FBI தலைவராக பொறுப்பேற்றுள்ள இந்திய - அமெரிக்கர் காஷ் பட்டேலுக்கும், இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு
Kash Patel : FBI தலைவராக பொறுப்பேற்றுள்ள இந்திய - அமெரிக்கர் காஷ் பட்டேலுக்கும், இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. காஷ் பட்டேல் படிதார் சமூகத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
8வது ஊதியக்குழு முக்கிய கோரிக்கைகள்: கூடுதல் ஓய்வூதியம் முதல் பதவி உயர்வு வரை..... காத்திருக்கும் ஜாக்பாட் அறிவிப்புகள்நல்லகாலம் பிறக்குது..இந்த மாத இறுதிக்குள் 3 ராசிகள் வாழ்க்கை உச்சத்திற்கு மாறும்!Parenting Tipsஅமெரிக்காவின் FBI தலைவராக இந்திய - அமெரிக்கரான காஷ் பட்டேல் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் பகவத் கீதையின் மீது பிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டார். இவர்தான் அமெரிக்காவின் FBI அமைப்புக்கு தலைமை ஏற்கும் முதல் இந்திய - அமெரிக்கர் ஆவார். இந்நிலையில், அவருக்கும் இந்தியாவுக்கு உள்ள தொடர்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.காஷ் பட்டேலின் முன்னோர்கள் குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பத்ரன் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அங்கிருந்து அவர்கள் கடந்த 70-80 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் உகாண்டாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். காஷ் பட்டேலின் வேர் குறித்து இங்கு காணலாம்.நியூயார்க் நகரில் பிறந்தவர் ஆவார். அவர் படிதார் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். படிதார் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் வெளிநாடுகளில் குடிபெயர்ந்த காஷ் பட்டேலின் குடும்பத்தினர் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டனர். அவர்கள் ஆப்பிரிக்காவுக்கு சென்ற உடன், பத்ரன் கிராமத்தில் அவர்களுக்கு இருந்த பூர்வீக சொத்தையும் விற்றுவிற்றதாக தெரிவிக்கின்றனர்.ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ச் காம் படிதார் மண்டல் என்ற படிதார் சமுதாயம் சார்ந்த அமைப்பு ஒன்று உள்ளது. இந்த அமைப்பு இந்த சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர்கள் குறித்து தனியாக பதிவு செய்து வைத்துள்ளனர். இந்த பதிவுக்கு 'வான்ஷாவலி' என அழைக்கின்றனர். இதில், ஒரு குடும்பத்தினரின் ஆதி முதல் அந்தம் வரை அனைத்து உறுப்பினர்களையும் பதிவு செய்து வைக்கின்றனர். வான்ஷாவலி என்ற அந்த பதிவில் காஷ் பட்டேலின் தந்தை பிரமோத் பட்டேல், காஷ் பட்டேலின் தாத்தா, மூத்த சகோதரர் ஆகியோரின் பெயரும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், அவர்களின் குடும்பப் பதிவில் காஷ் பட்டேலின் பெயர் இன்னும் சேர்க்கப்படவில்லை. ஆனால், அவர் குடும்பத்தைச் சேர்ந்த 18 தலைமுறையினரின் பெயர்கள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.ச் காம் படிதார் மண்டல் என்ற படிதார் சமுதாயம் சார்ந்த அமைப்பின் செயலாளர் ராஜேஷ் பட்டேல் கூறுகையில்,"எங்களிடம் உள்ள பதிவுகளின்படி காஷ் பட்டேலின் குடும்பம் பத்ரன் கிராமத்தின் மோதி காட்கி பகுதியில் வசித்து வந்துள்ளனர். அவர்கள் கடந்த 70-80 ஆண்டுகளுக்கு முன் உகாண்டாவுக்கு குடியெபர்ந்தனர். அவர்கள் இங்கிருந்த பூர்வீக வீடு, நிலம் ஆகியவற்றை விற்றுவிற்று சென்றனர். அவர்களின் அனைத்து உறவினர்களும் அமெரிக்கா உள்பட வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். காஷ் பட்டேலின் குடும்பத்தைச் சேர்ந்த யாராவது இந்தியாவுக்கு வரும்போது, அவர்களிடம் வான்ஷவாலியில் காஷ் பட்டேல் மற்றும் அவரது பிற குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை சேர்க்க அனுமதி கேட்போம்.இதுவரை நாங்கள் காஷ் பட்டேலை சந்தித்தது இல்லை. அவரது குடும்பம் சமீப காலமாக ஆனந்த் மாவட்டத்திற்கு வரவில்லை. ஆனால், அவர்கள் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கிறது" என்றார். 1971இல் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டபோது, காஷ் பட்டேலின் குடும்பமும் இந்தியாவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. உகாண்டாவில் இருந்து இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என ராணுவ சதியில் ஆட்சியை கைப்பற்றிய சர்வாதிகாரி இடி அமீன் உத்தரவிட்டார். அப்போது அவர் இந்தியர்கள் நாடு திரும்ப 90 நாள்கள் காலகெடு விதித்தார். அப்போது பலரும் நாடு திரும்பினர்.மேலும், அவர்களில் பலரும் அந்த காலகட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் குடிபெயர்வதற்கும் விண்ணப்பித்திருந்தனர். காஷ் பட்டேலின் குடும்பத்தினருக்கு கனடாவில் குடிப்பெயர அனுமதி கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர், காஷ் பட்டேலின் குடும்பத்தினர் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். 1980இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காஷ் பட்டேல் பிறந்துள்ளார். வழக்கறிஞராக உள்ள காஷ் பட்டேல், ஐஸ் ஹாக்கி வீரராக உள்ளார். அவர் 6 வயதில் இருந்து ஐஸ் ஹாக்கி விளையாடி வருகிறார். 'நாங்கள் குஜராத்தியர்கள்' என அவரே ஊடகம் ஒன்றிடம் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க | உடலுறவு செய்தே உலக சாதனை செய்த... 2 ஆபாச நடிகைகளும் இப்போ கர்ப்பம் - தந்தை யார்? மேலும் படிக்க | யார் இந்த அமீர் அல் தானி? தங்க அரண்மனை, 500 கார்கள்.. அவரின் சொத்து மதிப்பு தெரியுமா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஒலியில் இருக்கும் பேய்! தமிழ் சினிமாவில் வித்தியாச முயற்சி! எப்படி இருக்கிறது ட்ரைலர்?ரூ. 5000 கோடி நிதியை தமிழ்நாடு இழக்கிறது... தர்மேந்திர பிரதான் பேச்சால் பரபரப்பு - என்ன காரணம்?Kerala Lotterydirector Shankarweight lossமொத்தம் 32,438 பணியிடங்கள்.. விண்ணப்பிக்காதவர்களுக்கு ரயில்வே கொடுத்த குட் நியூஸ்!
Bhagavad Gita Kash Patel Kash Patel Family Details Kash Patel Roots In India Kash Patel Patidar Community Who Is Kash Patel Kash Patel Family Background காஷ் பட்டேல் எஃப்பிஐ இயக்குநர் காஷ் பட்டேல் காஷ் பட்டேல் குடும்ப விவரம் காஷ் பட்டேலுக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு காஷ் பட்டேல் குடும்ப பின்னணி யார் இந்த காஷ் பட்டேல் பட்டிதார் சமூகத்தை சேர்ந்த காஷ் பட்டேல் குஜராத்தை சேர்ந்த காஷ் பட்டேல்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
தை 13... தினசரி ராசிபலன்... இன்று இந்தெந்த ராசிகளுக்கு ஆர்வம் அதிகரிக்கும் நாள்!Thai Month January 26 Rasipalan : தை 13ஆம் நாள் (ஜன. 26) 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »
Live: டெல்லியில் பாஜக வெற்றி அடுத்தகட்ட நகர்வு என்ன? உதயநிதி புதிய முடிவு! முக்கிய செய்திகள்!Live: டெல்லியில் பாஜக வெற்றி அடுத்தகட்ட நகர்வு என்ன? உதயநிதி புதிய முடிவு! முக்கிய செய்திகள்!
Read more »
மாசி 9... தினசரி ராசிபலன்... இந்தெந்த ராசிகளுக்கு இன்று மாற்றம் உண்டாகும்Maasi Month February 21 Rasipalan : மாசி 9ஆம் நாள் (பிப். 21) 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »
தனஸ்ரீ வர்மா விவாகரத்து உறுதி! நீதிமன்றம் உத்தரவு... மணமுறிவுக்கு என்ன காரணம்?சஹால் - தனஸ்ரீ வர்மா தம்பதியினருக்கு விவாகரத்து அளித்து மும்பை பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. விவாகரத்துக்கு காரணம் என்ன
Read more »
அடிக்கு மேல் அடி.. பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி.. என்ன நடந்தது?ஏற்கனவே பாகிஸ்தான் அணியில் இருந்து ஒரு வீரர் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகி உள்ள நிலையில், அந்த அணிக்கு மேல் ஒரு அடி விழுந்துள்ளது.
Read more »
மாசி 10... தினசரி ராசிபலன்... இன்று இந்த 4 ராசிகளுக்கு பொறுமை அவசியம்Maasi Month February 22 Rasipalan : மாசி 10ஆம் நாள் (பிப். 22) 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »
