Major Changes From January 1 2025: ஜனவரி 2025 முதல் ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Major Changes From January 1 2025 : ஜனவரி 2025 முதல் ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். ஓய்வூதியம் பெறுவதில் மாற்றங்கள்.Kalaignar Magalir Urimai Thogaiசிஎஸ்கேவிற்கு பெரும் பின்னடைவு! டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஐபிஎல் 2025ல் இல்லை? இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது.
பொதுவாகவே புதிய மாதம் தொடங்கும் போது பல புதிய விதிகள் அமலுக்கு வருவது வழக்கம். புதிய ஆண்டின் துவக்கம் இன்னும் விசேஷமானது. 2025 புத்தாண்டிலும் பல புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இவற்றின் தாக்கம் கண்டிப்பாக அன்றாட வாழ்வில் இருக்கும். எல்பிஜி சிலிண்டர் விலை, கார் விலைகள், ஓய்வூதிய விதிகள், அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், UPI 123Pay விதிகள் மற்றும் எஃப்டி விதிகள் ஆகியவை இதில் அடங்கும்.1. LPG Cylinder Price: எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் எல்பிஜி விலையை மதிப்பாய்வு செய்கின்றன. இருப்பினும், கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லை. அதே நேரத்தில் வர்த்தக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 73.58 டாலராக இருப்பதால், ஜனவரி தொடக்கத்தில் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.புதிய ஆண்டில் கார் வாங்குவதற்கு அதிக பணம் செலவழிக்க வெண்டி வரலாம். ஜனவரி 1, 2025 முதல், Maruti Suzuki, Hyundai, Mahindra, Honda, Mercedes-Benz, Audi மற்றும் BMW போன்ற முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாகனங்களின் விலையை 3% வரை உயர்த்தும். உற்பத்திச் செலவு அதிகரிப்பே இதற்குக் காரணம் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆகையால், கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், இனி அதற்காக அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும்.புத்தாண்டு நிம்மதி அளிக்கும் வகையில் அமையும். ஜனவரி 1, 2025 முதல், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதியம் திரும்பப் பெறுவதற்கான விதிகளை எளிதாக்கியுள்ளது. இப்போது ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தை நாட்டில் உள்ள எந்த வங்கியிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக அவர்களுக்கு கூடுதல் சரிபார்ப்பு எதுவும் தேவையிருக்காது. இந்த வசதி ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும். மேலும் படிக்க | SIP Calculator: மாதம் ரூ.3,000 முதலீட்டில் ரூ.3 கோடி கார்பஸ்.... மியூசுவல் ஃபண்ட் ஒரு பணம் காய்க்கும் மரம்அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் விதிகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும். புதிய விதிகளின்படி, பிரைம் வீடியோவை ஒரு பிரைம் கணக்கிலிருந்து இரண்டு டிவிகளில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய முடியும். யாராவது மூன்றாவது டிவியில் பிரைம் வீடியோவைப் பார்க்க விரும்பினால், அவர் கூடுதல் சந்தா எடுக்க வேண்டும். முன்னர் பிரைம் உறுப்பினர்கள் ஒரு கணக்கிலிருந்து ஐந்து சாதனங்களில் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யலாம்.NBFC -கள் மற்றும் HFC -களுக்கான நிலையான வைப்பு தொடர்பான விதிகளை RBI மாற்றியுள்ளது. புதிய விதிகள் ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும். இந்த மாற்றங்களின் கீழ், டெபாசிட்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான சில விதிமுறைகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களிடமிருந்து டெபாசிட்களை எடுத்துக்கொள்வது, லிக்விட் அசெட்டின் ஒரு பகுதியை பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் வைப்புகளை காப்பீடு செய்வது போன்ற மாற்றங்கள் இதில் அடங்கும்.ஃபீச்சர் போன் பயனர்களுக்காக இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய UPI 123Pay சேவையில் பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த சேவையின் கீழ் அதிகபட்சமாக ரூ.5,000 வரை பரிவர்த்தனை செய்ய வரம்பு இருந்தது. ஆனால் இப்போது இந்த வரம்பு ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!IND Vs AusWhite Hair ProblemSIP Calculator: மாதம் ரூ.3,000 முதலீட்டில் ரூ.3 கோடி கார்பஸ்.... மியூசுவல் ஃபண்ட் ஒரு பணம் காய்க்கும் மரம்சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்த 3 பௌலர்கள் ஸ்குவாடில் முக்கியம்... அசுர பலமாகும் இந்திய அணி!மூத்த குடிமக்களுக்கு வட்டியை அள்ளிக் கொடுக்கும் SBI அம்ரித் விருஷ்டி FD... முழு விபரம் இதோFlikpartIND vs AUS 4th Test: மெல்போர்ன் டெஸ்ட் போட்டி தொடங்கும் நேரம், இலவசமாக பார்ப்பது எப்படி?
Big Changes From January 1 LPG Cylinder Price Major Changes From January 1 2025 Major Changes From January 1 ஜனவரி 1 முதல் முக்கிய மாற்றங்கள் கேஸ் சிலிண்டர் ஜனவரி 2025 ஜனவரி January January 2025 January 1 2025 LPG Cylinder Price எல்பிஜி சிலிண்டர் விலை Car Prices கார் விலை உயர்வு EPFO Pension Withdrawal ஓய்வூதியம் இபிஎஃப்ஓ ஓய்வூதியம் ஓய்வூதியம் பெறுவதில் மாற்றங்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு EPFO Amazon Prime Membership Amazon Prime அமேசான் பிரைம் Fixed Deposit Rules UPI 123 Pay Business News In Tamil
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
எல்பிஜி சிலிண்டர் முதல் கிரெடிட் கார்ட் கட்டணம் வரை! இன்று முதல் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்!December 1 Important Changes: டிசம்பர் 1 இன்று முதல் இந்தியாவில் சில விதிகளில் பல முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு முதல் LPG சிலிண்டர் விலை வரை மாற்றங்கள் இருக்கலாம்.
Read more »
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. பெண்களுக்கு மாதம் ரூ.7000 நிதியுதவி! புதிய திட்டம்Good News For Women: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை மூன்று ஆண்டுகள் கிடைக்கும்.
Read more »
2025ம் ஆண்டில் ஜியோ கொண்டு வந்துள்ள அசத்தல் ரீசார்ஜ் திட்டங்கள்!ஜியோ நிறுவனம் 2025ம் ஆண்டுக்கான ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. அதிவேக 5G இணைப்பு முதல் பல்வேறு OTT நிறுவனங்களின் அணுகல் வரை பயனர்கள் பெற முடியும்.
Read more »
ஓய்வூதியதாரர்களுக்கு புதிய அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் பீல் பண்ணுவீங்க!Pensioners News In Tamil: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான முக்கிய அறிவிப்பு!
Read more »
தமிழகம் திரும்பிய சத்குரு..! கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை பிரம்மாண்ட வரவேற்புSadhguru | அமெரிக்கா சென்று தமிழகம் திரும்பிய சத்குருவை கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை திரண்டு அயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்றனர்.
Read more »
ஜனவரி 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மெகா அகவிலைப்படி உயர்வு, இதோ விவரம்7th Pay commission: முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் நிர்ணயிக்கப்படுகின்றன.
Read more »
