Red Alert For Chennai: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வரும் அக். 16ஆம் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
Red Alert For Chennai : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வரும் அக். 16ஆம் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.சென்னையில் அடுத்த 3 நாட்களில் 47 செ.மீ. மழை பெய்யக்கூடும்.
நவராத்திரியில் சரஸ்வதிபூஜை ஆயுதபூஜை போன்ற வழிபாடுகள் இந்த நவீன யுகத்தில் அவசியமா?வரும் வாரம் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்! 8 ராசிகளுக்கு கவனம் தேவை! புரட்டாசி கடைசி வார பலன்கள்!ஐப்பசி மாத ராசிபலன்! சூரியனின் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்! தீபாவளி அதிரடிக்கு ரெடியா?சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வரும் அக். 16ஆம் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. சென்னையில் அடுத்த 3 நாட்களில் 47 செ.மீ. மழை பெய்யக்கூடும் எனவும் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் கணித்துள்ளார். நாளை 4.5 செமீ, நாளை மறுநாள் 26.5 செமீ, புதன்கிழமை 15 செமீ அளவிற்கும் மழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.மற்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,"தமிழக உள் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும்" என குறிப்பிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகும் நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், வரும் அக்.15 - 16ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், வரும் நாள்களில் எந்தெந்தப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என்பதையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக் கூடும். மேலும் இன்று தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நாளை பெய்யக் கூடும். அதேபோல் நாளை விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நாளை மறுதினம் பெய்யக்கூடும். அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க | 17000 கோடி பட்ஜெட்டில் சென்னை டூ பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே, மாஸ் பிளான் - இனி சிட்டா பறக்கலாம் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை அக். 16ஆம் தேதி பெய்யக் கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அக். 16ஆம் தேதி இந்த நான்கு மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை அக். 17ஆம் தேதி பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!17000 கோடி பட்ஜெட்டில் சென்னை டூ பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே, மாஸ் பிளான் - இனி சிட்டா பறக்கலாம்BCCIகேப்டனான சிறிது நாட்களிலேயே சூர்யகுமார் யாதவ் செய்த சாதனை!4 ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு வாரம் ஓஹோன்னு இருக்கும்! உங்க ராசி என்ன? வாராந்திர ராசிபலன்...AR RahmanJio Finance AppKorean glass skin
Red Alert For Chennai In October 16 Chennai RMC Chennai RMC Warning Red Alert For Kancheepuram Red Alert For Tiruvallur Red Alert For Chengalpattu Chennai Regional Meteorological Centre TN Rain Updates Tamilnadu Rain Updates Rain Alert For Chennai Tamilnadu Rain Tamilnadu Weather Updates Chennai Weather Update சென்னைக்கு ரெட் அலர்ட் வரும் அக்டோபர் 16ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை மையம் கனமழை வார்னிங் காஞ்சிபுரத்திற்கு ரெட் அலர்ட் திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் செங்கல்பட்டுக்கு ரெட் அலர்ட் சென்னை மழை தமிழ்நாடு மழை நிலவரம் சென்னை வானிலை நிலவரம்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மக்களே கொஞ்சம் கவனம்! புதிய புயல்.. இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைWeather News In Tamil: இன்று முதல் படிப்படியாக தமிழ்நாடு முழுவதுமாகவே பரவலாக மழை அதிகரிக்கும்.
Read more »
எச்சரிக்கை... இந்த பிரச்சனைகள் இருந்தா வாழைப்பழம் பக்கம் போகாதீங்க...Banana Side Effects: வாழைப்பழம் சுவை மிகுந்த பழம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகவும் விளங்குகிறது. என்றாலும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்.
Read more »
இன்று இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டம்.. 4 ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை!Today Horoscope Lucky Zodiac Signs: இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »
இன்று கனமழை காரணமாக Red Alert... பள்ளி கல்லூரி விடுமுறை! ரயில், விமானம் ரத்துWeather Report in In Tamil: இன்று டெல்லி உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை
Read more »
எச்சரிக்கை... இந்த செயலி உங்கள் போனில் இருந்தால் உடனே நீக்கிடுங்கடிஜிட்டல் யுகத்தில், நமது பல அண்றாட பணிகள் எளிதாகி விட்டது என்றாலும், ஆன்லைன் மோசடி சமப்வங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது.
Read more »
வடகிழக்கு பருவமழை.. நாமக்கல், திருச்சிக்கு ஆரஞ்சு அலெர்ட்Heavy Rain alert, Tamilnadu : வட கிழக்குபருவமழை வலுவடைந்து வரும் நிலையில், 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »
