நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானாவை விடுவிக்க சிஎஸ்கே முடிவெடுத்துள்ளதாக தகவல்
CSK Matheesha Pathirana : ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு, தனது நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா வை விடுவிக்க சிஎஸ்கே முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பின்னணியை இங்கு காணலாம். IPL 2026 CSK Mini Auction Plan: ஐபிஎல் மினி ஏலத்தில் முக்கிய வீரர்கள் ஒரு சிலரே இருப்பார்கள்.
அவர்களுக்கு பெரிய டிமாண்ட் இருக்கும். அவர்கள் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளது. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மெகா ஏலத்தில் பெரிய வீரர்களை எடுக்க முக்கிய பிளானை வகுத்திருக்கலாம். இந்நிலையில், பதிரானா விடுவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐபிஎல் 2026 மினி ஏலத்தை முன்னிட்டு, 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் விவரங்களை இன்று வெளியிடும். இதன்மூலம், ஒவ்வொரு அணிகளின் பர்ஸ் தொகை மற்றும் மினி ஏலத்திற்கான அவர்களின் பிளான் ஆகியவையும் இன்றே தெரியவரும். அந்த வகையில், சிஎஸ்கே அணி பல வீரர்களை விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் 10வது இடத்தில் நிறைவு செய்ததாலும், கடந்த 2 சீசன்களாக பிளே ஆப் வராததாலும் சிஎஸ்கே அணி நிர்வாகம் பெரும் அதிருப்தியில் இருக்கிறது.இதனால், அணியை கட்டமைக்கும் பொருட்டு பல மாற்றங்களுக்கு சிஎஸ்கே உள்ளாகி வருகிறது. டிரேட் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜடேஜா மற்றும் சாம் கரனை கொடுத்து, அந்த அணியில் இருந்து சஞ்சு சாம்சனை பெற்றிருக்கிறது. இதனால், ஓபனிங் ஸ்பாட் மற்றும் அடுத்த விக்கெட் கீப்பர் பேட்டர் பிரச்னையும் தீரும்.ஜடேஜாவை ரிலீஸ் செய்ததால் சிஎஸ்கேவில் ஃபினிஷருக்கான தேவை அதிகமாக உள்ளது. மேலும், இந்திய சுழற்பந்துவீச்சாளரும் தேவை என்ற சூழல் உள்ளது. இதனால், கேம்ரூன் கிரீன், மிட்செல் ஓவன் உள்ளிட்ட பல முக்கிய வீரர்களை மினி ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே திட்டமிடும். முக்கிய வீரர்களை எடுக்க வேண்டும் என்றால் பர்ஸில் அதிக தொகை இருக்க வேண்டும். எனவே, சிஎஸ்கே இன்று எக்கச்சக்க வீரர்களை விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அஸ்வின் ஓய்வு பெற்றது ஒருபுறம் இருக்க, டெவோன் கான்வே , ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன் ஆகியோரை சிஎஸ்கே விடுவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், சுமார் ரூ.30 கோடிக்கும் மேல் பர்ஸ் தொகையுடன் சிஎஸ்கே மினி ஏலத்திற்குச் செல்லும். ஆனால், கேகேஆர் அணி வெங்கடேஷ் ஐயர், குயின்டன் டி காக், அன்ரிச் நார்ட்ஜே , மொயின் அலி உள்ளிட்ட வீரர்களை விடுவித்து ரூ.35 கோடி - ரூ.40 கோடியுடன் வரலாம். இதனால், கேம்ரூன் கிரீன் உள்ளிட்ட வீரர்களை எடுப்பதில் சிஎஸ்கேவுக்கு சிக்கல் ஏற்படலாம். இந்நிலையில், நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானாவை சிஎஸ்கே அணி மினி ஏலத்திற்கு விடுவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பதிரானாவை சிஎஸ்கே கடந்தாண்டு ரூ.13 கோடிக்கு தக்கவைத்தது. இன்று வரை பதிரானா விடுவிப்பது குறித்த எவ்வித தகவலோ வெளியாகாத நிலையில், தற்போது Cricbuzz இதுகுறித்து தகவல் அளித்துள்ளது. தற்போது மதீஷா பதிரானாவை விடுவித்தால் சிஎஸ்கேவின் பர்ஸ் தொகை ரூ.40 கோடிக்கும் மேல் கிடைக்கும். இதனால், பெரிய வீரர்களை எளிமையாக எடுக்கலாம். பெரிய வீரர்களை எடுத்துவிட்டு, பின்னர் வேண்டுமானால் பதிரானாவை கூட மினி ஏலத்தில் குறைந்த தொகையில் எடுத்துக்கொள்ளலாம். சிஎஸ்கேவில் நாதன் எல்லிஸ் இருப்பதால் பதிரானாவின் தேவையும் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. horoscopeஇன்னும் 15 நாட்களில் வக்ர நிவர்த்தி அடையும் சனி: 3 ராசிகளுக்கு ராஜயோகம், அளவில்லா அதிர்ஷ்டம்
CSK Releases Matheesha Pathirana Chennai Super Kings CSK IPL 2026 Mini Auction CSK Huge Purse Amount IPL 2026 How Can CSK Pick Cameron Green In Mini Auction CSK Purse Amount CSK Releasing Players List CSK Retaining Players List IPL Retentions IPL Releases IPL News Latest CSK News Latest IPL News மதீஷா பதிரானா பதிரானாவை கழட்டிவிடும் சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ் சிஎஸ்கே ஐபிஎல் 2026 மினி ஏலம் சிஎஸ்கே அதிக பர்ஸ் தொகை சிஎஸ்கே ஏலத்தில் கேம்ரூன் கிரீனை எடுக்க பெரிய பிள சிஎஸ்கே தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் சிஎஸ்கே விடுவிக்கும் வீரர்களின் பட்டியல் சிஎஸ்கே செய்திகள் மதீஷா பதிரானாவை கழட்டிவிடுவது ஏன்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
CSK எடுக்கும் முக்கிய முடிவுகள் - மினி ஏலத்தில் எவ்வளவு தொகை கையில் இருக்கும்?Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு பல முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது. இதன்மூலம், மினி ஏலத்திற்கு எவ்வளவு பர்ஸ் தொகையுடன் சிஎஸ்கே செல்லும் என்பதை இங்கு காணலாம்.
Read more »
CSK में शामिल हुए संजू सैमसन? रवींद्र जडेजा और सैम कुरेन पर भी हुआ फैसला, रिपोर्ट्स में बड़ा दावाIPL 2026 सीजन के लिए आज सभी 10 टीमें अपने रिटेन किए गए क्रिकेटर्स की लिस्ट जारी करेंगी, उससे पहले ही एक बड़ी रिपोर्ट सामने आ रही है. दावा किया जा रहा है कि चेन्नई सुपर किंग्स और राजस्थान रॉयल्स ने अपने बड़े खिलाड़ियों की ट्रेड डील को अंतिम रूप दे दिया है.
Read more »
Sanju Samson Joins CSK: ദൈവത്തിന്റെ സ്വന്തം നാട്ടിൽ നിന്ന് സിംഹത്തിന്റെ മടയിലേക്ക്; സഞ്ജു ഇനി തലയുടെ മഞ്ഞപ്പടയ്ക്കൊപ്പംജഡേജ, സാം കറൻ എന്നിവരെ രാജസ്ഥാന് കൈമാറിക്കൊണ്ടാണ് ചെന്നൈ സൂപ്പർ കിംഗ്സ് സഞ്ജുവിനെ ടീമിലേക്ക് കൊണ്ടുവന്നത്.
Read more »
IPL 2026 रिटेंशन्स: संजू सैमसन CSK में, जडेजा की 'घर वापसी', बड़े ट्रेडों की पूरी लिस्टIPL 2026 रिटेंशन्स की हलचल शुरू हो गई है, जिसमें चेन्नई सुपर किंग्स (CSK) ने संजू सैमसन को शामिल किया है, जबकि रवींद्र जडेजा राजस्थान रॉयल्स में वापस आ गए हैं। इस बड़े ट्रेड के अलावा, कई अन्य खिलाड़ियों को भी विभिन्न टीमों ने ट्रेड किया है, जिससे IPL में एक नया रोमांच पैदा हो गया है। इस खबर में सभी प्रमुख ट्रेडों और खिलाड़ियों के बारे में जानकारी दी गई है, साथ ही रिटेंशन्स की पूरी लिस्ट भी प्रदान की गई है।
Read more »
रवींद्र जडेजा को CSK ने क्यों छोड़ा, संजू सैमसन को क्यों खरीदा? ये है अंदर की असली कहानीचेन्नई सुपर किंग्स (CSK) ने रवींद्र जडेजा को अपनी टीम से रिलीज क्यों किया और संजू सैमसन को उनकी जगह क्यों चुना? इसके पीछे क्या वजह रही, इस पूरे मसले पर CSK के MD काशी विश्वनाथन ने वजह बताई.
Read more »
Why CSK Traded Jadeja: हमें यह मुश्किल फैसला लेना पड़ा ...रविंद्र जडेजा को चेन्नई सुपर किंग्स से बाहर करने ...Why CSK Traded Away Jadeja: चेन्नई सुपर किंग्स की तरफ से खेलने वाले स्टार ऑलराउंडर रविंद्र जडेजा और सैम करन अब राजस्थान रॉयल्स के लिए आईपीएल में खेलने उतरेंगे जबकि राजस्थान रॉयल्स के पूर्व कप्तान संजू सैमसन चेन्नई सुपर किंग्स के लिए खेलेंगे. CSK के MD कासी विश्वनाथन ने इसे सबसे कठिन फैसला बताया.
Read more »
