Chennai Super Kings: வரும் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்க வாய்ப்புள்ள 3 ஆல்-ரவுண்டர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
Chennai Super Kings : வரும் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்க வாய்ப்புள்ள 3 ஆல்-ரவுண்டர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம். சிஎஸ்கே அதிக வீரர்களை விடுவிக்கும் என எதிர்பார்ப்பு.Kamal Haasan ஐபிஎல் 2026 சீசனை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மினி ஏலம் நடத்தப்பட இருக்கிறது.
இந்தாண்டு மினி ஏலம் டெல்லியில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. மினி ஏலத்தை முன்னிட்டு வீரர்கள் தக்கவைக்கும் பட்டியலை வரும் நவ. 15ஆம் தேதி அன்று அனைத்து அணிகளும் வெளியிட இருக்கின்றன என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.வரும் சனிக்கிழமை அன்று 10 அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்திருக்கிறது?, எந்தெந்த வீரர்களை விடுவிக்கும்?,மினி ஏலத்தில் ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை டார்கெட் செய்யும்?, ஒவ்வொரு அணிக்கும் அதன் பர்ஸில் எவ்வளவு இருப்புத் தொகை இருக்கும்? போன்ற விவரங்கள் தெரிந்துவிடும். அந்த வகையில், கடந்த சீசனில் கடைசி மூன்று இடங்களை பிடித்த அணிகள் முறையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் அதிக வீரர்களை மினி ஏலத்தில் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வீரர்களை விடுவிக்கும் அணிகளுக்கு பர்ஸ் தொகையில் இருப்பு அதிகமாக இருக்கும். அந்த அணிகள் மினி ஏலத்தில் முக்கிய வீரர்களை அதிக தொகைக்கு வாங்க வாய்ப்புள்ளது. எந்த அணி அதிக வீரர்களை விடுவித்து, அதிக தொகையுடன் மினி ஏலத்திற்கு நுழையப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.ஆனால் ஏலத்திற்கு முன்னரே, சிஎஸ்கே அணியின் தேவை என்ன என்பது ஏறத்தாழ அனைவருக்குமே தெரியும். சிஎஸ்கே அணிக்கு நல்ல ஆல்-ரவுண்டர்களின் தேவை அதிகமாக உள்ளது. அது சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக இருந்தாலும் சரி, வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக இருந்தாலும் சரி... அவர்கள் பினிஷர்களாக, பின்வரிசையில் விளையாடுபவர்களாக இருந்தால் கூடுதல் சிறப்பு. அஸ்வின் ஏற்கெனவே ஓய்வுபெற்றுவிட்டார், சாம் கரன் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோரில் ஒருவரை மட்டுமே சிஎஸ்கே தக்கவைக்கும் வாய்ப்புள்ளது. எனவே, இரண்டு ஆல்-ரவுண்டர்களை கண்டைடய வேண்டும் என சிஎஸ்கே திட்டமிடும்.அந்த வகையில், வரும் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்களான கேம்ரூன் கிரீன், மிட்செல் ஓவன் ஆகியோர்தான் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு சிஎஸ்கே உள்பட பல அணிகள் போட்டிப்போடும். ஆனால், அதே நேரத்தில் இவர்கள் இருவரும் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் வீரர்கள் என்பதால் சிஎஸ்கே இவர்களை மட்டுமின்றி இன்னும் சில ஆல்-ரவுண்டர்களையும் உற்றுநோக்கும். இந்நிலையில், வரும் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்க வாய்ப்புள்ள 3 ஆல்-ரவுண்டர்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.ஜிம்பாப்வே வீரரான சிக்கந்தர் ராசா , உலகம் முழுவதும் பல டி20 லீக் தொடர்களில் விளையாடி சிறப்பான பந்துவீச்சு அனுபவத்தை கொண்டுள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரில் பெரியளவு சோபித்ததில்லை. 2023, 2024 சீசன்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இவர் 9 இன்னிங்ஸ் பேட்டிங் செய்து 182 ரன்களையும், 7 இன்னிங்ஸில் 3 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இவரை சிஎஸ்கே விளையாட வைத்தால், பவர்பிளேவில் ஒரு ஓவரை வீச வைக்கலாம். மிடில் மற்றும் டெத் ஓவர்களிலும் பயன்படுத்தலாம். பேட்டிங்கில் நம்பர் 8இல் இறக்கலாம். இவர் குறைந்த தொகையில் கிடைக்க வாய்ப்புள்ளது.மேற்கு இந்திய தீவுகள் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர்களில் ஜேசன் ஹோல்டர் , இந்தாண்டு மினி ஏலத்தில் வருகிறார். 34 வயதான ஹோல்டர் இன்னும் திடமாக விளையாடி வருகிறார். இவர் கடந்த சீசனில் யாராலும் எடுக்கப்படாவிட்டாலும் தற்போது இவர் மீதும் வெளிச்சம் இருக்கிறது. ஐபிஎல் தொடரில் இவர் முதல்முறை விளையாடி அணி, சிஎஸ்கே ஆகும். அதற்கு பின் ஹைதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான், லக்னோ அணிகளில் விளையாடியிருக்கிறார். இவர் 46 பந்துகளில் 53 விக்கெட்டையும், 27 இன்னிங்ஸில் 259 ரன்களையும் ஐபிஎல் தொடரில் எடுத்துள்ளார். பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான இவரையும் சிஎஸ்கே நம்பர் 8இல் களமிறக்கலாம். பினிஷர், டெத் ஓவர் பிரச்னை ஓரளவு தீர்ந்துவிடும்.ஆஸ்திரேலிய அதிரடி வீரரான மேக்ஸ்வெல் தற்போது பார்மிலேயே இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இவருக்கு கடந்த சீசனில் அதிக போட்டிகள் வாய்ப்பளிக்கப்பட்டது, ஆனால் பெரிதாக சோபிக்கவில்லை. அதன் பின் காயம் காரணமாக வெளியேறினார். ஆஸ்திரேலிய அணிக்காகவும் அவர் பெரிதாக சமீபத்தில் சோபிக்கவில்லை. ஐபிஎல் தொடரில் இவர் டெல்லி, மும்பை, பஞ்சாப், ஆர்சிபி அணிகளுக்காக இதுவரை விளையாடி மொத்தம் 135 இன்னிங்ஸில் 2819 ரன்களை குவித்திருக்கிறார். பந்துவீச்சில் 85 இன்னிங்ஸில் 41 விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார். இவரை சிஎஸ்கே நம்பர் 5, நம்பர் 6 இடத்தில் பயன்படுத்தலாம். பினிஷர் பிரச்னை தீரும்.மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் கழட்டிவிடும் 5 பேர்! மீண்டும் முக்கிய வீரரை எடுக்கும் சிஎஸ்கே?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.சம்பளம் கட்! பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஷாக்.. டிசம்பருக்குள் இதை பண்ணிடுங்க!Eps Pension8ஆம் வகுப்பு படித்தால் போதும்.. கைநிறைய சம்பளத்துடன் அரசு வேலை.. மிஸ் பண்ணாதீங்கBison Kaalamaadan
CSK Target In IPL Mini Auction Chennai Super Kings All Rounders Target List Three All Rounders May In Csk Auction Plan CSK IPL 2026 Mini Auction Plan Sikandar Raza Jason Holder Glenn Maxwell Cameron Green Mitchell Owen CSK IPL 2026 IPL 2026 Mini Auction சென்னை சூப்பர் கிங்ஸ் சிஎஸ்கேவின் டார்கெட் வீரர்கள் சிஎஸ்கே டார்கெட் செய்யும் 3 ஆல்ரவுண்டர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் குறிவைக்கும் ஆல்ரவுண்டர்கள் மினி ஏலத்தில் சிஎஸ்கேவின் தேவை என்ன கேம்ரூன் கிரீன் மிட்செல் ஓவன் சிக்கந்தர் ராசா ஜேசன் ஹோல்டர் மிட்செல் ஓவன் சிஎஸ்கே ஐபிஎல் 2026 ஐபிஎல் 2026 மினி ஏலம்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
சிஎஸ்கேவிற்கு திரும்பும் தமிழக வீரர்! அஷ்வினுக்கு நேரடி மாற்றுChennai Super Kings: ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக, 2025ம் ஆண்டு சீசனில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து, CSK அணி பெரும் சரிவை சந்தித்தது.
Read more »
क्या IPL से संन्यास लेंगे एमएस धोनी? CSK ऑफिशियल्स ने कर दिया साफचेन्नई सुपर किंग्स के सीईओ ने पुष्टि की है कि महेंद्र सिंह धोनी आईपीएल 2026 में खेलेंगे। जिसके बाद 44 वर्षीय धोनी के संन्यास की अटकलों पर इससे विराम लग गया है।
Read more »
ஹர்திக் பாண்டியா வேண்டாம்.. இந்திய அணிக்கு இனி இந்த CSK வீரர் போதும்!Abhishek Nayar About Hardik pandya And Shivam Dube: இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இல்லாத குறையை சிவம் துபே தீர்த்து வைத்தார் என முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் பாராட்டி உள்ளார்.
Read more »
IPL 2026: महेंद्र सिंह धोनी खेलेंगे या नहीं? CSK के CEO ने दी बड़ी खबर!IPL 2026 की तैयारियों के बीच, चेन्नई सुपर किंग्स (CSK) के प्रशंसकों के लिए बड़ी खुशखबरी है! CSK के CEO ने पुष्टि की है कि महेंद्र सिंह धोनी आईपीएल 2026 में खेलेंगे। धोनी की वापसी से टीम और प्रशंसकों में उत्साह का माहौल है।
Read more »
சஞ்சு சாம்சனை இழுக்கும் CSK... அப்போ இந்த வீரர் RR போகிறாரா? ஜடேஜா இல்லை!சஞ்சு சாம்சன் - சிஎஸ்கே டிரேடிங் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியிருக்கும் நிலையில், சிஎஸ்கேவின் இந்த வீரர் ராஜஸ்தான் செல்ல அதிக வாய்ப்புள்ளது. ஆனால், அது ஜடேஜா இல்லை...
Read more »
IPL मिनी ऑक्शन 15 दिसंबर को हो सकता है: प्लेयर रिटेंशन की डेडलाइन 15 नवंबर; सैम करन को रिलीज कर सकती है CSKइंडियन प्रीमियर लीग (IPL) 2026 के लिए मिनी ऑक्शन दिसंबर के दूसरे या तीसरे सप्ताह में हो सकता है। क्रिकबज की रिपोर्ट अनुसार, ऑक्शन की संभावित तारीख 13 से 15 दिसंबर रखी गई है। जिसके लिए टूर्नामेंट की 10 टीमों को रिटेंशन के लिए 15IPL mini auction may take place on December 15 retention deadline 15...
Read more »
