கௌரி கிஷன் தொடர்பான சர்ச்சைக்கு திரையுலகை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட யூடியூபர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கௌரி கிஷன் தொடர்பான சர்ச்சைக்கு திரையுலகை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட யூடியூபர் வருத்தம் தெரிவித்துள்ளார்.ஒரே நாளில் வைரலான நடிகை கௌரி கிஷன் ! இவர் யார் தெரியுமா?இவ்வளவு கம்மியாவா? தங்கத்தை குறைவான விலையில் வாங்கலாம்.
. எங்கெல்லாம் தெரியுமா?கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? சினிமா உலகில், நடிகைகள் மீதான உருவ கேலி மற்றும் கண்ணியமற்ற கேள்விகள் மீண்டும் ஒருமுறை பெரும் விவாத பொருளாகியுள்ளது. 96 படப்புகழ், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனக்கு நேர்ந்த அவமதிப்புக்கு எதிராக குரல் எழுப்ப, அவருக்கு ஆதரவாக திரையுலகமே திரண்டுள்ளது. சமீபத்தில், கௌரி கிஷன் நடித்துள்ள 'அதர்ஸ்' என்ற புதிய திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, மூத்த பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்ளும் ஆர்.எஸ். கார்த்திக் என்பவர், படத்தின் இயக்குநரிடம்,"நடிகையின் உயரம் மற்றும் எடை என்ன?" என்று சம்பந்தமில்லாத ஒரு கேள்வியை எழுப்பினார்.இந்த கேள்வியால் அதிர்ச்சியடைந்த கௌரி கிஷன், உடனடியாக குறுக்கிட்டு,"எனது எடைக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம்? இதே போன்ற கேள்விகளை நீங்கள் நடிகர்களிடம் கேட்பீர்களா?" என்று காரசாரமாக பதிலடி கொடுத்தார். மேலும், இந்த கண்ணியமற்ற கேள்விக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கௌரி கிஷன் வலியுறுத்தினார். ஆனால், அந்த யூடியூபரோ,"நான் கேட்டதில் தவறில்லை. கோபமாக பேசிய நடிகை தான் மன்னிப்பு கேட்க வேண்டும்," என்று கூறி மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.கௌரி கிஷனின் இந்த துணிச்சலான செயலுக்கு, திரையுலகை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று நடிகை கௌரி கிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்,"இந்த வார தொடக்கத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, எனக்கும் ஒரு YouTube வீடியோ பதிவருக்கும் இடையே ஒரு கருத்துப் பரிமாற்றம் நடந்தது, அது எதிர்பாராத விதமாக பதட்டமாக மாறியது. கலைஞர்களுக்கும் ஊடகங்களுக்கும் இடையே நாம் ஊக்குவிக்க விரும்பும் உறவை பற்றி கூட்டாகச் சிந்திக்க, அதன் பின்னணியில் உள்ள பரந்த பிரச்சினையை ஒப்புக்கொள்வது முக்கியம் என்று நான் நம்புகிறேன். எனக்கு கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது எதிர்பாராதது, மிகப்பெரியது மற்றும் பணிவானது. உங்கள் அறிக்கைகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம், அம்மா சங்கம் , தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவற்றிற்கு நன்றி. பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மற்றும் உங்கள் அசைக்க முடியாத ஆதரவிற்கு பொதுமக்களுக்கு நன்றி. எனது சமகாலத்தவர்கள், சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களை அணுகி ஒற்றுமையுடன் நின்ற தொழில்துறையில் உள்ள அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்து இருந்தார். பலதரத்தில் இருந்து எதிர்ப்பு வந்ததன் பின்னணியாக யூடியூபர் கார்த்திக் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,"கடந்த 2, 3 நாட்களாக மன உளைச்சலுடன் உள்ளேன், காரணம் கௌரி கிஷன் நிகழ்வு தான். நான் ஒரு விதத்தில் கேள்வி கேட்டேன். Body shaming பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் கேட்கவில்லை. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. ஒரு ஜாலியான கேள்வியாக தான் அப்படி கேட்டேன். இந்த கேள்வியால் அவரது மனம் பாதிக்கப்பட்டு இருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இதற்கு பின்னால் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை.மேலும் படிக்க | கௌரி கிஷன் நடித்துள்ள Others படம் எப்படியுள்ளது? திரை விமர்சனம் இதோ! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Ration CardAjith KumarWPL மெகா ஏலம்: 5 அணிகளும் தக்கவைத்த, கழட்டிவிட்ட வீராங்கனைகள் யார் யார்?2026 டி20 உலகக் கோப்பை: சுப்மன் கில் விளையாட மாட்டார்? இதுதான் காரணமாம்?சிறிய காயம் பெரிய துயரம் – சிலம்பாட்டுப் பதக்க வீராங்கனை தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்
RS Karthik Youtuber Controversy Gouri Kishan Press Meet Incident Tamil Film Press Meet Weight Question RS Karthik Refuses Apology Women Actors Body Shaming Tamil Cinema Gouri Kishan Response Journalist Question Tamil Media Ethics Body Shaming Youtuber Vs Actress Gouri Kishan Gouri Kishan Weight Question Outrage Chennai Press Club Condemns RS Karthik Tamil Cinema Sexism Press Meet Actor Gouri Kishan Stands Up Body Shaming Media Accountability Tamil Film Industry Gouri Kishan RS Karthik Viral Video கௌரி கிஷன் ஆர்.எஸ். கார்த்திக் யூடியூபர் சர்ச்சை கௌரி கிஷன் பத்திரிகையாளர் சந்திப்பு தமிழ் பட பத்திரிகையாளர் சந்திப்பு எடை கேள்வி கார்த்திக் மன்னிப்பு தமிழ் சினிமாவில் மகளிர் கௌரி கிஷன் பதில் தமிழ் ஊடக நெறிமுறை யூடியூபர் Vs நடிகை கௌரி கிஷன் கௌரி கிஷன் எடை கேள்வி சென்னை ப்ரெஸ் கிளப் கார்த்திக் கண்டனம் தமிழ் சினிமாவில் பெண்ணிய ஒழுக்கம் நடிகை கௌரி கிஷன் பதில்
