உடல்நலக்குறைவால் காலமான ரோபோ சங்கரின் உடலுக்கு, நேற்று இரவு முதலே திரையுலகினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையேரோபோ சங்கரின் கடைசி ஆசை ஒன்று தற்போது நிறைவேறாமல் போனது. அந்த ஆசையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனது வித்தியாசமான நகைச்சுவையால் பிரபலமான நடிகர் ரோபோ சங்கரின் மறைவு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அரசியல்வாதி முதல், திரையுலகில் உள்ள பலரும் அவருக்கும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உடல்நலக்குறைவால் காலமான ரோபோ சங்கரின் உடலுக்கு, நேற்று இரவு முதலே திரையுலகினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் தனுஷ், முதல் ஆளாக நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் விஜய் சேதுபதி, டி. ராஜேந்தர், விஜய் ஆண்டனி, சூரி என பலரும் நேரில் வந்து தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளார். ரோபோ சங்கரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.ரோபோ சங்கர் இரைப்பை குடலில் ரத்தக் கசிவு மற்றும் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில், கடந்த 16 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவருக்கு சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அண்மையில் தனது மகள் திருமணத்தை கோலாகலமாக நடத்தினார் ரோபோ சங்கர். மகள் திருமணம், பேரக் குழந்தை என மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த ரோபோ சங்கர் தற்போது மறைந்துள்ளது, மிகப்பெரிய சோகத்தை தந்துள்ளது. இதற்கிடையே இன்னும் இரண்டு நாளில் ரோபோ ஷங்கர் வீட்டில் விசேஷம் நடக்கவிருந்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி நாளை மறு நாள் பேரனுக்கு காதுகுத்து வைத்திருந்தாராம் நடிகர் ரோபோ சங்கர்.ஆனால் அதற்குள் மரணம் அடைதுள்ளார் ரோபோ சங்கர் நம்மை என கவிஞர் சினேகன் வேதனையுடன் கூறினார். ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவும் சின்னத்திரை நடிகையாவார். அதுமட்டுமின்றி இவர்களது மகள் இந்திரஜா பிகில் படத்தில் விஜயுடன் நடித்திருந்தார். அண்மையில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த ரோபோ சங்கர் தனது மகள் இந்திரஜாவுக்கு திருமணம் செய்துவைத்திருந்தார். இந்திரஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தால் அவரின் குடும்பமே மகிழ்ச்சியுடன் இருந்தனர். தொடர்ந்து தனது பேரனுக்கு நாளை மறுநாள் காதுகுத்து நடத்த தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளை செய்துவந்த சமயத்தில் தான் அவரின் உயிர் பிரிந்தது அவரது குடும்பம் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று குரு நட்சத்திர பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு அனைத்திலும் வெற்றி, நல்ல நாட்கள் ஆரம்பம்இன்றைய ராசி பலன்கள்: செப்டம்பர் 18 வியாழன் - பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கும் ராசிகள்நாளை சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!
Robo Shankar Died Grand Son Kollywood Grand Son Natchathiran Robo Shankar Latest News Robo Shankar Death Robo Shankar Age Robo Shankar Daughter Indraja Shankar Actor Robo Shankar Robo Shankar Death Reason What Happened To Robo Shankar Robo Shankar Death Date Roboshankar Robo Shankar Wife Robo Shankar Family Is Robo Shankar Died Robo Shankar Movies Tamil News Robot Shankar Robo Shankar Dead Robo Shankar Death News Robo Shankar Passed Away Robo Shankar Cause Of Death Robo Shankar Is Died ரோபோ சங்கர் Robo Shankar House ரோபோ ஷங்கர் மரணம் ரோபோ ஷங்கர் உடல்நிலை ரோபோ ஷங்கர் மறைவு
