வீடு இன்றி சாலையில் பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளனர்.
West Bengal Crime News : வீடு இன்றி சாலையில் பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளனர். இச்சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.நவம்பர் 16 சூரியன் பெயர்ச்சி: மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு எப்படி இருக்கும்? முழு ராசிபலன்மேற்கு வங்கத்தில் மற்றுமொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தேறியுள்ளது. நேற்று முன்தினம் கொல்கத்தா அருகே உள்ள ஹூக்ளி நகரில், பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போலீசார் இச்சம்பவம் குறித்து கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுமி பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் தாரகேஷ்வர் பகுதியில் ரயில்வே ஷெட் ஒன்றில் கொசு வலையின் கீழ் தூங்கிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இச்சமூகத்தினர் வீடுகளின்றி வீதிகளில் தங்குபவர்கள். வறுமையில் வாடும் இவர்கள் இதுபோன்று பல்வேறு வகையில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.சிறுமியின் குடும்பத்தினர் கூறுகையில், கொசுவலையை கிழித்து, குற்றவாளி சிறுமியை கடத்திச் சென்றிருக்கிறார் என்றார்கள். தொடர்ந்து, தரகேஷ்வர் ரயில்வே பகுதி ஒன்றில், அச்சிறுமி ரத்த வெள்ளத்தில் நேற்று மதியம் கண்டெடுத்துள்ளனர். சிறுமியின் அருகே தூங்கிக் கொண்டிருந்த பாட்டிக்கு தெரியாமல் குற்றவாளிகள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி கூறுகையில்,"அவள் என்னுடன்தான் தூங்கிக் கொண்டிருந்தாள். அதிகாலை 4 மணியளவில், யாரோ அவளை தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அவள் எப்போது தூக்கிச் செல்லப்பட்டாள் என்று கூட எனக்குப் தெரியவில்லை. அவளை தூக்கிச் சென்றவர்கள் யார் என்றும் எனக்குத் தெரியவில்லை. அவர்கள் கொசு வலையை வெட்டி தூக்கிச் சென்றுள்ளனர். அவளை ஆடைகள் ஏதுமின்றி கண்டெடுத்தோம்" என்றார். மேலும்,"எங்களின் வீடுகளை அழித்துவிட்டதால், நாங்கள் தெருக்களில்தான் தூங்குகிறோம். நாங்கள் எங்கே போவது? எங்களுக்கு என எந்த வீடும் இல்லை" என கண்ணீர் மல்க பேசினார், சிறுமியின் பாட்டி.பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது ஆபத்தான நிலையில் தாரகேஸ்வர் கிராமின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையை பெற்று வருகிறார். மேலும், இச்சம்பவத்தில் அடையாளம் தெரியாத நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.இருப்பினும், இந்த வழக்கில் போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்யவில்லை என்று மேற்கு வங்கத்தை ஆளும்தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசை, எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக குற்றஞ்சாட்டியிருக்கிறது. இதுகுறித்து மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி அவரது X தளத்தில்,"தர்கேஷ்வரில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், ஆனால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை! பாதிக்கப்பட்ட சிறுமி சந்தன்நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தர்கேஷ்வர் காவல்துறை குற்றத்தை மறைப்பதிலேயே மும்முரமாக உள்ளது. மம்தா பானர்ஜியின் அனைவருக்கும் இலவச ஆட்சியின் உண்மையான முகம் இதுதான். ஒரு குழந்தையின் வாழ்க்கை சிதைந்துள்ளது, ஆனால் காவல்துறை உண்மையை மறைப்பதன் மூலம் மாநிலத்தின் போலி சட்ட ஒழுங்கு பிம்பத்தை பாதுகாக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.மேற்கு வங்கத்தில் சமீப காலங்களில் பல பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்தேறி வரும் நிலையில், அம்மாநிலத்தின் சட்ட ஒழுங்கு கேள்விக்குள்ளாகிறது. இவை ஒருபுறம் இருக்க, வரும் 2026 ஏப்ரல் - மே மாதத்தில் தமிழ்நாட்டைப் போல் மேற்கு வங்கத்திலும் சட்டப்பேரவை தேர்தல் வர இருப்பதால், எதிர்க்கட்சியான பாஜக திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இது கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் மம்தா பானர்ஜிக்கு பெரும் அழுத்தத்தை கொடுக்கும் எனலாம். மேலும் படிக்க | கொல்கத்தா கொடூரம்: பாலியல் வன்கொடுமையை வீடியோ எடுத்தது ஏன்? - குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்மேலும் படிக்க | கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலை வழக்கு! சஞ்சய் ராய்க்கு ஆயுள் சிறை! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.VRS கோரும் மத்திய அரசு ஊழியர்களுக்கான நொட்டீஸ் பீரியட் எவ்வளவு? DoPPW முக்கிய விளக்கம்PM Kisan : விவசாயிகளுக்கு குட் நியூஸ்! இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்SIRடிரம்பின் G-20 புறக்கணிப்பு: தென்னாப்பிரிக்கா மீதான அதிருப்தியும், உலக அரசியல் விளைவுகளும்!
4 Year Old Girl Sexually Harassed In West Bengal West Bengal Sexual Harassment Cases Latest West Bengal Crime News West Bengal Assembly Election 2026 Mamtha Banerjee Crime News Latest Updates 4 Year Old Kidnapped And Sexually Harassed Near K BJP மேற்கு வங்க குற்ற சம்பவங்கள் குற்ற செய்திகள் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை மேற்கு வங்கத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் மேற்கு வங்கத்தில் குற்ற வழக்குள் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 2026 மம்தா பானர்ஜி குற்ற செய்திகள் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
