Bird flu : பறவைக் காய்ச்சல் பரவுவதையொட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு 12 முன்னெச்சரிக்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் : தமிழ்நாட்டு மக்களுக்கு 12 முக்கிய எச்சரிக்கைகள் - மாவட்ட ஆட்சியர் வெளியீடுBird flu : பறவைக் காய்ச்சல் பரவுவதையொட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு 12 முன்னெச்சரிக்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
Kalaignar Magalir Urimai Thogaiபட்ஜெட் விலையில் AC! சட்டு புட்டுன்னு வாங்கிடுங்க, மிஸ் பண்ணிடாதீங்க Bird flu : தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளா மாநிலம் கோட்டையம் மாவட்டத்தில் காடை மற்றும் கோழிகளிலும், ஆழப்புலா மாவட்டத்தில் கோழி மற்றும் வாத்துகளிலும் மற்றும் தமிழ்நாடு சென்னை அடையாறில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடாந்து கரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய விளக்கம் ஒன்றையும், முன்னெச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை.பறவைக் காய்ச்சல் நோய் என்பது பறவை இனங்களை தாக்கும் ஒரு வைரல் தொற்று நோய். இந்த நோய் ஆங்கிலத்தில் Avian Influcnza மற்றும் Bird Flu என அழைக்கப்படுகிறது. இந்நோய் கோழி, வாத்து, வான்கோழி, நீர் பறவைகள் மற்றும் வன பறவைகள் ஆகியவற்றை முக்கியமாக தாக்கும். பறவைக் காய்ச்சல் வைரஸ் கிருமிகள் பல வகைகள் இருந்தாலும், H5N1 என்ற வகை வைரஸ் கிருமி அதிகம் வீரியம் வாய்ந்தது. நோய் பாதித்த பண்ணைகளில் இறந்த கோழிகள், கோழிக்கழிவுகள், பண்ணை உபகரணங்கள் மற்றும் கோழி தீவனம் மூலமாக இந்நோய் பரவுகிறது. இந்நோய்க்கு சிகிச்சை எதுவும் இல்லை. நோய் வராமல் தடுக்க நோய் தடுப்பு முறைகளையும், உயிர் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டும். கால்நடை பராமாரிப்புத்துறையின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகள் மற்றும் புறக்கடைக்கோழிகளில் நேரில் பார்வையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பறவைக் காய்ச்சல் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க கரூர் மாவட்ட கோழிப்பண்ணையாளர்கள் கீழ்க்கண்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 1. கேரளாவில் இருந்து வாத்து, கோழிகள், கோழிக்குஞ்சுகள், முட்டை, கோழி தீவனம், தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்கக் கூடாது. 2. கடந்த 1 மாதத்திற்குள்ளாக கேரளாவில் இருந்து குஞ்சு பொறிப்பதற்கான முட்டைகள், வாத்துகள் மற்றும் கோழிகள் ஏதேனும் வாங்கப்பட்டிருந்தால் அவற்றை கண்டறிந்து அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 3. கோழிப்பண்ணைகளுக்குள் செல்பவர்களும், வெளியே வருபவர்களும் கிருமி நாசினியால் கால்களை சுத்தம் செய்த பின்னரே செல்ல வேண்டும். 4. கோழிப்பண்ணையினுள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி மருந்து தெளித்த பின்னரே அனுமதிக்க வேண்டும். 5. கோழிப்பண்ணையில் அசாதாரண இறப்பு ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை பராமாரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 6. பண்ணையாளார்கள் வேறு பண்ணைகள் மற்றும் சரணாலயங்களுக்கு செல்வதையும் மற்றும் தங்கள் பண்ணைக்குள் பார்வையாளார்களை அனுமதிப்பதையும் தவிர்க்க வேண்டும் 7. பிற மாநிலத்திற்கு முட்டைகளை எடுத்து செல்வதற்கு கண்டிப்பாக காகித அட்டை பெட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேற்படி காகித அட்டைகளை எக்காரணத்தை கொண்டும் திரும்ப எடுத்து வரக்கூடாது. 8. கோழிப்பண்ணைக்குள் இதர கோழிகள் அல்லது வனப்பறவைகள் நுழைவதை அறவே தடுக்க வேண்டும். கொக்கு, நாரை போன்ற நீர்ப்பறவைகள் நுழைந்து விடாமல் தடுக்கும் வகையில் பண்ணை வளாகத்திற்குள் நீர் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 9. கோழிகள், வாத்துகள் மற்றும் வான்கோழிகள் போன்ற பல்வேறு வகை பறவையினங்களை ஒரே பண்ணணையில் வைத்து பராமாpப்பதை தவிர்க்க வேண்டும். 10. பறவைகளின் எச்சம் உள்ள இடங்களில் சிறுவர்களை விளையாட விட வேண்டாம். அவ்விடங்களில் காலணிகள் அணியாமல் நடக்க வேண்டாம்.12. சமையலறை மற்றும் இறைச்சிக் கூடத்தில் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். மேற்காணும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பறவைக் காய்ச்சல் நோயிலிருந்து பாதுகாத்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் படிக்க | பறவைக் காய்ச்சல் எதிரொலி... Half Boil சாப்பிடலாமா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மனைவியை ரூ.1000க்கு விற்ற கணவன்... வெறிச்செயலில் ஈடுபட்ட 2 நண்பர்கள் - ஷாக் சம்பவம்இந்திய அணியின் மற்றொரு வீரருக்கும் காயம்.. பயிற்சியின்போது அதிர்ச்சி! இன்றைய போட்டியில் விளையாடுவாரா?தவெக கூட்டத்தில் இளைஞர் மயங்கி விழுந்து பலி.. வெயிலின் தாக்கம் காரணமா?PM Kisan 22வது தவணை: தந்தை, மகன் இருவரும் தவணைத் தொகையை பெற முடியுமா? விதி என்ன?Kalaignar Magalir Urimai ThogaiZimababwe
Tamil Nadu Government H5N1 Virus Prevention Avian Influenza Safety Tips பறவைக் காய்ச்சல் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் Karur District Collector Bird Flu Advisory Poultry Farming Bio-Security TN How Bird Flu Spreads Bird Flu Symptoms Tamil கோழிப் பண்ணைகளுக்கு முன்னெச்சரிக்கைகள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Silver Price Update: টাট্টু ঘোড়ার মতো ছুটছে রুপো, কয়েক ঘণ্টায় বাড়ল ১২০০০! এখনই কি বিনিয়োগের সেরা সময়? বিশ্লেষকরা বলছেন...silver Price Update and it becomes costlier by 12 thousand in quick time
Read more »
बोर्ड परीक्षाओं को लेकर गुजरात सरकार अलर्ट, छात्रों के लिए शांतिपूर्ण-तनावमुक्त माहौल बनाने के दिए निर्देशबोर्ड परीक्षाओं को लेकर गुजरात सरकार अलर्ट, छात्रों के लिए शांतिपूर्ण-तनावमुक्त माहौल बनाने के दिए निर्देश Gujarat Govt Ensures Smooth Conduct of Class 10 & 12 Board Exams
Read more »
गाजियाबाद के लोनी में मेट्रो विस्तार के लिए सर्वे की शुरुआत, शिव विहार से मंडोला विहार तक होगी कनेक्टिविटीगाजियाबाद के लोनी क्षेत्र में शिव विहार से मंडोला विहार तक मेट्रो विस्तार की योजना पर कार्य शुरू हो गया है। जीडीए ने 12.
Read more »
फ्रांस भारत में ही बनाएगा 90 राफेल जेट: 4 अंतरिक्ष यात्रियों का क्रू ISS रवाना होगा; 13 फरवरी के करेंट अफेय...Current Affairs 12 February NASA Crew 12 Mission to be Launched Today
Read more »
மாசி 1, வெள்ளிக்கிழமை: இன்றைய ராசிபலன் - யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Today Rasi Palan: 12 ராசிகளின் பலன்கள் குறித்து.
Read more »
IND vs NAM: अंपायर और कप्तान गेरहार्ड इरासमस के बीच गजब विवाद, डेड बॉल को लेकर हुई जमकर बहस, जानें पूरा मामलाभारत और नामीबिया के बीच बीते 12 फरवरी को आईसीसी टी20 वर्ल्ड कप 2026 का ग्रुप स्टेज मुकाबला खेला गया। इस मैच में कप्तान गेरहार्ड इरासमस और अंपायर के बीच बहस हुई।
Read more »
