ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா...? இந்த விஷயங்களை கவனிங்க - இல்லனா பெரிய சிக்கல் வரும்

Medical Insurance News

ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா...? இந்த விஷயங்களை கவனிங்க - இல்லனா பெரிய சிக்கல் வரும்
Health InsuranceBasics Of Choosing Health InsuranceBasic Tips To Choose Perfect Health Insurance
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 238 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 158%
  • Publisher: 63%

Health Insurance: மருத்துவ காப்பீட்டை தேர்வு செய்யும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய அடிப்படையான அம்சங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.

Health Insurance : மருத்துவ காப்பீட்டை தேர்வு செய்யும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய அடிப்படையான அம்சங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம். மருத்துவ காப்பீடு உங்களின் எதிர்காலத்தை பாதுகாப்பாக வைக்கும்.Chennai Pink Auto Scheme8th Pay Commissionசெப்டம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: LPG சிலிண்டர், GST, 8வது ஊதியக்குழு.

... முழு லிஸ்ட் இதோ உடல் ஆரோக்கியம் என்பது அனைவருக்குமே முக்கியமான ஒன்றாகும். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் சரி, அதிகம் பணம் சம்பாதித்தாலும் சரி உடல்நலத்தை பேணிக் காப்பது மிக மிக அவசியம். உடலை பார்த்துக்கொள்வது எந்தளவிற்கு அவசியமோ, அந்தளவிற்கு அவசரத்தில் கைக்கொடுக்கும் மருத்துவ காப்பீட்டை வைத்திருப்பதும் மிக மிக அவசியம் எனலாம்.மருத்துவ அவசரம் என்பது உங்களால் கணிக்கவே முடியாத ஒன்று. உங்களுக்கோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவருக்கோ உடல்நல ரீதியாக ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு உங்களால் திடீரென பணம் புரட்ட முடியாமல் கூட போகலாம். அவசர காலத்தில் அவதிப்படாமல் இருக்க இப்போதே மருத்துவ காப்பீட்டை எடுத்துவைத்துக்கொள்வது அவசியம். இதனால்தான், ஏழை எளிய மக்களுக்குவழங்கி வருகிறது. ஒரு சிலருக்கு அவர்கள் வேலைப் பார்க்கும் நிறுவனத்திலேயே மருத்துவ காப்பீட்டுக்கு ஏற்பாடு செய்யப்படும். ஆனால், அது அனைவருக்கும் போதுமானதாக இருக்காது. அப்படியிருக்க சரியான மருத்துவ காப்பீட்டை நீங்கள் தேர்வு செய்வது அவசியம். மருத்துவக் காப்பீட்டுக்கு எக்கச்சக்கமான நிறுவனங்கள் இருக்கின்றன, இதனாலேயே பலரும் குழப்பமடைகிறார்கள். எந்த நிறுவனத்தில் எந்த பாலிசியை தேர்வு செய்யலாம் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.அவசர காலத்தில் மருத்துவ காப்பீடு உதவும்தான், ஆனால் அதற்காக அவசர கதியில் மருத்துவ காப்பீட்டை தேர்வு செய்யக் கூடாது. மிக பொறுமையாக ஒரு பாலிசியை புரிந்துகொண்டு, அதில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்க வேண்டும். உங்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அந்த காப்பீடு உபயோகப்படுமா, நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் அந்த பாலிசியில் வருகிறதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு சிலர் அவசர கதியில் பாலிசி குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளலாம் காப்பீடு போட்டுவிடுவார்கள், ஆனால் பின்னரே அதில் அவர்கள் செய்த தவறை புரிந்துகொள்வார்கள். அப்படியிருக்க மருத்துவ காப்பீட்டை தேர்வு செய்யும்போது இந்த அடிப்படையான விஷயங்களை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். - ஒரு மருத்துவ காப்பீட்டு பாலிசியை பார்க்கிறீர்கள் என்றால், அது மருத்துவ சிகிச்சையின்போது எவ்வளவு தொகையை அளிக்கும் என்பதை முதலில் பார்க்க வேண்டும். குறைந்த விலையில் பிரீமியம் கிடைக்கிறது என்பதற்காக ஒரு பாலிசியை தேர்வு செய்யாதீர்கள். சிகிச்சையின் போது உங்களுக்கு ரூ.3 லட்சம் தேவைப்படலாம், ஆனால் அந்த பாலிசியால் ரூ.1 லட்சம் மட்டுமே காப்பீடாக கிடைக்கும் என்றால் அந்த நேரத்தில் உங்களுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. மிச்சத்தொகையை நீங்கள்தான் புரட்ட வேண்டும். - அதேபோல், நீங்கள் வாங்கும் பாலிசி என்னென்ன நோய்களுக்கு காப்பீடு வழங்கும், என்னென்ன நோய்களுக்கு காப்பீடு வழங்காது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். - மருத்துவ காப்பீட்டில் காத்திருப்பு காலம் என்ற அம்சம் இருக்கும். அதாவது, நீங்கள் பாலிசியை தொடங்கி ஓரிரு ஆண்டுகளுக்கு பிறகே சில நோய்களுக்கு காப்பீடு கிடைக்கும், அதற்கு முன் கிடைக்காது. எனவே இதையும் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். கடைசி நேர அதிர்ச்சியில் இருந்து தப்பித்து முன் தயாரிப்போடு இருக்கலாம். - ஒரே நிறுவனத்தை மட்டும் பார்த்துவிட்டு பாலிசியை வாங்கிவிடாதீர்கள். ஒரு பாலிசியை பார்த்தீர்கள் என்றால் அதேபோல் இருக்கும் இன்னும் 4 நிறுவனங்களின் பாலிசியையும் பாருங்கள். அனைத்து நிறுவனங்களின் பாலிசிகளையும் ஒப்பிட்டு பாருங்கள். உங்களுக்கு எது சரியானது என்பது அப்போதுதான் தெரியும். உங்களால் ஒப்பிட முடியவில்லை என்றால் ஆன்லைனில் அதற்காக பல கருவிகள் உள்ளன, உதாரணத்திற்கு ChatGPT-இல் அனைத்து தகவல்களையும் நீங்கள் கொடுத்தால் அதுவே அவற்றின் சாதக, பாதகங்களை விளக்கிவிடும். - நீங்கள் ஒரு நிறுவனத்தின் பாலிசியை போடுகிறீர்கள் என்றால், உங்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அந்த காப்பீடு பயன்படுமா அல்லது எந்தெந்த மருத்துவமனைகளில் இந்த பாலிசி பயன்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எத்தனை மருத்துவமனைகளுடன் உங்களின் காப்பீட்டு நிறுவனம் தொடர்பில் இருக்கிறது என்பதையும் பாருங்கள். - அதேபோல், அதில் உங்கள் ஊரில் இருக்கும் முன்னணி மருத்துவமனைகளும் இடம்பெற்றிருக்கிறதா என்பதையும் பாருங்கள். - உங்கள் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தின் Claim Settlement Ratio எப்படி இருக்கிறது என்பதை பாருங்கள். அதன்மூலம் எவ்வளவு விரைவில் உங்கள் மருத்துவ சிகிச்சைக்கான காப்பீடு வழங்கப்படும் என்பதை தெரிந்துகொள்ளலாம். இதுமட்டுமின்றி மருத்துவ காப்பீட்டில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் எக்கச்சக்கமாக உள்ளன. இருப்பினும் அடிப்படை விஷயங்களை முதலில் தெரிந்துகொள்வதும் அவசியம். உங்களின் காப்பீடு சார்ந்த ஆலோசகரை அணுகி சரியான மருத்துவ காப்பீட்டை தேர்வு செய்யுங்கள்.மேலும் படிக்க | ஆயுஷ்மான் வே வந்தனா அட்டை பெறுவது எப்படி? தகுதிகள், விண்ணப்பிக்கும் வழிமுறை இங்கேஉடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!நாங்கள் தொடர்ந்து உண்மையையும் அரசியலமைப்பையும் பாதுகாப்போம் -பாஜகவுக்கு ராகுல் காந்தி பதிலடி11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 1500 ரூபாய்! எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? முழு விவரம்SCSS: மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்... மாதம் ரூ.20,500 வருமானம் தரும் அட்டகாசமான திட்டம்விஜய்யுடன் மோதும் பிரபாஸ்.. ஜனநாயகன் vs தி ராஜா சாப்.. எந்த படத்திற்கு வெற்றி?Madhampatty RangarajMadhampatty Rangaraj

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Health Insurance Basics Of Choosing Health Insurance Basic Tips To Choose Perfect Health Insurance How To Choose Health Insurance What Is Health Insurance How Health Insurance Works Is Health Insurance Useful Usage Of Health Insurance Why Health Insurance Is Life Saver மருத்துவ காப்பீடு சரியான மருத்துவ காப்பீட்டை தேர்வு செய்வது எப்படி ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா ஹெல்த் இன்சூரன்ஸ் மருத்துவ காப்பீட்டை தேர்வு செய்யும் முன் கவனிக்க மருத்துவ காப்பீடு ஏன் அவசியம் மருத்துவ காப்பீட்டின் பயன்பாடு என்ன மருத்துவ காப்பீடு ஏன் மிக மிக முக்கியம்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

CSK மினி ஏலத்தில் இந்த சிங்கத்தை எடுத்தால்... 2026இல் கண்டிப்பா கப் அடிக்கலாம்!CSK மினி ஏலத்தில் இந்த சிங்கத்தை எடுத்தால்... 2026இல் கண்டிப்பா கப் அடிக்கலாம்!IPL 2026 Mini Auction: வரும் ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த அதிரடி வீரரை நிச்சயம் எடுக்க வேண்டும்.
Read more »

மக்களே! இன்றிரவு இடி, மின்னல் உறுதி... இந்த 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புமக்களே! இன்றிரவு இடி, மின்னல் உறுதி... இந்த 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புதமிழ்நாட்டின் இந்த 15 மாவட்டங்களில் இன்றிரவு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
Read more »

இனி அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்ப முடியாது... தபால் துறை முக்கிய அறிவிப்புஇனி அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்ப முடியாது... தபால் துறை முக்கிய அறிவிப்புIndia Post Suspends US Parcels: அமெரிக்காவுக்கான அனைத்து வகை தபால் சேவையையும் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதியில் இருந்து தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.
Read more »

இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 24 ஞாயிறு : இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தேடி வரும் நாள்!இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 24 ஞாயிறு : இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தேடி வரும் நாள்!Rasipalan : இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 24 ஞாயிறு மேஷம் முதல் மீனம் வரை தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு! அதுவும் இதற்காகவா?தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு! அதுவும் இதற்காகவா?தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் கலந்து கொண்டு பேசியிருந்தார்.
Read more »

ஆசிய கோப்பை: இந்த 5 வீரர்கள் UAE போக மாட்டார்கள்... பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவுஆசிய கோப்பை: இந்த 5 வீரர்கள் UAE போக மாட்டார்கள்... பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவுAsia Cup 2025: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிரதான ஸ்குவாட் உடன் இந்த 5 வீரர்கள் பயணிக்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.
Read more »



Render Time: 2026-04-02 00:36:42