Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய இருக்கும் 2025-26 பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு என்னென்ன அறிவிப்புகள், திட்டங்கள் கொண்டுவரப்படலாம் என்பதை இங்கு காணலாம்.
Tamil Nadu Budget 2025 : தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய இருக்கும் 2025-26 பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு என்னென்ன அறிவிப்புகள், திட்டங்கள் கொண்டுவரப்படலாம் என்பதை இங்கு காணலாம்.வேளாண் பட்ஜெட் நாளை மறுதினம் தாக்கல் செய்யப்படும்.
குழந்தைகள் சாப்பிட்ட உடனே தூங்க வைத்தால் இந்த பிரச்சனை ஏற்படும்..மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள்!முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 2025-26 நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசால் நாளை தாக்கல் செய்யப்படும். சட்டப்பேரவையில் நாளைய தினம் பொது பட்ஜெட்டும், நாளை மறுதினம் விவசாய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.அடுத்தாண்டு சட்டப்பேரவை நடைபெற இருப்பதாலும், அடுத்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியிட இயலாது என்பதாலும் இந்த பட்ஜெட்டிலேயே பல கவர்ச்சிகர அறிவிப்புகள், புதிய திட்டங்கள் ஆகியவற்றை அறிவிக்க திமுக அரசு திட்டமிட்டிருக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். பட்ஜெட்டை முன்னிட்டு மத்திய அரசு போல், தமிழ்நாடு அரசும் முதல்முறையாக தற்போதுThe Economic Survey of Tamil Nadu 2024-25 reaffirms the state’s leadership in economic and social progress, outpacing India and other states. With a GSDP of ₹27.22 lakh crore, Tamil Nadu contributes 9.21% of India’s GDP despite having just 6% of the population. The per capita…அந்த வகையில், பலரும் எதிர்பார்க்காத புதிய திட்டங்கள் மட்டுமின்றி 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது, தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதிகளில் தற்போதுவரை நிறைவேற்றப்படாத அறிவிப்புகள், திட்டங்களை இந்த பட்ஜெட்டின் மூலம் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு அதன் பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு என்னென்ன அறிவிப்புகள், திட்டங்கள் கொண்டுவரப்படலாம் உள்ளிட்ட எதிர்பார்ப்புகளையும், கணிப்புகளையும் இங்கு காணலாம்.பெண்கள் இந்த பட்ஜெட்டில் அதிகம் எதிர்பார்க்கும் விஷயமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உயர்த்தப்படுமா, இல்லையா என்பதாகவே உள்ளது. இந்தாண்டு பொங்கல் பரிசாக ரூ.1000 தராதது சற்று அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், உரிமைத்தொகையை அதிகரிப்பது பெண்களுக்கு சற்று நிம்மதியளிக்கலாம். அதேபோல், இந்த திட்டத்தில் இன்னும் பல பயனாளர்களை சேர்க்கவும் தமிழ்நாடு அரசு வழிவகை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு வேறு சில அறிவிப்புகளும் வரலாம் என கூறப்படுகிறது.சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.100 மானியமாக வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வகையில், இதுவரை சிலிண்டர் மானியம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாத நிலையில், இந்த பட்ஜெட்டில் இதனை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.March 13, 2025 அதுமட்டுமின்றி, மின்சார கட்டணம் தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு, வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை மாதம் ஒருமுறை என மாற்றுவோம் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வகையில், தற்போது நடுத்தர வர்க்கத்தினருக்கு நிம்மதியளிக்க இதுகுறித்த அறிவிப்பும் வரலாம்.சிறு, குறு தொழில்களுக்கான தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவித்தது. தொழிற்பேட்டைகளை அமைக்க விரைந்து இடங்களை தேர்வு செய்து, அவற்றை அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர். குறுந்தொழில்களுக்கு முதலீட்டு மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொழிலாளர்களுக்கான விடுதியை அமைக்க தமிழ்நாடு அரசு முன்னெடுப்புகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறையினருக்கு மின்சார கட்டணத்தில் சலுகை, சூரிய ஒளி மின்சார பயன்பாட்டிற்கு சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் உள்ளன.பள்ளிக்கல்வித்துறை நிச்சயம் இந்தாண்டு பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவத்தை பெறுகிறது. காரணம், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய ரூ.2,500 கோடியை விடுவிக்காமல் இருப்பதால் மாநில அரசு இந்தாண்டு பள்ளிக்கல்வித்துறைக்கு எந்தளவிற்கு நிதியை ஒதுக்கும், என்னென்ன அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்ப்பு இருக்கிறது.அந்த வகையில், இந்தாண்டு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.50,000 கோடி அளவில் முதல்முறையாக ஒதுக்கீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022-23 நிதியாண்டில் ரூ.36,895 கோடி, 2023-24 நிதியாண்டில் ரூ.40,299 கோடி, 2024-25 நிதியாண்டில் ரூ.44,042 கோடி பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம், புதிய ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அறிவிப்புகள் வரலாம் என கூறப்படுகிறது.தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறைக்கு கடந்த 2022-23 நிதியாண்டில் ரூ.5 ஆயிரத்து 668 கோடி; 2023-24 நிதியாண்டில் 6,966; 2024-25 - ரூ. 8 ஆயிரத்து 211 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில், 2025-26 நிதியாண்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து துறை ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருவோம் என திமுக கடந்த தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. 4 ஆண்டுகளாக அதற்கு எவ்வித அறிவிப்பும் இல்லாத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அந்த குழு அறிக்கை தாக்கல் செய்ய கால தாமதமாகும் என கூறும் அரசு ஊழியர்கள், இந்த பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகாவிட்டால், அதன் பின் அறிவிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும் என்கின்றனர். மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதால், இதற்கு தீர்வளிக்க அரசு பட்ஜெட்டில் ஏதாவது அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!குட் பேட் அக்லி-க்கு பின் அஜித் கைக்கோர்க்கும் இயக்குநர்! இதுவரை 5 படங்கள்தான் எடுத்துள்ளார்-யார் தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2025: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் கிடைக்குமா?Kidney Health65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகை.. 30 நிமிடங்கள் இலவசம்!அரசு ஊழியர்களுக்கு ஷாக்!! இம்முறை 7 ஆண்டுகளில் மிகக்குறைந்த டிஏ ஹைக்? எவ்வளவு தெரியுமா?Weight Loss Tips
TN Budget 2025 New Scheme Announcements In TN Budget TN Budget Expectation TN Budget Predictions MK Stalin Thangam Thennarasu Tamil Nadu Budget Latest News Updates Latest Thangam Thennarasu TN Economic Survey TN Government DMK Government LPG 100 Rupees Subsidy One Month Electricity School Education Department Higher Education Department Old Pension Scheme தமிழ்நாடு பட்ஜெட் 2025 பள்ளிக்கல்வித்துறை உயர்கல்வித்துறை பட்ஜெட்டில் பெண்களுக்கான அறிவிப்பு பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசு திமுக அரசு எல்பிஜி 100 ரூபாய் மானியம் தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டம் முக ஸ்டாலின் தமிழ்நாடு பட்ஜெட் கணிப்புகள் தமிழ்நாடு பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இன்றைய ராசிபலன் பிப்ரவரி 16 ஞாயிற்றுக்கிழமை மேஷம் முதல் மீனம் வரைமேஷம் முதல் மீனம் வரை ராசிகளுக்கு இன்றைய ராசிபலனை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
சிறு குறு தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கிரெடிட் கார்டு.. மத்திய அரசு அறிவிப்புUdyam Registration Process: வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சிறு குறு தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.
Read more »
LIVE தமிழ்நாடு பட்ஜெட் குறித்து ஆலோசனை! போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோLIVE தமிழ்நாடு பட்ஜெட் குறித்து ஆலோசனை! போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோ - இன்றைய முக்கிய செய்திகள்!
Read more »
கொடைக்கானல் : வாகனங்களுக்கு இன்று முதல் புதிய விதிமுறை - சுற்றுலா பயணிகள் உஷார்..!Kodaikanal | கொடைக்கானல் சுற்றுலா செல்லும் வாகனங்களுக்காக புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
Black Pepper : கருப்பு மிளகு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 15 நன்மைகள்..!Black pepper | கருப்பு மிளகு சாப்பிடுவதால் உடல் எடையை குறைப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை என 15க்கும் மேற்பட்ட ஆரோக்கிய நன்மைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
மார்ச் 1 இன்று முதல் புதிய விதிமுறைகள் : எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு முதல் EPFO வரைMarch 1 new rules : மார்ச் 1 ஆம் தேதியான இன்று முதல் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு முதல் EPFO வரை நடைமுறைக்கு வந்த புதிய விதிமுறைகள்.
Read more »
