PPF: பொது வருங்கால வைப்பு நிதி முதலீடு மூலம், வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.49,000 என்ற அளவில் வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறலாம் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
PPF : பொது வருங்கால வைப்பு நிதி முதலீடு மூலம், வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.49,000 என்ற அளவில் வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறலாம் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். PPF திட்டத்தில் செய்யப்படும் முதலீடு கள் கூட்டு வட்டி வருமானத்தை கொடுக்கின்றன.
8th Pay CommissionGuru PeyarchiSIPபொது வருங்கால வைப்பு நிதி என்னும் நீண்ட கால முதலீட்டுத் திட்டம், ஓய்வு காலத்திற்கு தேவையான நிதியை சேமிக்க உதவும் ஒரு நிலையான வட்டி விகித முதலீட்டுத் திட்டமாகும். இதில் ஆண்டுதோறும் 7.1 சதவீத வட்டி கிடைக்கும். இது கூட்டு வட்டி என்பதால், பணம் எளிதில் பன்மடங்காகிறது. இந்த திட்டம் 15 ஆண்டுகள் முதிர்வு காலத்துடன் வருகிறது.அதன் பிறகு 5 ஆண்டுகளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நீட்டிக்கலாம். நீண்ட காலத்திற்கு, இந்தத் திட்டம் வரி இல்லாத ஓய்வூதிய நிதியை உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல், மாதத்திற்கு வரி இல்லாத வருமானத்தையும் பெற இந்த முதலீட்டை பயன்படுத்தப்படலாம்.PPF திட்டத்தின் மூலம் செய்யப்படும் வழக்கமான முதலீட்டின் மூலம் 55 வயதில் ரூ.78,00,000 மதிப்பிடப்பட்ட வரி இல்லாத நிதியையும், வாழ் முழுவதும் மாதம் ரூ.49,000 என்ற அளவிலான வருமானத்தையும் ஈட்ட முடியும். அது எப்படி சாத்தியமாகும் என்பதை இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.கணக்கை ஒரு வங்கி அல்லது தபால் நிலையத்தில் குறைந்தபட்சம் ரூ.500 முதலீட்டில் திறக்கலாம். PFF கணக்கில், ஒரு நிதியாண்டில் அதிகபட்ச வைப்புத்தொகை ரூ. 1.50 லட்சம்.பிபிஎஃப் கணக்கு 15 ஆண்டுகள் முதிர்வு காலத்துடன் வருகிறது. ஆனால் கணக்கு திறக்கப்பட்ட ஆண்டைத் தவிர்த்து, 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு நிதியாண்டிலும் 1 முறை திரும்பப் பெறலாம். திரும்பப் பெறப்படும் தொகை முந்தைய 4வது ஆண்டின் இறுதியில் அல்லது முந்தைய ஆண்டின் இறுதியில், எது குறைவாக இருக்கிறதோ அது வரை உள்ள இருப்பில் 50 சதவீதம் வரை இருக்க வேண்டும்.15 ஆண்டுகள் முதிர்வு காலத்திற்குப் பிறகு, முழு பிபிஎஃப் தொகையையும் திரும்பப் பெறலாம். கணக்கு வைத்திருப்பவர் விரும்பினால், அவர்கள் கணக்கை 5 ஆண்டுகள் என்ற அளவில் நீட்டிக்கலாம். நீட்டிப்பின் போது, உங்கள் நிலை மற்றும் வசதிக்கு ஏற்ப பிபிஎஃப் கணக்கில் முதலீட்டை தொடரலாம் அல்லது தொடராமல் இருக்கலாம். இருப்பினும், இரண்டு சந்தர்ப்பங்களிலும், அவர்கள் தொடர்ந்து வட்டித் தொகையைப் பெறுவார்கள்.வைப்புகள் இல்லாத நீட்டிக்கப்பட்ட கணக்கில், ஒவ்வொரு நிதியாண்டிலும் 1 முறை எடுக்கலாம். அதே போன்று நீட்டிக்கப்பட்ட PPF கணக்கில் வைப்புத்தொகையுடன், ஒவ்வொரு நிதியாண்டிலும் 1 முறை பணம் எடுக்கலாம். இது 5 வருட கால முதிர்வு நேரத்தில் இருப்பு கிரெடிட்டில் அதிகபட்சமாக 60 சதவீத வரம்பிற்கு உட்பட்டது.முதலீட்டாளர் தனது 55 வயதில் PPF திட்டத்தில் ஒரு வழக்கமான முதலீடு எவ்வாறு ரூ.78,00,000 மதிப்பிடப்பட்ட வரி இல்லாத கார்பஸை உருவாக்குகிறது என்பதையும், அடுத்த ஆண்டு முதல் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ரூ.49,000 மதிப்பிடப்பட்ட மாத வருமானத்தை எவ்வாறு பெறலாம் என்பதையும் கணக்கிடுவோம்.முதலீட்டாளர் ஏப்ரல் 1-5 க்கு இடையில் 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ.1,50,000 முதலீட்டைச் செய்யலாம். 15 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.22,50,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.18,18,209 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.40,68,209 ஆகவும் இருக்கும்.முதிர்வு காலத்திற்கு பிறகு PPF கணக்கு வைத்திருப்பவர் தங்கள் கணக்கை தொடர்ச்சியாக 3 முறை நீட்டிக்க வேண்டும் - ஒவ்வொரு தொகுதிக்கும் 5 ஆண்டுகள் என மொத்தம் 15 ஆண்டுகள்.20 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ. 30,00,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.36,58,288 ஆகவும், மதிப்பிடப்பட்ட நிதி ரூ. 66,58,288 ஆகவும் இருக்கும். 25 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ. 37,50,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.65,58,015 ஆகவும், மதிப்பிடப்பட்ட நிதி ரூ. 1,03,08,015 ஆகவும் இருக்கும். 30 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.45,00,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.1,09,50,911 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,54,50,911 ஆகவும் இருக்கும்.அந்த கட்டத்தில், முதலீட்டாளர் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம். அதோடு, முதலீடு செய்வதை நிறுத்தி விட்டு தங்கள் 50 சதவீத PPF கார்பஸை திரும்பப் பெறலாம். மதிப்பிடப்பட்ட திரும்பப் பெறப்பட்ட கார்பஸ் ரூ.77,25,455.5 ஆக இருக்கும். இங்கே, ஒரு நபர் தனது PPF முதலீட்டை 25 வயதில் தொடங்கினால், அவர்கள் 55 வயதில் இந்த தொகையை திரும்பப் பெறலாம். இப்போது, அவர்கள் ரூ.77,25,455.5 கார்பஸை ஒரு வருடத்திற்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தில் வளர அனுமதிக்கலாம். இந்தத் தொகைக்கான வட்டி ரூ.5,48,507.34 ஆக இருக்கும். எனவே, திரட்டப்பட்ட நிதி ரூ.82,739,628.4 ஆக இருக்கும்.சேர்க்கப்பட்ட நிதியிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையை மட்டும் எடுத்தால், ஆண்டுக்கு ரூ.5,87,451.36 திரும்பப் பெறலாம். இது மாதம் ரூ.48,954.28 என்ற வருமானத்திற்கு சமமாக இருக்கும். சுருக்கமாக சொன்னால், முதலீட்டாளர் தனது 56 வயதிலிருந்து ரூ.49,000 என்ற அளவில் வாழ்நாள் முழுவதும் வருமானம் பெறலாம்நீட்டிப்பு காலங்களில் அவர்கள் தங்கள் PPF கணக்கில் பங்களிக்காததால், அவர்கள் தங்கள் வாழ்நாளில் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம் அல்லது இறந்த பிறகு அதை நாமினி அலல்து வாரிசுக்கு செல்லும்.மேலும் படிக்க | Mutual Fund:ரூ.3,00,000 முதலீடு போதும்... ஓய்வுக்கு பின் மாதம் ரூ.52,000 வருமானம் கிடைக்கும் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!காலை முதல் இரவு வரை! பின்டஸ்காக விராட் கோலி செய்வது என்ன தெரியுமா?9th grade student pregnantதிடீரென திருப்பதி கோவிலுக்கு நடிகை சமந்தா விசிட்.. யாருடன் தெரியுமா?Natural Hair Remedies
Public Provident Fund How To Earn Monthly Income Rs 49000 In Old Age Public Provident Fund Ppf Account Investment Tips In Tamil Investment Tips Ppf Maturity Calculator How To Earn More Than Rs 1 Crore Through Public P Ppf Public Provident Fund Ppf Account Ppf Amount Ineterst Investment Money Personal Finance பிபிஎஃப் பொது வருங்கால வைப்பு நிதி முதலீடு வட்டி வட்டி வருமானம் வருமானம் கோடீஸ்வரர் Business News In Tamil டெபாசிட் தொகை Deposit டெபாசிட் பிபிஎஃப் கணக்கு கோடீஸ்வரர்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
SIP Mutual Fund: மாதம் ரூ.1000 முதலீட்டில் ரூ.5 கோடி கார்பஸ்... ரூ.2 லட்சம் மாத வருமானம்பரஸ்பர நிதியம் என்னும் SIP முதலீடுகள் சாமான்யர்களுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் பணம் காய்ச்சி மரமாக உள்ளது என்றால் மிகையில்லை.
Read more »
SIP vs PPF: மாதம் ரூ.5500 முதலீட்டை... 15 ஆண்டுகளில் ரூ.25 லட்சமாக பெருக்க உதவும் திட்டம் எது?SIP மற்றும் PPF இரண்டும் இயற்கையில் வேறுபட்டவை. ஆனால் ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கைக்கு கணிசமான கார்பஸை உருவாக்க இரண்டுமே உதவுகின்றன.
Read more »
Top-Up SIP: மாதம் ரூ.5000 முதலீடு ரூ.1 கோடியாக பெருக எத்தனை காலம் தேவை?முறையான முதலீட்டுத் திட்டம் என்னும் எஸ்ஐபி மூலம் ரூ.100, ரூ.250 அல்லது ரூ.500 போன்ற சிறிய தொகையுடன் தொடங்கலாம் என்பதால் சாமான்யர்களுக்கான சிறந்த திட்டம் இது.
Read more »
NPS முதலீடு... 55வது வயதில் கையில் ரூ.3.7 கோடி... மாதா மாதம் ரூ.85,000 பென்ஷனும் உண்டுதேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு தன்னார்வ அடிப்படையிலான நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும்.
Read more »
EPFO Higher Pension: உயர் ஓய்வூதியத்தை மறுக்க இயலாது... நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்புஉயர் ஓய்வூதிய பெற கூட்டு விண்ணப்பங்களை அளித்துள்ள EPFO உறுப்பினர்கள், உயர் ஓய்வூதிய சலுகைகளைப் பெற கேரள உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு உதவும்.
Read more »
SIP Mutual Fund: மாதம் ரூ.10,000 போதும்... 50 வயதில் ரூ.2 கோடி சேர்க்க உதவும் மேஜிக் ஃபார்முலாSIP Investment Tips: SIP மூலம் முயூச்சுவல் ஃபண்டுகளின் மூலம் ஆயிரங்களை எளிதில் கோடிகளாக்கலாம் என்பதால், இதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. SIP முதலீடு சந்தை நிலையைப் பொறுத்தது என்றாலும், நீண்ட கால முதலீட்டில் நல்ல வருமானம் கொடுப்பதே இதற்கு காரணம்.
Read more »
