Tamil Nadu grievance day : ரேஷன் கார்டு, மகளிர் உரிமைத்தொகை முதல் பட்டா வரை விண்ணப்பித்த ஒரே நாளில் தீர்வு வேண்டுமா?
Tamil Nadu grievance day : ரேஷன் கார்டு , மகளிர் உரிமைத்தொகை முதல் பட்டா வரை விண்ணப்பித்த ஒரே நாளில் தீர்வு வேண்டுமா? Tamil Nadu grievance day : ரேஷன் கார்டு , மகளிர் உரிமைத்தொகை முதல் பட்டா வரை விண்ணப்பித்த ஒரே நாளில் தீர்வு வேண்டும் என்பவர்களுக்கான முக்கிய தகவல் இது.
பொதுமக்கள் அரசின் சேவைகளைப் பெற மாத கணக்கில் அலைய வேண்டிய காலம் மலையேறிவிட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு துறைகளை மிக எளிமையாக அணுக முடியும். கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் நடக்கும் மக்கள் குறைதீர் முகாம்களில் நேரடியாக கலந்து கொண்டு ஆட்சியரிடம் நேரடியாக மனு கொடுக்கலாம். ஒருவேளை உங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் நீண்ட நாட்கள் காலம் தாழ்த்தப்பட்டால், உங்கள் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவார். இதனால் சீக்கிரம் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் அல்லது உங்கள் கோரிக்கைக்கான பதில் உடனடியாக கிடைக்கும். அதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் குறைதீர்முகாம்களை பயன்படுத்திக் கொள்ளவும். என்னனென்ன கோரிக்கைகளுக்கு மனு கொடுக்கலாம் என்ற கேள்வி மக்களிடத்தில் இருக்கலாம். எல்லா கோரிக்கைகளுக்கும் இந்த மக்கள் குறைதீர்வு நாள் முகாமில் மனு கொடுக்கலாம். ரேஷன் கார்டு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, நலிந்தோர் நலத்திட்ட உதவிகள் பெறவும் மனுக்களை கொடுக்கலாம். தெருவிளக்கு, தண்ணீர் பிரச்சனை தொடர்பாகவும் மனுக்கள் கொடுக்கலாம். தொகுப்பு வீடு, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட சேவைகளுக்கு மனு கொடுக்கலாம். சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் பிரச்சனை இருந்தாலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், தொழில் கடன் வேண்டுதல், மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வேண்டுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கும் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளிக்கலாம். இந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற குறைதீர்நாள் முகாமில் மக்கள் மேலே சொல்லப்பட்ட திட்டங்கள் மற்றும் பிற கோரிக்கைகளுக்கும் மனு அளித்திருக்கின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அன்றே உத்தரவிட்டுள்ளனர்.OTT releasesKeerthy Suresh
District Collector Monday Camp Ration Card Tamil Nadu Magalir Urimai Thogai Apply TN Patta Online குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரேஷன் கார்டு பட்டா மகளிர் உரிமைத் தொகை தமிழ்நாடு அரசு லேட்டஸ்ட் நியூஸ் Welfare Schemes Tamil Nadu TN Public Grievance Camp Tamil Nadu Government Services TN Collector Office Camp TN Eservices Apply For Patta TN TN Ration Card Status Magalir Urimai Thogai District Office TN Welfare Assistance
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
तमिलनाडु में अगले साल 3 बार होगा TET एग्जाम: क्लास 1 से 8 के सभी टीचर्स देंगे; SC ने कहा था- TET करें या ...TET exam will be held thrice in Tamil Nadu next year after Supreme Court Ruling
Read more »
தீபாவளி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புTamil Nadu Government : தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிக்க விதிக்கப்பட்டுள்ள நேரக்கட்டுப்பாடு குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Read more »
முத்துராமலிங்க தேவர் குருபூஜை : பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகள்Tamil Nadu Govt : முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை? வானிலை மையம் அப்டேட்!Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை சென்னை உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »
பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு! தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்Tamil Nadu Government : திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் பட்டதாரிகள் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
Read more »
திருவிழாக்களில் ராட்சத ராட்டினம் - அரசு வெளியிட்ட முக்கிய தகவல்Tamil Nadu government : திருவிழாக்களில் ராட்சத ராட்டினம் வைப்பதற்கான கட்டுபாடுகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
Read more »
