TAMCO: தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட சுய உதவிக் குழுக்களின் ஒவ்வொரு உறுப்பினருக்கு ரூ.1.50 லட்சம் வரை கடன் அளிக்கிறது. இது யார் யாருக்கு கிடைக்கும், எப்படி விண்ணப்பிப்பது, தேவையான ஆவணங்களை இங்கு காணலாம்.
TAMCO : தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட சுய உதவிக் குழுக்களின் ஒவ்வொரு உறுப்பினருக்கு ரூ.1.50 லட்சம் வரை கடன் அளிக்கிறது. இது யார் யாருக்கு கிடைக்கும், எப்படி விண்ணப்பிப்பது, தேவையான ஆவணங்களை இங்கு காணலாம். Self Help Group Loan : தமிழ்நாடு அரசு சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் சூழலில், சிறுபான்மையினர் அடங்கிய சுய உதவிக் குழுக்களுக்கு சில கடன் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சுய உதவி குழுக்களுக்கான சிறுகடன்களை வழங்கி வருகிறது. சிறுபான்மையின பெண்கள், ஆண்கள் சுயஉதவிக் குழுக்களை அமைத்து, தனித்தனியே அல்லது சேர்ந்தோ சிறு வியாராம்/சிறு தொழில் செய்து தங்களது குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் வகையில், காய்கனி கடை, பலகாரக்கடை, கைத்தொழில்கள், சிறுவணிகம், பூ வியாபாரம், மீன் வியாபாரம் போன்றவற்றை நடத்த கடன் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற, விண்ணப்பதாரர் சிறுபான்மை சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும். குழுவில் குறைந்தது 6 மாதம் சேமித்தல், கடன் அளித்தல் பணியில் தொடர்ந்து நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும். குழுவில் 60% சிறுபான்மையினராக அவசியம் இருத்தல் வேண்டும். எஞ்சியுள்ள 40% பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர்/ ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/ இதர வகுப்பினர் இடம்பெறலாம். குழுவில் அதிகபட்சமாக 20 உறுப்பினர்களும், குறைந்தபட்ம் 10 உறுப்பினர்களும் இருத்தல் வேண்டும். சிறுபான்மையினர் குழுக்களில் பெண்கள் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரகம்/ மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் / நகர கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களுக்கு சென்று விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பத்தாரர் மதத்திற்கான சான்று வைத்திருக்க வேண்டும். சாதிச் சான்றிதழ்/ பள்ளி மாற்றுச் சான்றிதழ் /சிறுபான்மையினர் மதம் குறித்து வழிப்பாட்டு ஸ்தலத்தால் அளிக்கப்ப்ட சான்றி இவற்றில் ஏதேனும் ஒன்றில் நகல் இருத்தல் வேண்டும். வருமானச் சான்றிதழின் நகல், ஆதார் அட்டை நகல், இதர குழு உறுப்பினரின் இணைப்புகள் ஆகியவற்றையும் சமர்பிக்க வேண்டும். இதில் இரண்டு திட்டங்கள் உள்ளனர். முதல் திட்டத்தின் அடிப்படையில் குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் கடன் வழங்கப்டும். ஒரு ஆண்டுக்கு 7% வட்டி விகிதம் ஆகும். அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்குள் தவணை தொகை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும். இவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இரண்டாவது திட்டத்தில், குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் கடன் வழங்கப்டும். ஒரு ஆண்டுக்கு வட்டி விகிதம் ஆண்டுகளுக்கு 10%, பெண்களுக்கு 8% ஆகும். அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்குள் தவணை தொகை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும். இவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். Breathing ProblemIncome Tax
Tamil Nadu Government Self Help Group Loan TAMCO Self Help Group Loan Up To 1 Lakhs 50 Thous Tamil Nadu Government TAMCO How To Apply For TAMCO Loan What Are The Qualification Needed To Apply TAMCO What Are The Documents Needed To Apply TAMCO Loan Self Help Group Loan Tamil Nadu Minorities Economic Development Corpor டாம்கோ டாம்கோ சுய உதவிக் குழு கடன் ஒன்றரை லட்சம் வரை கடன் கொடுக்கும் டாம்கோ தமிழ்நாடு அரசு தமிழக அரசு தமிழ்நாடு அரசு சுய உதவிக் குழு கடன் திட்டம் டாம்கோ கடன் திட்டம் டாம்கோ கடன் திட்டம் யார் யாருக்கு டாம்கோ கடன் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி MK Stalin முக ஸ்டாலின்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மூத்த குடிமக்களுக்கு அற்புதமான அரசு திட்டம்: ரிஸ்க் எடுக்காமல் ரூ.12 லட்சம் வருமானம்Senior Citizens Savings Scheme: இந்தத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து, வெறும் வட்டி மூலம் மட்டுமே மூலம் ரூ. 12,00,000 வரை சம்பாதிக்கலாம். இந்த தொகையை பெறுவது எப்படி என இங்கே காணலாம்.
Read more »
சொந்த தொழில் செய்ய ரூ.30 லட்சம் கடன் கொடுக்கும் தமிழ்நாடு அரசு - யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்Tamil Nadu government : தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சொந்த தொழில் செய்ய 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். யார் விண்ணப்பிக்கலாம், என்ன தகுதிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
சொந்த தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கான தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!!Kalaignar Kaivinai thittam : கலைஞர் கைவினைத் திட்டம் நன்மைகள், அதற்கான தகுதிகள், எப்படி விண்ணப்பிப்பது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
படித்த இளைஞர்களுக்கு ரூ.15 லட்சம் வரை மானியத்துடன் கடன் உதவி! எப்படி விண்ணப்பிப்பது?புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முனைவோரை ஆதரிக்கவும், இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.
Read more »
செல்வமகள் சேமிப்பு திட்டம்... ரூ. 12,500 மாத முதலீட்டில்... ரூ.70 லட்சம் கார்பஸ்சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டம்.
Read more »
பொறியியல் கலந்தாய்வு, துணை கலந்தாய்வு குறித்து தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்புபொறியியல் கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வு குறித்து தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Read more »
