பெண்களுக்கு மாதம் ரூ.1200 தரும் மத்திய அரசு! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

இந்திரா காந்தி விதவை ஓய்வூதியம் News

பெண்களுக்கு மாதம் ரூ.1200 தரும் மத்திய அரசு! யார் யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்வறுமைக் கோடுசமூக பாதுகாப்பு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 127 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 148%
  • Publisher: 63%

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் வறுமையில் வாழும் விதவைகளுக்கு முக்கிய ஆதரவாக இருக்கிறது. யார் யார் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் வறுமையில் வாழும் விதவைகளுக்கு முக்கிய ஆதரவாக இருக்கிறது. யார் யார் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.பெண்களுக்கு மாதம் ரூ.1,200 உதவி தொகை.

heroinesWeight Loss TipsMost Wickets Bowlersஇந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம் கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் விதவைகளுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலத்திலும் நடைமுறையில் இருக்கும் இந்த திட்டம், தமிழ்நாட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 40 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள விதவைகளுக்கு மாதாந்திரரூ.1,200 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மத்திய அரசு 40 வயது முதல் 79 வயது வரை உள்ள விதவைகளுக்கு ரூ.300, 80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ. 500 உதவித்தொகை வழங்குகிறது. மீதமுள்ள தொகையை தமிழ்நாடு அரசு மானியமாக வழங்குகிறது. உதவித்தொகை தவிர, பொங்கல் மற்றும் தீபாவளியின் போது இலவச புடவை மற்றும் அங்கன்வாடி மையங்களில் இலவச அரிசி வழங்கப்படுகிறது.இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் விதவையாக இருக்க வேண்டும் மற்றும் மறுமணம் செய்திருக்கக் கூடாது. அவர்களின் வயது 40 முதல் 79 ஆக இருக்க வேண்டும். குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்படும் வேறு எந்த திட்டத்திலும் பயன் பெற கூடாது. ஆண்டு வருமானம் ஒரு லட்சத்தை விட குறைவாக இருக்க வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள இ சேவை மையத்தை அணுகலாம்.விண்ணப்பதாரர் பயோமெட்ரிக் சரிபார்ப்பு செயல்முறையை முடித்த பின்பு, விண்ணப்பங்கள் உள்ளூர் பஞ்சாயத்து அல்லது மாநகராட்சி அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். பிறகு ஒரு மாதத்திற்குள் சரிபார்க்கப்பட்டு நேரடியாக வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படும். தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசை விட கூடுதல் பங்களிப்பை வழங்குகிறது. 2023-24 நிதியாண்டில் தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.5,561.31 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 34,90,969 பயனாளிகள் உதவி பெறுகின்றனர். மேலும் படிக்க | ரூ.50 கோடியுடன் ஓட்டம்பிடித்த 'கேரள தம்பதி' - சிட்பண்டில் மக்களை சிக்கவைத்தது எப்படி? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Natural hair treatmentஅமீர் கானுடன் விஷ்ணு விஷாலுக்கு அப்படி என்ன உறவு? க்ளோஸ் ஆக காரணம் இதுதான்!திருவள்ளூர் ரயில் தீ விபத்து எதிரொலி.. 8 முக்கிய ரயில்கள் ரத்து! முழு விவரம்ஜூலை 14ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!Amazon Prime Day 2025

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம் வறுமைக் கோடு சமூக பாதுகாப்பு மகளிர் மேம்பாடு இலவச புடவை அங்கன்வாடி அரிசி மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு பொது சேவை மையம் SAMBAL செயலி BPL குடும்பங்கள் விதவை உதவி தமிழ்நாடு செய்திகள் Indira Gandhi Widow Pension Tamil Nadu Pension Scheme Below Poverty Line Social Security Women Empowerment Free Saree Anganwadi Rice MK Stalin Tamil Nadu Government Common Service Center SAMBAL App BPL Families Widow Assistance Tamil Nadu News

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Atal Pension Yojana: ரூ.10,000 மாத ஓய்வூதியம் தரும் அட்டகாசமான அரசு திட்டம்Atal Pension Yojana: ரூ.10,000 மாத ஓய்வூதியம் தரும் அட்டகாசமான அரசு திட்டம்APY Latest News: வயோதிகத்தில் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு பல வித திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒரு முக்கிய திட்டம்தான் அடல் ஓய்வூதியத் திட்டம்.
Read more »

PM Mudra Yojana: சொந்த தொழில் தொடங்க ரூ.20 லட்சம் கடன் தரும் அரசு, பெறுவது எப்படி?PM Mudra Yojana: சொந்த தொழில் தொடங்க ரூ.20 லட்சம் கடன் தரும் அரசு, பெறுவது எப்படி?PM Mudra Loan: உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) மூலம் கடன் பெற விரும்பினால், அதற்கான செயல்முறையை பற்றியும், இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் எவ்வளவு கடன் பெறலாம் என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Read more »

சோஷியல் மீடியாவில் வீடியோ போட்டால் ரூ.3 லட்சம் பரிசு கொடுக்கும் மத்திய அரசுசோஷியல் மீடியாவில் வீடியோ போட்டால் ரூ.3 லட்சம் பரிசு கொடுக்கும் மத்திய அரசுCentral Govt : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி குறித்து ரீல்ஸ், யூடியூப் வீடியோ, குறும்படம் எடுப்பவர்களுக்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் வரையிலான பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.
Read more »

குடும்ப தலைவியாக இல்லாத பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா?குடும்ப தலைவியாக இல்லாத பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா?அடுத்த மாதம் அதாவது ஜூலை 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Read more »

இளைஞர்களுக்கான அசத்தல் திட்டம்! ரூ.10 லட்சம் தரும் மத்திய அரசு!இளைஞர்களுக்கான அசத்தல் திட்டம்! ரூ.10 லட்சம் தரும் மத்திய அரசு!Pradhan Mantri Mudra Loan: இளைஞர்களை வருங்கால தொழில் முனைவோராக மாற்ற மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது. எப்படி பயன்பெறலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

பணத்தை தண்ணி போல் செலவு செய்யும் ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?பணத்தை தண்ணி போல் செலவு செய்யும் ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?பணத்தை தண்ணி போல் செலவு செய்யும் ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?
Read more »



Render Time: 2026-04-02 21:03:39