DMK : தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக திமுக, தன்னுடைய கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
DMK : தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக திமுக, தன்னுடைய கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்புவிருச்சிகத்தில் செவ்வாய் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு டபுள் அதிஷ்டம், அனைத்திலும் சூப்பர் வெற்றிசனியால் இந்த 3 ராசிகளின் தலைவிதி மாறப்போகிறது! யார் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்! DMK : தேர்தல் ஆணையம் SIR என்ற பெயரில் மேற்கொள்ளும் சிறப்பு வாக்காளர் திருத்தத்துக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
இது பாஜக-வின் சதித்திட்டம் என ஏற்கனே குற்றம்சாட்டியிருந்த தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தங்களது கூட்டணி கட்சிகளுடன் இது குறித்து ஆலோசனை நடத்தினார். அதில், தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் சிறப்பு வாக்களார் திருத்தத்தை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும், உரிய காலவகாசம் கொடுத்து முறைப்படி அதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த கூட்டத்துக்குப் பிறகு திமுக தலைமையிலான கூட்டணி கட்சி கொடுத்துள்ள அறிக்கையில், மக்களாட்சி மாண்பைச் சிதைப்பதையும், ஜனநாயகத்தை சின்னாபின்னப் படுத்துவதையும் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்வதே ஒன்றிய பாஜக அரசின் வழக்கமான பழக்கம் ஆகும். அதற்கு ஏற்ப தன்னாட்சி பெற்ற அமைப்புகளையும் தங்களது விருப்பத்துக்கு வளைத்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சர்ச்சைக்குரியதாக மட்டுமல்ல, சந்தேகத்துக்குரியதாக இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான தேர்தல், வெளிப்படையான தேர்தல், நேர்மையான தேர்தல், உண்மையான தேர்தல் நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் ஒரே பணியாகும். ஆனால் சமீபகாலமாக தங்களுக்கு விருப்பமான உத்தரவுகள் மூலமாக சந்தேகத்துக்குரிய தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இதற்கு வெளிப்படையான உதாரணமாக பீகார் தேர்தல் அமைந்துள்ளது. பீகார் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தமானது, உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான சதியாக மட்டுமே அமைந்திருந்தது என்பதைக் கண்டோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நம்பிக்கைக்குரிய தகவல்களின்படி பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள். பின்னர் சில லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மாண்பமை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவையே தேர்தல் ஆணையம் மதிக்கவில்லை. பின்பற்றவில்லை. செயல்படுத்த தயாராக இல்லை. இந்த ஜனநாயக விரோத செயலை செய்ய தூண்டியது ஒன்றிய பாஜக அரசு ஆகும். இந்த நிலையில் SIR என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர், தமிழ்நாட்டுக்கான தேதிகளை அறிவித்துள்ளார். நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதுபோன்ற பணிகளை நடத்துவது என்பது மிகமிகச் சிரமம் ஆகும். வடகிழக்கு பருவமழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் குறித்த இது போன்ற மிகப்பெரிய பணிகளைச் செய்வது சிரமம் ஆகும். நடைமுறை சாத்தியம் இல்லாத காலத்தை தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது. புகைப்படம் ஒட்டித் தர வேண்டும், பழைய வாக்காளர் பட்டியலை இணையத் தளத்தில் பார்த்து இணைக்க வேண்டும் என்று சொல்வது எல்லாம் பெரும்பான்மை வாக்காளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆதார் அட்டையை முழுமையான ஆவணமாக ஏற்க மறுப்பது ஏன்? குடும்ப அடையாள அட்டைகளை முழுமையான ஆவணமாக ஏற்க வேண்டும் என்று நாங்கள் இதுவரை வைத்த கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன்? என திமுக தலைமையிலான கூட்டணி கேள்வி எழுப்பியுள்ளது. வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அதனை அவசர அவசரமாகச் செய்யக் கூடாது. கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் செய்ய வேண்டும். ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போது இதனைச் செய்யத் தொடங்குவது சரியானது அல்ல. முறையானது அல்ல. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம். SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் இதனுள் இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்.பீகாரில் இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்கள் என்று குறிவைத்து இந்த நீக்கம் நடந்தன. பீகாரில் ஒரே தொகுதியில் 80,000 இஸ்லாமியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடந்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் குற்றம்சாட்டினார். இது போன்ற எந்தச் சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது. தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். போராட வேண்டும். இது தமிழ்நாட்டுக்கான பிரச்னை ஆகும். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் இயக்கங்களும் இதனை உன்னிப்பாக கண்காணித்து தடுத்தாக வேண்டும். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2 - ஞாயிறு அன்று காலை 10.00 மணி அளவில், தியாகராய நகரில் உள்ள"ஓட்டல் அகார்டில்" நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அக்கூட்டத்தில் தலைவர்கள் வைக்கும் கோரிக்கைகள், ஆலோசனைகள் அடிப்படையில் நமது அடுத்த கட்ட செயல்பாடுகள் அமையும் என உறுதி அளிக்கிறோம். மக்களாட்சியையும், மக்களின் உரிமைகளையும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் மனதில் வைத்து அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என திமுக கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க | இரவு வெளுக்கப்போகும் மழை.. ஆரஞ்சு அலர்ட்.. இந்த 6 மாவட்ட மக்கள் உஷார்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!airtelTamil naduPrithvi ShawActressபிறந்து 13 நாளான குழந்தை.. ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
M.K. Stalin News Election Commission Tamil Nadu DMK Voter List Revision திமுக அறிக்கை தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் திருத்தம் அனைத்துக்கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக எதிர்ப்பு Tamil Nadu SIR Voter List DMK BJP Conflict Tamil Nadu All-Party Meeting Voter List Controversy SIR 2025 Tamil Nadu Tamil Nadu Elections Voter Rights India Prashant Bhushan Bihar Case
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
अमित शाह ने भाजपा कार्यकर्ताओं से मांगी माफी, जानें आखिर क्या है वजह?Amit shah Tamil Nadu Visit Today Criticizes DMK Govt अमित शाह ने भाजपा कार्यकर्ताओं से मांगी माफी, आखिर क्या रही वजह? देश
Read more »
DMK नेता की पत्नी ने राज्यपाल से डिग्री नहीं ली: बुलाने पर भी इग्नोर किया; तमिलनाडु सरकार और आरएन रवि के बी...Tamil Nadu University Convocation Case; Follow Governor RN Ravi, MK Stalin, DMK Party Dispute Latest News, Reports And Updates On Dainik Bhaskar.
Read more »
Thief Sarpanch: దొంగతనంతో వచ్చే కిక్కేవేరబ్బా.. 15 ఏళ్లుగా పంచాయితీ సర్పంచ్ చోరీలు..!Panchayath Sarpanch Theft: దాదాపు 15 ఏళ్లుగా దొంగతనాలకు పాల్పడుతున్న ఓ లేడీ సర్పంచ్ భాగోతం ఎట్టకేలకు బయటపడింది. తమిళనాడులోని తిరుపత్తూరు నరియంపట్టు సర్పంచ్ భారతి (DMK) గత కొన్నేళ్లుగా దొంగతనాలు చేస్తున్నారు.
Read more »
காலில் விழுந்த பின் கர்ச்சீப் எதுக்கு... பாஜகவுக்கு No Entry ஸ்டாலின் தடலாடி பேச்சுDMK Mupperum Vizha: காலிலேயே விழுந்த பின்னர் கர்ச்சீப் எதுக்கு என்று தான் எல்லோரும் கேட்கிறார்கள் என திமுகவின் முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.
Read more »
Karur Stampede: TVK Chief Vijay Not Named In FIR; BJP Demands CBI Probe - DMK’s Balancing With Tamil Superstar ExplainedKarur Stampede: DMK government is treading carefully in the wake of the tragedy, with state police refraining from naming actor-turned-politician Vijay in the FIR.
Read more »
இறந்தோர் மூலம் அரசியல் செய்கிறது தவெக திமுகிவின் திடீர் அட்டாக்DMK Attacks TVK: இறந்தோரை வைத்து அற்ப அரசியலை தவெக செய்கிறது என்றும் அதிமுக- பாஜக அதற்கு துணை நிற்கிறது என்றும் திமுகவின் ஆர்.எஸ். பாரதி அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Read more »
