ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஓபனர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்களை குவித்து அதிரடி
Vaibhav Suryavanshi : ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஓபனர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்களை குவித்து இங்கிலாந்து அணியை மிரள வைத்தார்.இங்கிலாந்து இதுவரை இதில் கோப்பையை வென்றதில்லை.
Astroஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் கடந்த ஜனவரி 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இறுதிப்போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே நகரில் நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டியில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அணி இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரை வென்றதில்லை.இன்றைய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி ஓபனரில் ஒருவரான ஆரோன் ஜார்ஜ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே 53 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். இந்நிலையில், இந்திய அணியின் மற்றொரு அதிரடி ஓபனரான 14 வயதான175 ரன்களை குவித்து இங்கிலாந்து அணியை மிரள வைத்தார். 80 பந்துகளில் 15 பவுண்டரி, 15 சிக்ஸரை பறக்கவிட்டு சூர்யவன்ஷி 175 ரன்களை குவித்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 218.75 ஆகும்.சூர்யவன்ஷி ஆட்டமிழக்கும்போது 25.3 ஓவர்களில் இந்தியக அணி 3 விக்கெட்டை இழந்து 251 ரன்களை எடுத்துள்ளகது. ஒருவேளை இந்திய அணி 50 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்தால் நிச்சயம் 350 - 400 ரன்களை குவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப்போட்டியில் 300 ரன்களே பெரிய அழுத்தத்தை உருவாக்கும் என்ற நிலையில், 350 ரன்களுக்கு மேல் அடிப்பது இங்கிலாந்து அணி வீரர்களுக்கு மன ரீதியான பின்னடைவை ஏற்படுத்தும். இந்திய அணி பந்துவீச்சும் சிறப்பாக இருப்பதால் எவ்வித அழுத்தமும் இன்றி இந்தியா 6வது முறையாக கோப்பையை வெல்லலாம்.மேலும், நடப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி 7 இன்னிங்ஸில் 439 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் தற்போது இங்கிலாந்து வீரர் பென் மேயஸ் 6 இன்னிங்ஸில் 399 ரன்களை மூன்றாவது இடத்தில் உள்ளார். ஒருவேளை 2வது இன்னிங்ஸில் அவர் 41 ரன்களை அடிக்கும்பட்சத்தில் இந்த பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷியை மேயஸ் முந்த வாய்ப்புள்ளது.19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் அதிவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சூர்யவன்ஷி 2வது இடத்திற்கு முன்னேறினார். இன்றைய போட்டியில் 55 பந்துகளில் சதத்தை அடித்து சூர்யவன்ஷி இந்த சாதனையை செய்துள்ளார், ஆஸ்திரேலிய வீரர் வில் மலாஜ்சுக் என்பவர் 51 பந்துகளில் ஜப்பான் அணிக்கு எதிராக சதம் அடித்தே இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் அதிக ரன்களை அடித்தவர்கள் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். இந்த பட்டியலில் உன்முக்த் சந்த் 111 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி 30 சிக்ஸர்களுடன் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த பட்டியில்ல 18 சிக்ஸர்களுடன் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸ் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.மேலும், டி20 உலகக் கோப்பையில் இலங்கை வீரர் விரான் சாமுதிதா 192 ரன்களை குவித்ததே இதுவரை அதிகபட்ச தனிநபர ரன்களாக இருந்து வருகிறது. ஒருவேளை இன்று சூர்யவன்ஷி 18 ரன்களை கூடுதலாக அடித்திருந்தால் இந்த சாதனையும் முறிந்திருக்கும். இத்தொடரை வெல்லும் அணிக்கு ஐசிசி எவ்வித தனி பரிசுத்தொகையை வழங்காது என்றாலும், அடுத்து சீனியர் அணிக்கு விளையாடுவதற்கு இத்தொடர் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். இத்தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே, விஹான் மல்கோத்ரா, ஆரோன் ஜார்ஜ் உள்ளிட்டோர் நிச்சயம் எதிர்கால இந்திய கிரிக்கெட் நட்சத்திரமாக உருவெடுப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.மேலும் படிக்க | IND vs USA: இந்தியா பிளேயிங் 11.. முக்கிய பவுலர் காயம்! சஞ்சு சாம்சனுக்கு இடமிருக்கா?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.Human TraffickingTamilaga Vetrri KazhagamVanathi Srinivasanசிதைந்த பென் ஸ்டோக்ஸின் முகம்.. மருத்துவமனையில் சிகிச்சை! என்ன ஆச்சு.. வைரலாகும் போட்டோ100,200,500 ரூபாய் நோட்டில் இருக்கும் கோடுகள்.. ஏன் தெரியுமா? சுவாரஸ்ய தகவல்
Vaibhav Suryavanshi 175 Runs IND Y Vs ENG Y ICC U19 World Cup 2026 U19 Cricket World Cup 2026 Team India Vaibhav Suryavanshi Batting Against England India Youth Vs England Youth வைபவ் சூர்யவன்ஷி வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் இந்தியா இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் உலகக் கோப்பை
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
தமிழக அரசின் 15 அறிவிப்புகள்: அரசு வேலை தேடுபவர்களுக்கும் விவசாயிகளுக்கும் Good NewsTN Govt Announcements: தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள 15 முக்கிய செய்திகளான ரயில்வே வேலைவாய்ப்பு, அமைச்சரவைக் கூட்டம் மற்றும் விவசாயிகளுக்கான சலுகைகள் குறித்த முழு விவரம்.
Read more »
दिल्ली की ट्रायल कोर्ट में 15 लाख से ज्यादा मामले पेंडिंग, न्याय में देरी पर चिंतादिल्ली की ट्रायल कोर्ट में 1.58 मिलियन से अधिक मामले लंबित हैं, जिससे न्याय मिलने में देरी हो रही है। नेशनल ज्यूडिशियल डेटा ग्रिड की रिपोर्ट में यह जानकारी दी गई है। मामलों के पेंडिंग रहने के कई कारण हैं, जिनमें जजों की कमी, वकीलों की अनुपस्थिति और बुनियादी ढांचे की कमी शामिल हैं। विशेषज्ञों ने समस्या के समाधान के लिए न्यायिक पदों को भरने, कोर्ट स्टाफ की संख्या बढ़ाने और ई-कोर्ट जैसी तकनीक को अपनाने की सिफारिश की है।
Read more »
15 फोर, 15 सिक्स;सूर्यवंशीने फलंदाजीचं वैभव दाखवलं, फायनलला द्विशतक हुकलं पण हा विक्रम केला स्वत:च्या नावे!Vaibhav Suryawanshi Record: आयसीसी अंडर-19 विश्वचषक 2026 च्या अंतिम सामन्यात भारत आणि इंग्लंड यांच्यात सामना पार पडतोय. भारतीय संघाचा कर्णधार आयुषने नाणेफेक जिंकून प्रथम फलंदाजी करण्याचा निर्णय घेतला.भारतीय संघाने सुरुवातीला चांगली सुरुवात करण्याचा प्रयत्न केला, पण लवकरच एक विकेट गमावली.
Read more »
80 गेंद, 175 रन... हरारे में वैभव सूर्यवंशी की आंधी, 15 छक्कों का तूफान, रहम की भीख मांगने लगे अंग्रेजVaibhav Suryavanshi 175 runs 15 sixes u19 world cup score: वैभव सूर्यवंशी ने आईसीसी अंडर-19 वर्ल्ड कप के फाइनल में इंग्लैंड के खिलाफ तबाही मचा दी. उन्होंने हरारे में शुक्रवार (6 फरवरी) को खिताबी मुकाबले में 175 रनों की तूफानी पारी खेली.
Read more »
Vaibhav Suryavanshi Century: 14 वर्षीय वैभव सूर्यवंशी का गजब कारनामा, क्रिकेट के इतिहास में पहली बार हुआ ऐसावैभव सूर्यवंशी किसी भी आईसीसी फाइनल में सबसे बड़ा स्कोर बनाने वाले बल्लेबाज बन गए हैं. उन्होंने 15 चौके और इतने ही छक्कों की मदद से 80 गेंदों में 175 रन की विस्फोटक पारी खेली
Read more »
પાકિસ્તાનની રાજધાની ઈસ્લામાબાદમાં જુમ્માની નમાજ વખતે જોરદાર વિસ્ફોટ, 15 લોકોના મોત, અનેક ઘાયલPakistan Blast: પાકિસ્તાનના ઈસ્લામાબાદ શહેરમાં તલલાઈ વિસ્તારમાં ઈમામ બારગાહ ખદીજત ઉલ કુબરામાં જોરદાર વિસ્ફોટ થયો છે. ધડાકા બાદ અફરાતફરી મચી ગઈ છે. આ બ્લાસ્ટમાં 15 લોકોના મોત થયા હોવાના અહેવાલ છે.
Read more »
