IPL தொடரில் சூதாட்டமா? இவரிடம் ஜாக்கிரதை - அணிகளுக்கு பிசிசிஐ கொடுத்த வார்னிங்

IPL 2025 Match Fixing Warning News

IPL தொடரில் சூதாட்டமா? இவரிடம் ஜாக்கிரதை - அணிகளுக்கு பிசிசிஐ கொடுத்த வார்னிங்
Match Fixing In IPL 2025Match Fixing Complaint In IPL 2025IPL 2025
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 173 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 138%
  • Publisher: 63%

ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்று வரும் சூழலில், சூதாட்டம் பின்னணி கொண்ட ஒரு நபர் குறித்து பிசிசிஐ அனைத்து அணிகளுக்கும் எச்சரிக்கை

Indian Premier League : ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்று வரும் சூழலில், சூதாட்டம் பின்னணி கொண்ட ஒரு நபர் குறித்து பிசிசிஐ அனைத்து அணிகளுக்கும் எச்சரிக்கை கொடுத்துள்ளது.தொழிலதிபர் என கூறப்படும் அந்த நபர் சூதாட்ட பின்னணி கொண்டவராம்.

பிரேமம் நடிகையுடன் காதலில் துருவ் விக்ரம்? இணையத்தில் கசிந்த புகைப்படம்!OTT-யில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படங்கள்.. எந்த தமிழ் படம் முதல் இடத்தில் இருக்கு?கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் அதன் உச்சக்கட்டத்தை தற்போது எட்டியிருக்கிறது என சொல்லலாம். அனைத்து அணிகளும் அதன் முதல் பாதி லீக் போட்டிகளை நிறைவு செய்ய இருக்கின்றன.இரண்டாம் பாதி லீக் சுற்றுப் போட்டிகளும் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதிப்பெறப்போவது யார் என்ற பெரிய கேள்வியும் 10 அணிகளை சுற்றி தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. நேற்றைய 31வது லீக் போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தாவை 95 சுருட்டி வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது. அதாவது, 111 ரன்கள் அடித்திருந்த பஞ்சாப் அணி, கொல்கத்தாவை 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததால், ஐபிஎல் வரலாற்றில் குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாக தடுத்த பெருமையைபெற்றுள்ளது. இதற்கு முன் 2009ஆம் ஆண்டு டர்பனில் 116 ரன்களை எடுத்திருந்த சிஎஸ்கே, பஞ்சாப் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே ஐபிஎல் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோரை டிஃபண்ட் செய்ததாக இருந்தது.இப்படி ஒவ்வொரு போட்டியும் பயங்கர விறுவிறுப்புடன் நடைபெற்று வர பிசிசிஐ, 10 அணிகளுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் அலர்ட் ஒன்றை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட தனிநபர்களை கவர்ந்திழுக்கும் முயற்சிகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இதைக் கருத்தில் கொண்டு, சூதாட்ட நடவடிக்கைகளில் சந்தேகப்படும் ஒரு தொழிலதிபர் அதுகுறித்த தொடர்பு கொள்ள தீவிரமாக முயற்சி செய்யலாம் என்று 10 அணிகளின் உரிமையாளர்கள், வீரர்கள், பயிற்சியாளர்களை எச்சரித்துள்ளது. குறிப்பாக வர்ணனையாளர்களையும் பிசிசிஐ எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.பொதுவெளியில் தொழிலதிபர் என அறியப்படும் அந்த ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றும், அந்த நபருக்கு சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், இதுபோன்ற செயல்களில் இதற்கு முன்பு ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது என்றும் ஊழல் தடுப்பு பாதுகாப்பு பிரிவு கருதுகிறது. எந்தவொரு முறைகேடுகளும் நிகழாமல் தடுக்க, ஊழல் தடுப்பு பாதுகாப்பு பிரிவு அனைத்து அணிகளையும் முன்கூட்டியே எச்சரித்துள்ளது. குறிப்பிடப்பட்ட நபரிடம் இருந்தோ அல்லது அவர்கள் தரப்பில் இருந்தோ வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி உரிமையாளர்களிடம் ஏதேனும் அணுகுமுறைகள் நடந்தால், உடனே அவர்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விலை உயர்ந்த நகைகள், பரிசுகளைக் கொண்டு தனிநபர்களை ஈர்க்க அவர்கள் முயற்சிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களை ரசிகராக காட்டிக்கொண்டு, அதன்மூலம் அணியையும், வீரர்களையும் நெருங்க முயற்சிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.அது மட்டுமின்றி, அந்த குறிப்பிட்ட தொழிலதிபர் அணியினர் தங்கயிருக்கும் ஹோட்டல்களுக்கு வருகிறாராம். விளையாடும் போட்டியையும் காண வருகிறாராம். வீரர்கள், அணியின் பயிற்சியாளர்களுடன் நட்பு கொள்ள முயற்சிப்பதும், அவர்களை தனியே பார்டிக்கு அழைப்பதும் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீரர்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினருக்கும் 'அவர்' பரிசுகளை வழங்கிய சம்பவங்களும் உள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்கள் மூலம் வீரர்களின் உறவினர்கள், வெளிநாட்டில் வசிக்கும் பயிற்சியாளர்களைத் தொடர்பு கொள்ள இந்த நபர் முயற்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும் படிக்க | ஐபிஎல்லில் MOM விருதை பெற்ற 7 வயதான வீரர்கள்.. டிராவிட்டுடன் இணைந்த தோனி.. முழு பட்டியல் இதோ! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்: டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? - முழு விவரம்cooku with comaliweight losslucknow super gaints

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Match Fixing In IPL 2025 Match Fixing Complaint In IPL 2025 IPL 2025 Indian Premier League Hyderabad Businessman With Match Fixing History Who Is That Match Fixing Hyderabad Businessman BCCI Anti Corruption Security Unit ACSU ஐபிஎல் 2025 இந்தியன் பிரீமியர் லீக் பிசிசிஐ ஊழல் எதிர்ப்பு பாதுகாப்பு பிரிவு யார் அந்த ஹைதராபாத் தொழிலதிபர் ஐபிஎல் சூதாட்டம் ஐபிஎல் சூதாட்டம் தொடர்புடைய ஹைதராபாத் தொழிலதிபர் பிசிசிஐ ஐபிஎல் தொடரில் சூதாட்டமா இவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என பிசிசிஐ அறிவுரை

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

IPL 2025: ஐபிஎல் தொடரில் இனி இந்த விதி கிடையாது... தடை நீங்கியது!IPL 2025: ஐபிஎல் தொடரில் இனி இந்த விதி கிடையாது... தடை நீங்கியது!IPL 2025: கரோனா காலகட்டத்தையொட்டி, ஐபிஎல் தொடரில் விதிக்கப்பட்ட தடையை தற்போது ஐபிஎல் நிர்வாகம் நீக்கி உள்ளது.
Read more »

ராஜஸ்தான் ராயல்ஸ் போராடி தோல்வி... திக் திக் போட்டியில் வென்றது SRHராஜஸ்தான் ராயல்ஸ் போராடி தோல்வி... திக் திக் போட்டியில் வென்றது SRHIPL 2025, SRH vs RR: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 286 ரன்களை குவித்து சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணி சாதனை படைத்திருக்கிறது.
Read more »

திக் திக் போட்டி... டெல்லி மாஸ் வெற்றி - ஆட்டத்தையே மாற்றிய இம்பாக்ட் பிளேயர் அஷுடோஷ் சர்மா...திக் திக் போட்டி... டெல்லி மாஸ் வெற்றி - ஆட்டத்தையே மாற்றிய இம்பாக்ட் பிளேயர் அஷுடோஷ் சர்மா...IPL 2025 DC vs LSG: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் 1 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
Read more »

SRH படுதோல்வி... காவ்யா மாறனுக்கு ஷாக் கொடுத்த LSG - புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றம்!SRH படுதோல்வி... காவ்யா மாறனுக்கு ஷாக் கொடுத்த LSG - புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றம்!IPL 2025 SRH vs LSG: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது.
Read more »

LIVE : தவெக பொதுக்குழு விஜய் பேச்சு சிஎஸ்கே - ஆர்சிபி மோதல் மத்திய அரசு கொடுத்த குட்நியூஸ்LIVE : தவெக பொதுக்குழு விஜய் பேச்சு சிஎஸ்கே - ஆர்சிபி மோதல் மத்திய அரசு கொடுத்த குட்நியூஸ்LIVE : தவெக பொதுக்குழு விஜய் பேச்சு சிஎஸ்கே - ஆர்சிபி மோதல் மத்திய அரசு கொடுத்த குட்நியூஸ் - இன்றைய அப்டேட்ஸ்
Read more »

CSK vs RCB: சிஎஸ்கே தோல்விக்கு இவர்கள்தான் காரணம்? புலம்பும் ரசிகர்கள்!CSK vs RCB: சிஎஸ்கே தோல்விக்கு இவர்கள்தான் காரணம்? புலம்பும் ரசிகர்கள்!சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது.
Read more »



Render Time: 2026-04-02 12:36:48