப்படப்போகும் ராசிகள்!
Monkeypox WHO குரங்கு அம்மை Suspected Mpox Patient In Delhi AIIMS Monkeypox L Mpox Symptoms Preventive Measures Who Issues Grade 3 Alert Who Monkeypox Symptoms கிரேட் 3 அலர்ட் Corona Preventive Measures மங்கிபாக்ஸ் பாகிஸ்தான் ஸ்வீடன் ஆப்பிகரிக்கா காங்கோ Mpox குரங்கு அம்மை என்றால் என்ன What Is Monkeypox குரங்கு அம்மை எவ்வாறு பரவுகிறது குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் என்ன Symptoms Of Monkeypox குரங்கு அம்மையைத் தடுக்கும் வழிகள் என்ன Monkeypox Preventive Measures குரங்கு அம்மையின் வகைகள் அறிகுறிகள் பரவும் முறைகள் தடுக்கும் வழிகள் Types Of Monkeypox இந்தியாவில் குரங்கு அம்மை உள்ளதா Monkeypox In India கிளேட் I Clade I கிளேட் II Clade II Africa Congo Sweden What Is Mpox Global Emergency Declared Over New Mpox Outbreak Who Declare Global Emergency Monkeypox Virus Symptoms Of Monkeypox Virus Is Monkeypox Spreading In India Is Monkeypox Vaccine Available In India Can Monkeypox Be Cured Who Is At Risk For Monkeypox
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இந்தியாவுக்கு மிக அருகில் குரங்கு அம்மை: அறிகுறிகள், பரவும் முறைகள், தடுக்கும் வழிகள் இதோMonkeypox: தற்போது ஆப்பிரிக்காவுக்கு வெளியேயும் குரங்கு அம்மை பரவிவிட்டது. சமீபத்தில், பாகிஸ்தானின் தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகம் நாட்டில் இந்த வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள தகவலை உறுதிப்படுத்தியது.
Read more »
மிரட்டும் குரங்கு அம்மை.... அறிகுறிகளும்... வராமல் தடுக்க செய்ய வேண்டியவையும்Monkey Pox Latest Update: ஆப்பிரிக்காவில் தொடங்கி, காங்கோ, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருவதால், உலகம் முழுவதும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
Read more »
குரங்கு அம்மை சிகிச்சையில் டெகோவிரிமேட் வேலை செய்யவில்லை... பதற்றத்தில் மருத்துவர்கள்குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த முன்னதாக பயன்படுத்தபப்ட்ட டெகோவிரிமாட் என்ற தடுப்பு மருந்து மூலம் முந்தைய அலை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது, அது வேலை செய்யவில்லை எற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
Read more »
சின்னம்மை தடுப்பூசி போட்டவர்களுக்கு குரங்கு அம்மை தாக்குதல் ஏற்படாதா... நிபுணர்கள் கூறுவது என்ன..!!குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் பொதுவாக வைரஸுடன் தொடர்பு கொண்ட 5 முதல் 21 நாட்களுக்குள் தோன்றும். இதில் பெரும்பாலான அறிகுறிகள் பெரியம்மை அறிகுறிகளைப் போலவே இருக்கின்றன.
Read more »
கொரோனா போல்தான் குரங்கு அம்மையும்: எச்சரிக்கும் நிபுணர்கள், WHO கொடுத்த கிரேட் 3 அலர்ட்Monkeypox: கொரோனா தொற்றைப் போலவே குரங்கு அம்மைக்கும் நாம் அச்சப்பட வேண்டி இருக்கும் என சுகாதார வல்லுனர்கள் கூறியுள்ளார்கள்.
Read more »
Mpox Update: பெரியம்மை தடுப்பூசி குரங்கு அம்மை வைரஸ் தாக்குதலை தடுக்குமா...குரங்கு அம்மை வைரஸ் என்னும் மங்கி பாக்ஸ், உலக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் வரை மங்கி பாக்ஸ் வந்து விட்டதால், இந்தியாவும் உயர் எச்சரிக்கை நிலையில் இருக்கிறது.
Read more »
